Share

Oct 27, 2024

எம்ஜிஆர் 1972ல் பிரிந்த பின்

1972 ல் எம்ஜிஆர் பிரிந்த போது 
மதுரையில் நடந்த முதல் கூட்டத்தில் 
பேசியவர் பேராசிரியர் அன்பழகன் தான். 
அந்த கூட்டம் தான் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் கலந்து கொண்ட  கடைசி கூட்டம். கூட்டம் முடிந்த பிறகு சில மணி நேரத்தில் அவர் மரணம்.
அடுத்த வாரம் அதே திலகர் திடலில் நடந்த இரண்டாவது கூட்டத்தில் மணிக்கணக்கில் நாவலர் நெடுஞ்செழியன் மிக நீண்ட நேரம் பேசினார். அந்த பேச்சு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.
(எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் என்று பத்திரிகைகளுக்கு அவசரமாக அறிவித்த நாவலர்) 
முதல் வாரம் பேராசிரியர் பேசியதை விட 
எம்ஜிஆரை மிக கடுமையாக நாவலர் தாக்கி பேசினார். காரண காரியத்துடன் நாவலரின் அற்புதமான பிரசங்கம்.
பல எம்ஜிஆர் ரசிகர்களே தி.மு.க திரும்பினார்கள்.
அதே இரண்டாவது கூட்டத்தில் ராஜாங்கம் திடீர் மறைவு பற்றி அதிர்ச்சியோடு மதுரை முத்து முந்தைய வாரம் அன்பழகன் தலைமை பேச்சாளராய் கலந்து கொண்ட கூட்டத்தில் ராஜாங்கம் எம்ஜிஆர் ஃப்யூஸ் போன பல்பு என்று குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி பேசினார்.

இது தான் உண்மை.

எம்ஜிஆரை மிக கடுமையாக தாக்கிய மதுரை முத்து எம்ஜிஆர் கட்சியில் சேர்ந்தார் என்பது சரணாகதி தான்.
நெடுஞ்செழியன் சரணாகதியும் அது தான்.
இது தான் நிதர்சனமான உண்மை.

நெடுஞ்செழியன் எப்படியெல்லாம் எம்ஜிஆரை தாக்கினார் என்பதை நெடுஞ்செழியன் பற்றிய ராஜநாயஹம் கட்டுரையில் பார்க்கலாம்.

இணைவதற்கு முன் எப்போதும் பல நாடகங்கள் நடக்கத்தான் செய்யும். தலைவர் அழைப்பு என்பதெல்லாம் அத்தகையதே.
கலைஞரை தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் சகட்டுமேனிக்கு தன்னை மிக கடுமையாக எதிர்த்தவர்கள் எல்லோருக்குமே ஞானஸ்நானம் கொடுத்தார்.

எம்ஜிஆர் கட்சியில் சேர்ந்து கலைஞரை கடுமையாக இவர்கள் விமர்சித்தார்கள்