Share

Nov 16, 2015

வாழ்வினில் வசந்தம் தர மொழியில்லையா?



ஆறாது ஆறாது அழுதாலும் தீராது என்று பெருந்துயரங்களால் அலைக்கழிக்கப்படும்போதும் ஏதோசில விஷயங்கள் கவனம்பெற்று விடுகின்றன. நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்.



கண்ணம்மா கனவில்லையா?
கண்களில் சுகமில்லையா?
என்னம்மா பொழுதில்லையா?
மனம் தன்னில் எந்தன் தொல்லையா?
சொல்லம்மா வாசல் வர வழியில்லையா?
வாழ்வினில் வசந்தம் தர மொழியில்லையா?



இப்படி ஒரு பாடல் எஸ்.பி.பி பாடியிருக்கிறார் என்பதே ஆனந்த் அரவிந்தக்‌ஷ்ன் Airtel Supersinger நிகழ்ச்சியில் பாடிய போது தான் தெரியவந்தது. விஷ்வதுளசி என்று ஒரு படம் 2004ம் ஆண்டு வந்தது என்பது கூட அப்போது தான் தெரிந்தது.இந்தப் படத்தில் மம்முட்டி, நந்தித்தா தாஸ் நடித்திருப்பது, எம்.எஸ்.வி இந்தப்பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் என்பதும் இந்தப்படத்தில் இளையராஜாவும் இசையமைத்திருப்பதையும் கூட பின்னர் அறிய நேர்ந்தது. இந்தப்படத்தை சுமதி ராம் என்ற பெண்மணி இயக்கியிருக்கிறார்.

விஷ்வதுளசி ’இந்து’ ஆங்கிலப்பத்திரிக்கை விமரிசனம். படத்தின் மற்ற பாடல்கள் பற்றி சிலாகித்து விட்டு, இந்தப்பாடலைப்பற்றி ஒரு வரி கூட அதில் அன்று (Oct 29, 2004) குறிப்பிடப்படவில்லை!

எஸ்.பி.பி இந்தப்பாடலை எழுதியவர் காமகோடியன் என்று நினைவுப்பிசகாக சொல்லியிருப்பார் போல. விஷ்வதுளசியை இயக்கிய சுமதியே தான் இந்தப்பாடலை எழுதியவர் என்றும் சொல்லப்படுகிறது.


அரவிந்தக்‌ஷன் “ நிலவே என்னிடம் நெருங்காதே! நீ நெருங்கும் நிலையில் நான் இல்லை” பாடலை பாடியபோது கவனத்துக்கு வந்தார். இப்போது இந்தப்பாடல் மூலம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விட்டார்.



கண்ணம்மா கனவில்லையா?


எஸ்.பி.பி வார்த்தைகள் : You brought back a music to me. நீங்க பாடுன மாதிரி நான் கூட பாடல தம்பி!
பாலு கண் கலங்கி கண்ணீர் விட்ட போது எவ்வளவு பேர் விம்மியிருப்பார்கள்.
எப்பேர்ப்பட்ட பரந்த மனசு! A great man is always willing to be little.
இதில் நிச்சயம் ட்ராமா இல்லை..

”நான் இந்தப்பாட்ட  ஸ்டேஜ்ல பாடுனதேயில்ல.. பயம்!” என்று ஒரு குழந்தை போல பாலு சொன்னார்.

அரவிந்தக்‌ஷனிடம் “ You have such a romantic voice, you bloody fellow!"

இசையமைத்த எம்.எஸ்.வி பற்றி “ அந்த பெரிய ஆத்மாவோட நான் வேலை செய்ய என்ன புண்ணியம் செய்திருக்கனும். அவரு ’தம்பி..இந்தப்பாட்டு நல்லா Depth குடுத்து நீ அனுபவிச்சி பாடனும்.. ’ன்னு சொன்னார்.”
சத் குரு!

அன்று ‘ வான் நிலா, நிலா அல்ல, உன் வாலிபம் நிலா’ எஸ்.பி.பி பாடிக்கேட்க வாய்த்தது. அவரை இனி பாராட்ட என்ன இருக்கிறது?
.... ஸ்வர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்!


எம்.எஸ்.வி .. அவர் வாய் விட்டு சிரிப்பது.. குழந்தை போல அழுவது... முகம் சுண்டி கோபப்படுவது, சிடு சிடு என்று பேசுவது... எல்லாம் என் நினைவில் நிழலாடுகிறது.


எம்.எஸ்.வி.. எஸ்.பி.பி...
எந்தரோ மஹானுபாவலு
அந்தரிக்கி வந்தனமு

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_291.html

................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.