இத்தாலியில் அலெஸ்ஸாண்டிரியாவில் பிறந்த உம்பர்ட்டோ ஈக்கோ தத்துவ ஞானி. மூன்று யுத்தங்களில் பங்கேற்றவர். பிப்ரவரி 19ம் தேதி இறந்திருக்கிறார்.
டான் பிரவுன் எழுதிய பிரபலமான டா வின்சி கோட் நாவல் பற்றி தான் எல்லோரும்
அறிவர். டாம் ஹேங்க்ஸ் நடித்து படமாய் வந்து பலரும் எதிர்த்து, எல்லோரும்
பார்த்து ரசிக்கப்பட்ட படமானது.
ஆனால் அதை படித்தவர்கள் , படம் பார்த்தவர்கள் அறியாத நாவல் ' பூக்கோவின் பெண்டுலம் '
உம்பெர்ட்டோ ஈகோ எழுதிய நாவல் ' பூக்கோவின் பெண்டுலம் '
டாவின்சி கோட் எழுதிய டான் பிரவுன் பற்றி ஈகோ சொல்வார் :“Don Brown is one of my creature.”
பூக்கோவின் பெண்டுலம் பற்றி சொல்ல ஈகோ வின் மேற்கண்ட ஒரு வரியே போதும்.
பூக்கோவின் பெண்டுலம் வாசிக்க சுலபமானது அல்லாமல் கடினமானது என்பதில் இரு கருத்து இல்லை. டா வின்சி கோட் மாதிரி விறு விறு என்று வாசித்து தள்ளமுடியாது தான். ஈகோவின் 'பூக்கோவின் பெண்டுலம் ' நாவலை வாசிக்க ஒரு திறன் தேவை. ஆனால் அந்த விஷேச வாசிப்புக்கான சன்மானம் மிகவும் மகத்தானது .
Foucault’s Pendulam – the thinking person’s Da Vinci Code !
ஈகோ வின் பிரபலமான மற்றொரு நாவல் பிரதியின்பம் என்பதற்கு உதாரணமான The Name of the Rose. மர்ம நாவல்கள் அத்தனையையும் மிஞ்சிய திகில் நாவலான இதை வாசிப்பதே 'சுகம்'. ஆனா 'பூக்கோவின் பெண்டுலம் 'வாசிப்பது ஒரு 'தவம்.'
The Name of the Rose திரைப்படமாக 'ஷான் கானரி' நடித்து முப்பது வருடம் முன் வந்தது.
ஷான் கானெரி நடித்த ஜேம்ஸ் பாண்டு படங்களை விட மிக தரமான த்ரில்லர்.
உம்பர்டோ ஈகோவால் The Name of the Rose நாவலும் எழுதி Foucault’s Pendulam நாவலையும் எழுத முடிந்திருக்கிறது !
Hell is heaven seen from the other side" - இந்த வார்த்தைகள் உம்பர்ட்டோ ஈக்கோ 'Name of the Rose' நாவலில் எழுதியது.
'Christ never laughed' என்ற விஷயம் குறித்து அந்த நாவலில் வரும் வில்லியம் என்ற பாதிரி சொல்வது “Laughter is proper to man,it is a sign of his rationality."
Men are animals but rational,and the property of man is the capacity for laughing.
Library - The place of Forbidden Knowledge!-ஈடன் தோட்டத்து ஆப்பிள் விலக்கப்பட்ட கனி!
”எல்லா கவிஞர்களுமே மோசமான கவிதைகள் தான் எழுதுகிறார்கள். கெட்ட கவிஞர்கள் தங்கள் கவிதைகளை புத்தகமாக போட்டு விடுகிறார்கள். ஆனால் நல்ல கவிஞர்கள் தங்கள் கவிதைகளை நெருப்பு வைத்து கொளுத்தி விடுகிறார்கள்!” என்று நேம் ஆஃப் த ரோஸ் நாவலில் சொல்கிற ஈகோவின் நகைச்சுவை உணர்வு!
எனக்கு பிடிக்காத வேலை மொழிபெயர்ப்பு. அதனால் ஈகோவின் இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. – ‘Translation is the art of failure’
……………………………………..
published in minnambalam.com on 23rd Feb,2016
https://minnambalam.com/k/1456 185650

https://minnambalam.com/k/1456