Share

Nov 26, 2017

ஆச்சார்ய தேவோ பவ


பழனியில் ரைஸ் ஆயில் ஏஜன்சி எடுத்திருந்த போது ரயில்வே ஃபீடர் ரோட்டில் இருந்த மாடர்ன் ஹோம் ஹோட்டலுக்கு நான் எண்ணெய் சப்ளை செய்த வகையில் மறு வாரம் கலெக்சன் விஷயமாக போய் இருந்தேன்.

மாடர்ன் ஹோம் உணவகத்திற்கு மேல் தளத்தில் அந்த மலையாள பிராமண முதலாளி அப்போது லாட்ஜ் வைத்து இருந்தார்.

பணம் கலெக்சன் செய்து கொண்டிருந்த போது என்னை தாண்டி ஒரு ஜோடி மாடியேறியது. நான் திரும்பி அவர்களை கவனித்த போது என் ப்ரொஃப்சர் ஒருவர் தான் மாடியேறியவர் என்பது தெரிய வந்தது.

சரி தான். பழனி மலைக்கு தரிசனத்துக்கு மனைவியுடன் வந்திருக்கிறார் போல என்று நினைத்து நான் மேலே போனேன். அங்கு ரிசப்சனில் இருந்தவர் அவரிடம் சாதகமாக பேசவில்லை. ரூம் இல்லை என முகத்தில் அடிப்பது போல சொல்லிக்கொண்டிருந்தார்.

நான் முதலில் அவருக்கு நமஸ்காரம் சொன்னேன். அவர் என்னைப் பார்த்து
 “ ஹாய் கேபி” என்றார். அந்த வார்த்தைகள் மெக்கானிக்கலாக இருந்தது என்பதை அப்போது நான் கவனிக்கவில்லை.
அவருடன் வந்த பெண் சற்று தள்ளி முகம் தெரியாதவாறு நின்று கொண்டிருந்தார். மனைவி வெட்கப்படுகிற டைப் போல…

நான் ரிஸப்சனிஸ்ட்டிடம் “ எங்க ப்ரொஃபசர். ரூம் கொடுங்க” என்றேன்.
உடனே அவர் அதற்கு செவி சாய்த்தார்.

நான் என் விசிட்டிங் கார்டைக் கொடுத்தேன். ’கோவில் தரிசனம் முடிந்த பின் என் வீட்டிற்கு வாருங்கள் சார்!’

மாலையில் ரயில்வே ஃபீடர் ரோட்டுக்கு போக வாய்த்த போது மாடர்ன் ஹோம் லாட்ஜுக்கு போனேன்.

லாட்ஜ் ரிசப்சனிஸ்ட்டிடம் கேட்டேன் – ’ப்ரொபசர் தரிசனம் முடித்து வந்து விட்டாரா?’

ரிசப்சனிஸ்ட் ‘ சார் உங்க ப்ரொபசர் மனைவியோடு வந்தார்னா நினைக்கிறீங்க. நாங்க எப்பவும் ஒரு ஜோடி வந்தா உடனே உண்மையிலேயே கணவன் மனைவி தானா? இல்லையான்னு உடனே தெரிஞ்சிக்க சிரமப்பட்டதே கிடையாது. அவர்கள் நடவடிக்கையே காட்டிக்கொடுத்து விடும். அதனால் தான் ரூம் இல்லன்னு சொன்னேன். நீங்க வந்து ரெகமண்ட் செஞ்சதால உடனே கொடுத்துட்டேன். உங்களுக்கு தெரியுமா? அவங்க ரெண்டு மணி நேரத்தில் காலி செஞ்சுட்டுப்போயிட்டாங்க. அந்த பொண்ணு காலேஜ் ஸ்டூடண்ட் போல தெரிஞ்சது. நீங்க அவர பாத்ததும் பதறிட்டார். அதனாலயும் தான் ரெண்டு மணி நேரத்தில காலி பண்ணிட்டு போயிட்டார்.”
.............................................

http://rprajanayahem.blogspot.in/2017/10/to.html


https://rprajanayahem.blogspot.in/2017/10/blog-post_18.html

https://rprajanayahem.blogspot.in/2016/04/blog-post_19.html

http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_09.html

http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_6727.html

http://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_29.html


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.