ஹெர்மன் மெல்வில் எழுதிய மோபி டிக்.
Moby-Dick; or, The Whale அமெரிக்க நாவல். மோபி டிக் என்ற திமிங்கலம்.
Moby-Dick; or, The Whale அமெரிக்க நாவல். மோபி டிக் என்ற திமிங்கலம்.
இந்த நாவலின் முதல் வரி ‘‘Call me Ishmael” -The most recognizable opening line in American
literature. கதை சொல்லி இஸ்மாயில்.
சி.சு. செல்லப்பாவின் நாவல் முற்றிலும் வேறான களம். ஜல்லிக்கட்டு பற்றிய குறு
நாவல். இந்த நாவலில் வரும் காரி என்ற வாடிப்பட்டி ஜல்லிக்கட்டுக் காளை.
மோபி டிக் படிப்பவன் பெறும் அனுபவம். கடல். அதில் கப்பல். கேப்டன் அஹாப்.
A ship at sea! In the prose writings of Thoreau, a ship
at sea is sometimes a metaphor for the soul.
அந்தத் திமிங்கலம் தன்னுள்ளே இருப்பதாக மோபி டிக் படிக்கும் ஒருவன் உணர்ந்தான்
என்றால் அவன் வக்கிரமானவன். வில்லத்தனத்தின் மொத்த உருவம் மோபி டிக்.
ஒரு வகையில் மோபி டிக் மட்டுமல்ல அஹாப் கூட கொடூரமானவன்.
Captain Ahab and his obsession with
a huge whale, Moby Dick.
அந்தத் திமிங்கலத்திடம் காலைப் பறிகொடுத்து விட்டு அதே திமிங்கலத்தைக் கண்டுபிடித்து
கொல்லும் முயற்சியில் உயிரை விடும் கேப்டன் அஹாப்.
மோபி டிக் திரைப்படமாக க்ரெகரி பெக் நடித்து 1956ல் வெளி வந்தது. ஜான் ஹஸ்டன்
இயக்கியிருந்தார். இந்த ஜான் ஹஸ்டனை நோவா க்ராஸ் என்ற வக்கிர வில்லனாக ரோமன் போலன்ஸ்கியின்
சைனா டவுன் (1974) படத்தில் பார்க்கலாம்!
சி.சு.செல்லப்பாவின் ’வாடி வாசல்’ காலச்சுவடு
நவீனத் தமிழ் “க்ளாசிக்” நாவல் வெளியீடு.
“Classic'’ - a book which people
praise and don't read. – Mark Twain
ஜல்லிக்கட்டு வீரன் கிழக்கத்தியான் பிச்சி. தன் தந்தை அம்புலியைக் கொன்ற காரி
என்ற ஜல்லிக்காட்டு காளையை வெற்றி கொள்கிறான்.
மோபி டிக் 1851ல் ஹெர்மன் மெல்வில் எழுதி வெளி வந்த நாவல். வெவ்வேறு தளங்களில்
விரியும் முற்றிலும் மாறுபட்ட மகத்தான நாவல்.
வாடி வாசல் சி.சு.செல்லப்பா எழுதி 1959ல் வந்த குறு நாவல்.
மோபி டிக் 882 பக்கங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய நாவல்.
வாடி வாசல் 56 பக்கங்கள்
கொண்ட சிறு குறுநாவல்.
வாடி வாசல் வாசிக்கும்போது மோபி டிக் ஏன் நினைவுக்கு வர வேண்டும்?
வாசிப்பு என்பது ஒரு விசித்திர அனுபவம்!
வாசிப்பு என்பது ஒரு விசித்திர அனுபவம்!
மோபி டிக்
என்ற திமிங்கலம்! காரி எனப்பட்ட ஜல்லிக்கட்டுக் காளை!
அஹாப்பையும் திமிங்கலத்தையும் எத்தனை வருடங்கள் ஆன போதிலும் எப்படி மறக்கவே
முடியாதோ அது போலத்தான் காரி என்ற காளையும் பிச்சி என்ற மானிடனும்.
Reading is a superpower!
.......................................
http://rprajanayahem.blogspot.in/2013/02/blog-post_11.html
http://rprajanayahem.blogspot.in/2012/10/catcher-in-rye.html
http://rprajanayahem.blogspot.in/2012/05/mrs-dalloway.html
http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_25.html
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.