Khushwant Singh Passes away at the age of 99.
சில நாட்களாக குஷ்வந்த் சிங் எழுதிய “ Book of Unforgettable Women" புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
இன்று பூலான் தேவி பற்றி குஷ்வந்த் சிங் எழுதியதைப் படித்துக்கொண்டிருக்கும்போது NDTV யில் குஷ்வந்த் சிங் மறைந்த செய்தியைப் பார்க்க நேர்ந்தது.
Khushwant Singh had already quoted Benjamin Franklin:
"If you would not be forgotten
As soon as you are dead and rotten
Either write things worth reading
Or do things worth writing."
............
When his father Shoba Singh died at the age of 90, in 18th April,1978, Khushwant Singh was asked by his brothers to make the final oration. Fortunately he was able to say his piece without breaking down.
" You ask me about the signs of a man of faith?
When death comes to him, he has a smile on his lips."
...........
Khushwant Singh's self-written epitaph:
"Here lies one who spared neither man or God
Waste not your tears on him, he was a sod
Writing nasty things he regarded as great fun
Thank the Lord he is dead, this son of a gun."
...............................................
Power is the ultimate aphrodisiac
"I am not an admirer of great people. The few I got to know at close quarters turned out to have feet of clay:they were pretentious, feckless, lying and utterly commonplace."
-Khushwant Singh in 'Truth, Love & a Little Malice'
கிருஷ்ணமேனன் பற்றி இந்தியர்களுக்கு ஒரு அதீத பிம்பம் உண்டு.
ஐக்கிய
நாடுகள் சபையில் 13 மணி நேரம் மேனன் நிகழ்த்திய பேருரை பற்றி அந்தக்
கால பெரிசுகள் கண் விரிய சொல்வார்கள். கிருஷ்ணமேனனும் விஜயலட்சுமி
பண்டிட்டும் கட்டிப்பிடித்த படி விமானத்திலிருந்து இறங்கி வரும் புகைப்படம்
அந்தக்காலத்தில் பார்க்கக்கிடைத்ததுண்டு. அவர் ராணுவ மந்திரியாய்
இருந்தபோது தான்
இந்திய சீன யுத்தம்.
இறப்பதற்கு முன் கேசுவலாக ஒரு டீ சாப்பிட்டு விட்டு அவர் படுத்ததை எங்கள் அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில பேராசிரியர் வசந்தன் சுவாரசியமாக சொன்னபோது பிரமிப்பாய் கூட இருந்தது.
இறப்பதற்கு முன் கேசுவலாக ஒரு டீ சாப்பிட்டு விட்டு அவர் படுத்ததை எங்கள் அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில பேராசிரியர் வசந்தன் சுவாரசியமாக சொன்னபோது பிரமிப்பாய் கூட இருந்தது.
குஷ்வந்த் சிங் காட்டும் கிருஷ்ணமேனன் பற்றிய குறிப்புகள் இந்த விக்கிரகத்தை
உடைத்து விடுகிறது. ஒரு முழுமையான வில்லன் போலவே தான் கிருஷ்ணமேனன் பற்றி தெரிய
வருகிறது.
13 மணி நேரம் காஷ்மீர் பற்றி பேசியதன் out put என்ன? காஷ்மீர் பற்றிய
இந்திய நிலைப்பாட்டிற்கு எதிராகத் தான் ஐக்கிய நாடுகள் சபையில் ஓட்டு போட்டார்கள்.
A unanimous vote against India!
சீன சண்டையில் இந்தியாவின் தோல்விக்கு கிருஷ்ணமேனன் தான் பொறுப்பாளி.
எப்படியோ நேருவை கிருஷ்ணமேனன் இன்ஃப்ளூயன்ஸ் செய்ய முடிந்திருக்கிறது. அவர்
சுதந்திர இந்தியாவின் இங்கிலாந்து தூதராக ஆக முடிந்திருக்கிறது.
ஹைகமிஷனராக லண்டனில் அவர் செயல் பாடுகள் பற்றி குஷ்வந்த் சிங் எழுதுவதைப் படிக்கும்போது கோபமே வருகிறது. இப்படிப்பட்டவர்கள் பற்றி அறிய வரும்போது நீட்ஷே சொன்னது தான் எப்போதுமே நினைவில் வருகிறது, ” அவ்வப்போது ஆபாசம் தான் அரியணையில் அமர்கிறது ! அவ்வப்போது அரியணையே ஆபாசத்தின் மேல் !”
ஹைகமிஷனராக லண்டனில் அவர் செயல் பாடுகள் பற்றி குஷ்வந்த் சிங் எழுதுவதைப் படிக்கும்போது கோபமே வருகிறது. இப்படிப்பட்டவர்கள் பற்றி அறிய வரும்போது நீட்ஷே சொன்னது தான் எப்போதுமே நினைவில் வருகிறது, ” அவ்வப்போது ஆபாசம் தான் அரியணையில் அமர்கிறது ! அவ்வப்போது அரியணையே ஆபாசத்தின் மேல் !”
கிருஷ்ணமேனன் ஒரு womanizer,
sadist and a liar என்றாலும் ஒரு Bachelor.
உண்மையே பேசமாட்டார். தனக்கு பிடிக்காத சுதிர் கோஷ் பற்றி நேருவிடம் இவன்
வல்லபாய் படேலுடைய ஆள் என்று போட்டு விட்டு வேலையை காலி பண்ணியிருக்கிறார்.
தூதரகத்தில் வேலை பார்த்த கமலா ஜஸ்பால் என்ற
மேனாமினுக்கி ( A designing seductress ) இவருடைய mistress.
குஷ்வந்த் சிங் வார்த்தைகள் “Krishna Menon
treated the husbands of good-looking women as friends. If he sensed tension
between the couple, he became considerate towards them. Menon had great
understanding for misunderstood wives. Sheila Lall and my wife fell in that
category. Arthur and I became his number one and number two favourites.
குஷ்வந்த்சிங் இந்திய தூதரகத்தின் public relations officer.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரின் முதல் இங்கிலாந்து விஜயம்.
நேருவுடன் அவருடைய செக்ரட்டரி எம்.ஓ.மத்தாய்(!) தான் வருகிறார்.
According to M.O.Matthai Neither Nehru nor Indira
Gandhi was sexully inhibited. ஆபாசம் தான் அரியணையில் அமர்கிறது…
நேரு நள்ளிரவில் விமானத்தில் லண்டன் வருகிறார். தான் தங்க வேண்டிய
ஹோட்டலுக்கு போவார் என்று பார்த்தால் நேராக லேடி மவுண்ட் பேட்டனைப்பார்க்க
செல்லுகிறார். மவுண்ட் பேட்டன் அப்போது லண்டனில் இல்லை. நேருவுக்காக நைட் கவுனோடு
லேடி எட்வினா மவுண்ட்பேட்டன் கதவை திறந்து விடுகிற போட்டோ ’தி டெய்லி ஹெரால்ட்’
செய்தித்தாளில் வருகிறது. தலைப்பு “Lady
Mountbatten’s Midnight Visitor.’’ லண்டனில் லார்ட் மவுண்ட் பேட்டன் அன்று இல்லை
என்பதையும் டெய்லி ஹெரால்ட் சொல்கிறது.
கிருஷ்ணமேனன் அன்று பி.ஆர்.ஓ குஷ்வந்த் சிங்கைப் பார்த்து குரைக்கிறார். “
டெய்லி ஹெரால்ட் பாத்தியாய்யா? நேரு ஒன் மேல ரொம்ப கோபமா இருக்கிறார்”
குஷ்வந்த் சிங் பரிதாபமாக “எனக்கெப்படிங்க தெரியும். நேரு ஹோட்டலுக்குப்
போகாம இப்படி அந்தம்மாவைப் பாக்கப்போவாருன்னு.”
பத்திரிக்கையாளர்களுக்கு நேரு தன் ஹோட்டலில் பேட்டி கொடுக்கிற காட்சி.
கிருஷ்ணமேனன் தலையைத்தொங்கப்போட்டு தூங்குகிறார். நேரு உடனே குஷ்வந்த்
சிங்கிடம் கோபமாய் சொல்கிறார். “ என்னய்யா இது உங்க ஹை கமிஷனருக்கு உடம்பு
சரியில்ல போலருக்கு. You must not expose him to outsiders like this ” ஆனால்
கொஞ்ச நேரத்தில் அத்தனை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நேருவும் தலையை நெஞ்சில
தொங்கப்போட்டு நித்திரையில் ஆழ்கிறார்.
Pandit Nehru had a couple of days free to indulge in his favourite
hobbies, buying books and seeing Lady Mountbatten.
நேரு ஒரு க்ரீக் ரெஸ்டாரெண்ட்டுக்கு வரும்படி லேடி மவுண்ட்பேட்டனை
அழைக்கிறார். ரெஸ்டாரண்ட் ஓனர் உடனே பத்திரிக்கைகளுக்கு தொலைபேசி தகவல்
கொடுக்கிறார். ரெஸ்டாரெண்ட்டுக்கு பப்ளிசிட்டியாம்! அடுத்த நாள் காலை பேப்பர்களில்
இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின்றன.
பி.ஆர்.ஓ குஷ்வந்த் சிங்கிடம் நேரு எரிச்சலுடன் சொல்கிறார்.” You have
strange notions of publicity!”
கிருஷ்ணமேனன் பற்றி குஷ்வந்த் சிங்
Menon was a complex
Character, the most unpredictable and prickly I have ever met….Menon’s bad
temper and discourtesy had to be experienced to be believed…Menon was full of
acid wit and sarcasm…
Next to Nehru, it was Mountbattens that KrishnaMenon relied on to keep him where he was…..Women found him handsome…Menon was not generous with his money, except when it came to his lady friends and children…Menon’s first reaction to any proposal put to him was to reject him…He has a strong streak of sadism…Merit did not matter very much to Menon; Unquestioned loyalty did. Lying was Menon's second nature and came as easily to him as discourtesy.…Why Menon got where he did under the patronage of Pandit Nehru remains, and probably will remain, unexplained.
Next to Nehru, it was Mountbattens that KrishnaMenon relied on to keep him where he was…..Women found him handsome…Menon was not generous with his money, except when it came to his lady friends and children…Menon’s first reaction to any proposal put to him was to reject him…He has a strong streak of sadism…Merit did not matter very much to Menon; Unquestioned loyalty did. Lying was Menon's second nature and came as easily to him as discourtesy.…Why Menon got where he did under the patronage of Pandit Nehru remains, and probably will remain, unexplained.
லண்டனில் ரெஸ்ட்ராண்ட்களில் வெயிட்டராக வேலை பார்த்த மேனன் பின்னர் அதே
லண்டனில் இங்கிலாந்தின் இந்திய தூதராக ஆகி, இந்திய எம்.பி ஆகி இந்திய ராணுவ
மந்திரியாகி…..ஆகா சினிமாவாக எடுத்தால் கூட சற்று மிகையாகத் தான் தெரியும்.
பின்னால்
லண்டனில் இந்தியா ஆபீஸ் லைப்ரரியில் வேலை பார்த்த குஷ்வந்த் அப்போது
ஷீலா லாலுடன் தங்கியிருந்த காலத்தில் ’ நான் உன்னை ரகசியமா வைப்பாட்டியா
வச்சுக்கிறேன்’ என்று ஷீலாவை கிருஷ்ணமேனன் தொந்தரவு செய்து
கொண்டிருந்திருக்கிறார். போனில் வந்த மேனனிடம் “பாஸ்டர்ட்..நீ யாருன்னு
எனக்கு
தெரியும்டா..நேரங்கெட்ட நேரத்தில போன் பண்றதெ நிறுத்திக்க. இல்லன்னா ரொம்ப
அசிங்கமா
பேசிடுவன்டா”ன்னு குஷ்வந்த்சிங் கத்தியிருக்கிறார்.
பேசிடுவன்டா”ன்னு குஷ்வந்த்சிங் கத்தியிருக்கிறார்.
ஜெனரல் சிவ் வர்மா கிருஷ்ணமேனனைப்பற்றி சொன்னது நூத்துக்கு நூறு சரி என்று
குஷ்வந்த் சொல்வது சுவாரசியம்.
“KrishnaMenon was a
bachelor, the same as his father.”
......................................
குஷ்வந்த் சிங் மனைவி
சுய சரிதை என்பது என்ன? வான்கோழி கையில் மயிலிறகு என்று தமிழன்பன் கவிதை சொல்வது நினைவுக்கு வருகிறது.
ஆனால் குஷ்வந்த் சிங் சுய சரிதை Truth, Love and a
Little Malice படிக்கும்போது எழுத்தின் நேர்மை பற்றி நினைக்க வேண்டியிருக்கிறது.
குஷ்வந்த் சிங் Autobiography is the child of
ageing lions என்கிறார்.
குஷ்வந்த் சிங் மிகப்பெரிய குடும்பத்தை சார்ந்தவர். அவருடைய
அப்பா புது டெல்லியில் பல முக்கிய கட்டிடங்களை நிர்மாணித்தவர். வெள்ளைக்காரனால் சர்
பட்டம் கொடுக்கப்பட்ட ஷோபா சிங். அவருடைய மனைவி குடும்பமும் மிகவும் பிரபலமான பணக்கார
பாரம்பரியம் கொண்டது.மனைவியின் அப்பா கூட சர் பட்டம் வாங்கிய சிங் தான்.
குஷ்வந்த் சிங்கின் பூர்வீகம் லாகூர்.
இந்த சுய சரிதையில் இல்லாத விஷயம் குஷ்வந்த அப்பா ஷோபா சிங்
தான் டெல்லி அசெம்பிளி குண்டு வெடிப்பில் பகத் சிங்கை அடையாளம் காட்டிய
கணவான்.
’பந்தியிலே சாப்பாடு கெட்டாலும் வீட்டிலே பெண் கெட்டாலும்
வெளியே சொல்லக்கூடாது ?!’
குஷ்வந்த் சிங் தன் மனைவியை சத்திய சோதனை செய்துள்ளார்.
லண்டனில் இவர் அந்தப்பெண்ணை சந்தித்த காலத்தில் அவள் உலக
அழகிக்கான அங்க அமைப்பு தனக்கு இருப்பது பற்றிய பிரக்ஞையுடன் இருந்திருக்கிறாள். அவளிடம்
இதயத்தை பறிகொடுத்தவர்கள் பற்றி ஒரு லிஸ்ட் குஷ்வந்த் சிங் தருகிறார். பிரதாப் லால்,
அமர்ஜீத், பரத்ராம். இவர்களில் பரத்ராம் திருமணமாகி குழந்தையும் உள்ளவன். குஷ்வந்த்
சிங் அந்த பெண் கவல் மலிக் திருமண நிச்சயதார்த்த்ம் நடந்த பிறகு இந்த பரத்ராம் குடும்பத்துடன்
கவல் மலிக் ஜெர்மனிக்கு போகிறாள்.
மங்கத் ராய் மட்டும் குஷ்வந்த் சிங் தன் மனைவியை த் தேர்ந்தெடுப்பதில்
தவறு செய்து விட்டதாக திரும்ப திரும்பச் சொல்கிறான்.
திருமணம் செய்த பின் தன் மனைவி இன்னும் கன்னி கழியாதவள் என்று
தேன் நிலவின் போது தெரிய வரும்போது குஷ்வந்த் சிங் ஆச்சரியப்படுகிறார்.
ஆனால் குஷ்வந்த்
சிங் திருமணம் செய்து கொண்ட பின் அவர் மனைவியை தான் உயிருக்குயிராய் காதலித்ததாக மங்கத் ராய் சொல்கிறான். தினமும் தான் கவல் மாலிக்கை
சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கெஞ்சிக்கேட்கிறான்…குஷ்வந்த் சிங் சம்மதிக்கிறார்!
மங்கத் ராய் ஆக்கிரமிப்பின் காரணமாக கவல் மாலிக் ஓவியம் வரைவதையும்
டென்னிஸ் விளையாடுவதையும் கை விட்டு விட்டு மங்கத் ராயுடன் சைக்ளிங் செல்கிறாள்.
குஷ்வந்த் சிங்கின் மனைவி அவர் பேச்சைக்கேட்காமல் பரத் ராம்,
மங்கத்ராய் சொல்பேச்சைத்தான் கேட்டுக்கொண்டிருந்ததால் சிங்கின் தன்னம்பிக்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
லண்டன் தூதரகத்தில் தான் வேலை பார்த்த போது ஹைகமிஷனர் கிருஷ்ணமேனன்
ஆக்கிரமிப்பில் குஷ்வந்த் சிங்கின் மனைவி இருந்ததைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
பிஜு பட்நாய்க் ( முன்னாள் ஒரிசா முதல்வர் தான். இன்றைய ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாய்க்கின் தந்தை! ) தன் மனைவிக்கு
நூல் விட்டுப்பார்த்து படியுமா என்று ட்ரை பண்ணிய விஷயத்தை குஷ்வந்த் சிங் எழுதியிருக்கிறார்.
ஃப்ரான்சில்
UNESCO வில் வேலை பார்த்த போது பரத்ராம் இவர்
மனைவி மீது ஜொள்ளு விட்டு தேடி வந்ததைப்பற்றி குறிப்பிடுகிறார். கவல்
மாலிக்கை ரெஸ்டாரண்ட்டுக்கு அழைத்துச்செல்ல விரும்புவதாக அனுமதி கேட்ட போது
பாரீஸ் சில் மிக காஸ்ட்லியான ரெஸ்டாரண்ட்டுக்கு அழைத்துக்கொண்டு
போகச்சொல்லி சிபாரிசு செய்து
விட்டு குஷ்வந்த் சிங் தன் மனைவியிடம் “ இந்த ரெஸ்டாரெண்ட்டுக்கு உன்
வாழ்வில் நீ இந்த ஒரு முறை மட்டும் தான்
போகமுடியும்!” என்கிறார். ஆனால் அந்த ரெஸ்டாரண்ட் மெனு கார்ட் பார்த்து
விட்டு மிரண்டு போய் பரத்ராம் கவனமாக நழுவி வேறொரு சாதாரண
ரெஸ்டாரெண்ட்டுக்கு அவளை அழைத்துச் செல்கிறான்.
இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி எடிட்டராக குஷ்வந்த் சிங் இருந்த
போது அவர் பேரும் புகழும் அடைந்த கால கட்டத்தில் மனைவியாலும் மகள் மாலாவாலும் தனக்கு
கௌரவ பங்கம் ஏற்பட்டதாக போகிற போக்கில் குறிப்பிடுகிறார்.
கடவுள் நம்பிக்கையைத் துறந்தவர். ஆனால் மனைவி தன்னை விட்டு
நிரந்தரமாகப்பிரிய விரும்புவதாகச் சொன்னபோது குருத்வாராவில் இரவு முழுதும் மனம் உடைந்து
பிரார்த்தனை செய்திருக்கிறார். இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசம்.ஐம்பதை ஒட்டிய
வயதிலும் கூட இவர் மனைவி டைவர்ஸ் வாங்க முயற்சித்திருக்கிறார்.
மனைவியுடனான உறவு மிகவும் மோசமானதைப்பற்றி குறிப்பிடுகிறார்.
இவ்வளவிலும் இருவரும் அறுபத்து மூன்று வருடங்கள் சேர்ந்து
வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு மகன் ராகுல் சிங். மகள் மாலா. முதுமையில் தன் மனைவி Alzheimer’s diseaseல் பாதிக்கப்பட்ட
நிலையில் உருக்கமாக எழுதுகிறார். தன் மனைவி இறந்து விட்டால் தான் எழுதுவதை நிறுத்தி
விடுவேன் என்று தான் சுயசரிதையை முடிக்கிறார்.
I was always certain she would outlast me by many years. I am no longer
sure that she will. But I have a gut feeling that if she goes before me, I will
put away my pen and write no more.
இது தான் கடைசி வரிகள்.
குஷ்வந்த் சிங் மனைவி இந்த
புத்தகம் வெளி வந்த 2002ல் இறந்து விட்டார்.
தன் 90 வயதில் குஷ்வந்த்
சொன்னார்: ’என் மனைவி இறந்து மூன்று வருடங்கள் ஓடி விட்டன.ஆனால் நான் இன்னும் எழுதி
சம்பாதித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.’
’இன்னும் நான்கைந்து வருடத்தில்
வரப்போகும் சாவை எதிர்கொள்ளத் தயாராயிருக்கிறேன்’ என்று அப்போது சொன்ன குஷ்வந்த் சிங்கிற்கு
அடுத்த மாதம் பிப்ரவரியில் 98 வயது நிறைவடைகிறது.