Share

Mar 18, 2014

சீதை

மீள் பதிவு
31-08-2009 ல் எழுதப்பட்ட பதிவு

Sita - The Silent Pillar of Strength



சீதை

சீதையின் அக்னிப்பிரவேசம் - கதைகளிலும் ,கவிதைகளிலும் , மேடைகளிலும் அதிகம் பேசப்பட்ட விஷயம் .
லா .ச .ரா . : "சீதை குளித்த நெருப்பு .
நெருப்பின் புனிதம் சீதைக்கா ?
சீதையின் புனிதம் நெருப்புக்கா ?"
....
சீதை பற்றி நான் படிக்க நேர்ந்த இன்னொரு விஷயம் . யார் சொன்னது என்று நினைவில்லை . அந்த வார்த்தைகள் மட்டும் மறக்கவே முடியவில்லை .
" சேறு தெளித்த தாமரை போல
சீதை பிரகாசமாகவும் இருந்தாள்.
சோகமாகவும் இருந்தாள்."
இப்படி ஒரு பெண்ணை சிலவருடங்களாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
அருணாம்பிகை! The Silent Pillar of Strength ! ஸ்ருதி, மதுமஞ்சரி ஆகிய இரண்டு கன்னி தெய்வங்களின் தாய் அருணாம்பிகை!

அதனாலும் இந்த வரிகள் மறக்கமுடியவில்லை . யார் சொன்னது ??..


........................................................

மீள் பதிவு
03-09-2009

கண்டேன் சீதையை!


 பல மாதங்களாய் நான் மூளையை கசக்கி விடை தெரியாமல்
இரண்டு நாளாய் பரண் மேல் தேடி ஒரு வழியாய்..... கண்டேன் சீதையை .
" சேற்றுத்துளி தெளித்த தாமரை போல்
சீதை பிரகாசமாகவும் இருந்தாள்.
பிரகாசமாக இல்லாமலும் இருந்தாள் ."

தி .ஜானகிராமன் இதை 'ஆரத்தி ' சிறுகதையில் சொல்கிறார் .

கம்பன் சொன்னதைத் தான் மேற்கோள் காட்டியிருக்கிறாரா? ராமாயண பாகவதரின் மகன் தி.ஜா!
..

சீதை பற்றி தி.ஜா 'கடைசி மணி 'கதையில் சொல்கிற விஷயம் இன்னொன்று . திரிசடை கண்ட 'கவித்துவமான கனவு'.

" சீதை வெள்ளை யானை மீது ஏறி நின்று சந்திரனைத் தொட்ட மாதிரி
திரிசடை கனவு கண்டாளாம் ''


.........................................................




4 comments:

  1. ஏன் சார் அவ்வப்போது இந்த அஞ்சான வாசம்? எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள்.. தொடர்ந்து தான் எழுதுங்களேன்!

    ReplyDelete
  2. Welcome back sir,

    நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுகிறீர்கள்.

    அதிகம் எழுதுங்கள் சார். உங்கள் எழுத்துக்கள் ரசிக்கும்படி இருக்கும்.

    ReplyDelete
  3. Beautiful expression. ஈயம் பூசின மாதிரியும், பூசாத மாதிரியும்!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.