கி.ராவின் கோபல்ல கிராமத்தில் இருந்து பாரதிராஜா 'முதல் மரியாதை'யில் பயன்படுத்தி படத்தின் ஆரம்பத்தில் நன்றி சொல்லியிருந்தார்.
அவர் அதற்காக கொடுத்தனுப்பிய தொகை பற்றி கிராவுக்கு பெரும் அதிருப்தி.
இடைச்செவலுக்கு தொகை கொண்டு வந்தவரிடம் வெளிப்படையாக கேட்டிருக்கிறார்
" இவ்வளவு தான் பாரதிராஜா கொடுத்தாரா?"
சில இதழ்களே வந்த சிறு பத்திரிக்கையில்
இதை எழுதினார். அழகிரிசாமி சினிமாக்காரர்களிடம் மோசம் போக நேர்ந்த நிகழ்வு பற்றியும் குறிப்பிட்டார்.
புதுவையில் அடிக்கடி தன்னுடைய ஏமாற்றம் குறித்து நேரில் சொல்லியிருக்கிறார்.
இதை சொல்லும் போதெல்லாம் அழகிரிசாமி மோசம் போன கதையையும் தவறாமல் சொல்வார்.
அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.