அல்டாப்பு
வலம்புரி ஜான் ஒரு பத்திரிக்கைக்கு ஆசிரியராய் இருந்தார். பத்திரிக்கையின் பெயர்
"தாய்"! எம்.ஜி.ஆர் – ஜானகியின் வளர்ப்பு மகன் அப்பு
என்ற ரவீந்திரன் தான் பத்திரிக்கை அதிபர்.
ஜெயகாந்தன் மடத்திற்கு போயிருந்த வக்கீல் ஹபீப்
ராஜா (’ஏழாவது மனிதன்’ படத்தின் அசிஸ்டண்ட் டைரக்டர்) ஜெயகாந்தனின் அடைமழை பிரசங்கத்தின் இடையில்
கொஞ்சம் கேப் கிடைத்த போது “இந்த ‘தாய்’
பத்திரிக்கையில ஒங்களைப் பத்தி..”
ஜெயகாந்தனோ
வாக்கியம் முடியுமுன்னே மின்னலாக சீறினார் “அந்த ‘த்தாயோளி’ பத்திரிக்கையெல்லாம் நீங்க ஏன்
படிக்கிறீங்க?”
.............................
‘அம்மா வந்தாள்’
நாவல் தி.ஜானகிராமனின் மிகப்பிரபலமான நாவல்.
‘மோகமுள்’ நாவலை
பிரமாதமாக புகழ்ந்த க.நா.சுவுக்கு ‘அம்மா வந்தாள்’ பிடிக்கவில்லை.
டெல்லியில் ‘THOUGHT’ ஆங்கிலப்பத்திரிக்கையில் அம்மா வந்தாளுக்கு
எழுதிய விமரிசனத்திற்கு க.நா.சு கொடுத்த தலைப்பு ‘Janakiraman’s Mother’. அம்மா வந்தாள் படித்திருந்தால் தான் இந்த
தலைப்பின் வக்கிரம் புரியும்.
.....................
ஹேம்லட் தன் தாய் மீதான வெறுப்பை உமிழ்ந்த போது சொன்ன வார்த்தை - "Frailty! Thy name is woman!" - One of the mighty lines of Shakespeare - one of the memorable expressions.
..............................................
ஹேம்லட் தன் தாய் மீதான வெறுப்பை உமிழ்ந்த போது சொன்ன வார்த்தை - "Frailty! Thy name is woman!" - One of the mighty lines of Shakespeare - one of the memorable expressions.
..............................................
த்ரூஃபோ ( Francois Truffaut ) எடுத்த படம் Bed and Board.
படம் பார்க்கும்போது அதில்
ஒரு சுவாரசியமான தகவல். “Mother’s day” was invented by the German Nazis,
During the second world war!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.