ராஜேஷ் கன்னாவின் இயற்பெயர் ஜட்டின் கன்னா. தர்மேந்திராவின் பெயர் தரம் சிங் டியோல். சஞ்சீவ் குமார் பெயர் ஹரிபாய் ஜரிவாலா.
அண்ணன் ராஜ் கபூர் மட்டுமல்ல, தம்பிகள் ஷம்மி கபூர், சசி கபூர் கூட ராஜ் கபூர் தான்.
ஷம்மி கபூர் - ஷாம்ஷர் ராஜ் கபூர்
சசி கபூர் - பல்பீர் ராஜ் கபூர்
இவுங்க அப்பா ப்ருத்வி ராஜ் கபூர்.
அசோக் குமார் - குமுத் கங்குலி
தம்பி கிஷோர் குமார் பெயர் அபாஸ் குமார் கங்குலி.
அமிதாப் பச்சன் - அமித் ஸ்ரீவத்சவா?
ரஜினிகாந்த் - சிவாஜி ராவ் கெயிக்வாட்
கமல் ஹாசன் தான் இயற்பெயரோடு இருப்பவர். கமல் ஹாசன் மட்டும் வீட்டில் அப்பா சீனிவாசன் வைத்த பெயரோடு இருப்பவர். தன் பெயரில் ஒரு புள்ளி வைத்து, கமல ஹாசன் என்ற பெயரை கமல் ஹாசன் என்று மாற்றிக்கொண்டார் என்று அபத்தமாக கண்டு பிடித்துச் சொல்லக் கூட ஆட்கள் உண்டு. அது பெரிய கண்டுபிடிப்பு என்று பெருமைப்படுவது மிகப்பெரிய அபத்தம்.
ஆனால் விதியை என்னவென்று சொல்ல?
Fun Facts India என்ற நூல் பிரபலமான Rupa Publisher வெளியீடு. டெர்ரி ஒ' ப்ரையன் ஆசிரியர்.
இதில் கமல் ஹாசனின் இயற் பெயர் 'ஆள்வார் பேட்டை ஆண்டவர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெர்ரி ஒ' ப்ரையன் கோஷம் 'Read, Record, Recall '. கமல் ஹாசன் இயற்பெயர் ஆள்வார் பேட்டை ஆண்டவர் என்று எவ்வளவு பேர் read பண்ணி record பண்ணி recall பண்ண வேண்டியிருக்கும்.
திராவிட இயக்கத்தலைவர்கள் பலரும் 1940களில் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டவர்கள்.
ஆச்சரியமான விஷயம்.
மு. கருணாநிதி( தட்சிணாமூர்த்தி) ஏன் அழகன், செழியன்,மாறன் என்று மாற்றிக்கொள்ளவில்லை!. அவர் இயல்புக்கு இது ரொம்ப அதிசயம்!
.........................................................................
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.