Share

Nov 26, 2024

ப்ரகதீஷ் ரவிச்சந்திரன்

ப்ரகதீஷ் ரவிச்சந்திரன் அற்புதமான வாசகர்.

Bragadish Ravichandran 
R.P. ராஜநாயஹம் எழுத்து மீது மிகுந்த ஈடுபாடு, மரியாதை கொண்டிருந்தவர்.

சினிமாவில் உதவி இயக்குநர்.

ப்ரகதீஷ் தீர்மானம்:
"வலைத்தளத்தில் எழுதுபவர்களில் உன்னதமான அற்புத எழுத்தாளர் R.P.ராஜநாயஹம் தான். இன்னொருவர் பாரதி மணி." 

சச்சிதானந்தம் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் கொண்டிருந்தவர்.

ப்ரகதீஷ் பேச்சில் கண்ணியமும் நாகரீகமும் இருக்கும்.

சுவாரசியமாக உரையாடுவார்.

சாகிற வயசா?

அருண் மொழி, நாசருடன் பரிச்சயம் கொண்டவர்.

அருண்மொழி இறப்பதற்கு முன் கடைசி சந்திப்பில் ப்ரகதீஷ் பற்றி குறிப்பிட்டது                          நினைவுக்கு வருகிறது.

மற்றொரு வாசகர் சாமிநாதன் ராமசாமி இவருடைய நண்பர். அவருடைய அறையில் ப்ரகதீஷை சந்தித்ததுண்டு.

Nov 19, 2024

156th,157th Episodes Cinema enum Bootham

156th, 157th Episodes

R.P. Rajanayahem 

Cinema Enum Bootham

Murasu TV

24.11. 2024 Sunday

01.12. 2024 Sunday

Morning 8.30 am

Gangai Amaran 

Deva

Nov 15, 2024

டெல்லி கணேஷ்

1999 

திருச்சி ரசிக ரஞ்சனி சபாவில்
 ராஜநாயஹம் மெம்பர்.
பரதநாட்டிய நிகழ்ச்சி.
டெல்லி கணேஷ் அருகில் அமர்ந்தார். அவருடன்  கூட வந்தவர் டால்மியா சிமெண்ட்ஸ்ல டாப் ப்ராஸ்.
அவ்வை சண்முகியில் டெல்லி கணேஷ் அமர்க்களம் பற்றி " எம்.ஆர் ராதா மாதிரி தூள் கிளப்பியிருந்தீர்கள்" - ராஜநாயஹம்.

டெல்லி கணேஷ் பரவசமாக" ஆமாமா "

எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா,
 எஸ். வி. சுப்பையா வரிசையில் வைக்கப்படவேண்டிய டெல்லி கணேஷ்.

நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது கேட்டார் "உங்க பேர்?"

"R.P. ராஜநாயஹம்"

முகம் மலர்ந்து பெயரை உச்சரித்த
டெல்லி கணேஷ் " பிரமாதமான பேரு"

.....

ஒருவன் சொல்கிற விஷயத்தை வைத்து அவன் சொல்லாத விஷயத்தையும் தெளிவாக  புரிந்து கொள்ளுவது

'காதலா  காதலா படத்தில் 

கமல் : நான் திருட மாட்டேன், சூதாட மாட்டேன்,
பிச்சை எடுக்க மாட்டேன்.

டெல்லி கணேஷ் :  மொத்தத்தில  சம்பாதிக்க மாட்டேங்கிறே.


https://www.facebook.com/share/p/15TrMX4ybf/

https://youtu.be/Skot_ujKa5U?si=sF3p9LImS5tTz4xy

Nov 14, 2024

ராஜ் கௌதமன்

ராஜ் கௌதமன்

-1989ல் நவம்பர் மாதம் 17ம் தேதி
தி. ஜானகிராமன் நினைவாக 
புதுவை சாம்பர் ஆஃப் காமர்ஸில் நடந்த கூட்டம் நடத்திய போது நனைந்து கொண்டே வந்த ராஜ் கௌதமன் ரெயின் கோட்டுடன் அருகில் அமர்ந்தார். 

- லாஸ் பேட்டையிலிருந்து ராஜ் கௌதமன்
கடிதம் எழுதியிருந்தார்.
 ' ராஜநாயஹம்,
இலக்கிய வெளி வட்டம் நடராஜன் இங்கு வரமாட்டார். அவர் சொந்த கிராமத்திலிருந்து வேறு ஊர்களுக்கு பிழைப்புக்காக போகக்கூடியவர் அல்ல.
 தன் ஊரிலேயே சவால்களை சமாளிப்பவர். இது கோணங்கியின் வழக்கமான கோணங்கித்தனங்களில் ஒன்று.'

- உள்ளூர் அறிவுலக பூர்ஷ்வாக்களை பார்க்கப் போயிருந்த போது பேராசிரியர் ராஜ் கௌதமன் அங்கு வந்தார். பேசிவிட்டு அவர் கிளம்பிய பின் பூர்ஷ்வாக்களின் reaction " இவர் எங்களுக்கு நண்பர் அல்ல. எங்க ஸ்டாண்டர்ட் கிடையாது"
சொல்ல விரும்பியதின் அர்த்தம் என்னவென்றால் " He is not worthy of our mettle"

- 1990. புதுவை நேரு ஸ்ட்ரீட். பிரபஞ்சனுடன் பேசிக்கொண்டு வரும் போது எதிரே 
ராஜ் கௌதமன். 
பிரபஞ்சன் கேட்டார் " என்ன கௌதமன், டல்லாயிருக்கீங்க"

கௌதமன் உடன் பதில் "குடி. குடி. என்னேரமும் குடிச்சிகிட்டே இருந்தா. 
இப்டி தான்.
வீடு கட்டுனதுல இருந்து நிம்மதியே போச்சி. கடன். அதான்."

- 1996. ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டை ஒட்டி கோணங்கியை தற்செயலாக பார்த்த போது தொகையொன்றை கல்குதிரைக்காக கொடுத்தேன். கையில் கிடைத்த அந்த பணம் காரணமாக 
அவன் உடனே இலக்கிய வட்டம் நடராஜனுடன் புதுவைக்கு திடீர் பயணம். 
கௌதமன் வீட்டிற்கு போய் நுழைந்த போது " ஏன்டா இப்ப இங்க வந்தீங்க? "
அவமானம்.
உடனே இருவரும் வெளியேறியிருக்கிறார்கள்.

பாலகுரு அண்ணாச்சி தான் இதை சொன்னார். நடராஜனும் கௌதமனும் பாலகுரு அண்ணாச்சியும் பால்ய காலம் தொட்டு வத்றாப் புதுப்பட்டியில் நெருங்கிய நண்பர்கள்.

- 1997. ஆண்டாள் சன்னதியில் திருப்பாவை உற்சவம்.
சேஷகோபாலன் "ராஜ ராஜ ராதிதே" பாடிக்கொண்டிருந்தார். 
ஹரிகேஷ நல்லூர் முத்தையா பாகவதரின் கீர்த்தனை. 
இந்த நிரோஷ்டா ராகம் பாடும்போது உதடுகள் இரண்டும் ஒட்டவே ஒட்டாது. பாட்டு முடிந்ததும் வலது பக்கம் உட்கார்ந்திருத்த வத்றாப் புதுப்பட்டி நாயக்கர் இசை சுகம் பற்றி என்னிடம் சிலாகித்த போது நான் கேட்டேன் .
" உங்க ஊரிலே நடராஜன் அண்ணாச்சி தெரியுமா? "
அவர் "எந்த நடராஜன்"
"நாங்க இலக்கிய வெளி வட்டம் நடராஜன் என்று சொல்வோம் . இலக்கிய வெளி வட்டம்னு அந்த காலத்திலே நல்ல இலக்கியப் பத்திரிகை நடத்தினார். பிள்ளைமார் ஆளு.( ஜாதியை சொன்னால் தான் அந்தப் பக்கமெல்லாம் அடையாளமும் தெரிய வாய்ப்பு.)
உங்க ஊர் பாலகுரு அண்ணாச்சி, அப்புறம் ராஜ் கௌதமன் இப்போ புதுவையிலே பேராசிரியர் ஆக இருக்கார் . இவங்கல்லாம் எனக்கு  பழக்கம்." என்றேன்.
"அந்த நடராஜன் கம்யூனிஸ்ட் ஆச்சே. naxalite ஆச்சே.
அவரா உங்களுக்கு நண்பர்"
புதுப்பட்டி நாயக்கர் பதறி விட்டார்.

Nov 10, 2024

வேடிக்க - 26

வேடிக்க - 26

As luck would have it

பின்னால பெருங்கோடீஸ்வரனாகிற கதாநாயகன்
 கடன் சுமையில லோயர் மிடில் கிளாஸ் போராட்டத்ல கூட ப்ராண்டட் ஷர்ட்ல அசத்தும் போது
குட்டி மகனுக்கு பர்த் டே பங்ஷனுக்கெல்லாம் ஒரே டீசர்ட்.
  லக்கி பாஸ்கர். 

ராணுவ உயிர்த்தியாகம் எப்போதும் எல்லோருடைய Empathyக்குரியது. 
அதை தேசபக்தி படமாய் எடுத்து பெரும் பணம் ஈட்டுவதற்கெல்லாம் தியேட்டரில் ஒட்டவே முடியல. படத்ல ரொம்ப ஒட்டிக்கிட்டு பெரும்பாண்மை புல்லரித்து, செடியரிச்சி, மரமரிச்சி பிழிய பிழிய அழுவது வேடிக்க.
அமரன் குயுக்தி -: Sentiment exploitation.
Words fly up. Thoughts remain below.
The action doesn't suit to the word and the word to the action.

https://www.facebook.com/share/p/158Dbtsj8e/

Nov 6, 2024

வேடிக்க - 25

வா வாத்தியார் 

Best wishes.
Vaa Vathiyar will definitely be a super hit. 
Beautiful things are in store for you, 
Nalan Kumaraswamy Sir.

Go ahead and
make your days.

Congratulations and Celebrations when I tell everyone, Nalan is a great Director.

‌.‌.‌

இயக்குநர் நலன் குமாரசாமி என்னை பார்க்க வேண்டும் என்று அழைத்திருந்தார்.
டாக்ஸி அனுப்பியிருந்தார்.

மாம்பாக்கத்தில் இருந்து அண்ணா நகருக்கு நலன் அலுவலகம் போனேன்.

இயக்குநர் நலன் இரண்டு வருடங்களாக என்னைப்பற்றி எப்போதும் குறிப்பிடுவாராம்.
நல்ல ரோல் ராஜநாயஹத்திற்கு தர வேண்டும் என்பாராம். 
அஸோசியேட் டைரக்டர் ராமசுப்ரமணியன் சொன்னார்.

நலன் குமாரசாமி என்னிடம் ' இந்த ரோலுக்கான சாய்சில் இருக்கும்  நடிகர் நானா படேகர். கார்த்தி தான் படத்தின் கதாநாயகன்'

 நடிக்க வைத்து மூவி கேமராவில் படம் பிடித்தார்கள்.

மதிய உணவு அங்கேயே ஏற்பாடு செய்தார்கள்.

மீண்டும் ஷுட் தொடர்ந்து முடிந்தது.

இயக்குநர் நலன் குமாரசாமி ' இதில் என் முடிவு மட்டுமே இல்லை. கதாநாயகன், தயாரிப்பு தரப்பும் தான் முக்கிய கதாபாத்திரங்களுக்கான நடிகர்களை தீர்மானிப்பார்கள்.'

' ராஜநாயஹம் சார், உங்களுக்கு unique face. எந்த திரைப்பட நடிகரோடும் உங்களை ஒப்பிடவே முடியாது.
 உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தால் சினிமாவில் ஒரு ரவுண்டு வரமுடியும். தனித்துவமான நல்ல முகம் '

நான் சொன்னேன்
 ' இந்த கௌரவமே போதும் சார்.
இந்த பாத்திரம் எனக்கு கிடைக்காவிட்டாலும் நான் தாங்கிக் கொள்வேன். A slip between the cup and lip என்பதை நிறைய்ய பார்த்தவன்.'

மீண்டும் அதே டாக்ஸியில் மாம்பாக்கத்திற்கு அனுப்பி வைத்தார் நலன்.

அப்புறம் ஞாபகம் வந்தது. அவரோடு ஸெல்ஃபி எடுத்திருக்கலாம். மறந்தே போனேன்.

இன்னொரு நாள் மீண்டும் என் வீட்டிற்கு அவருடைய அஸிஸ்டெண்ட்களை மூவி கேமராவோடு அனுப்பி வைத்தார்.

  நடிக்க வைத்து படமெடுத்தார்கள்.

பல ஸ்டில்ஸ் மொபைல் போனிலும் எடுத்துக்கொண்டார்கள்.

அதன் பிறகு நீண்ட நாட்களுக்குப்பின் நலனோடு செல் பேசினேன்.

நான் நடிப்பதாக இருந்த
 கதா பாத்திரத்திற்கு சத்யராஜ் fix செய்யப்பட்டிருக்கிறார்.

நடிப்பதற்கு திரையுலக வாய்ப்பு பற்றி எப்போதும் எந்த பிரமையும் கிடையாது. நல்ல வாய்ப்பு என்பதெல்லாம் இதோடு முடிவுக்கு வந்து விட்டது. 
இதுவே முற்றுப் புள்ளி.

Nov 5, 2024

Posture



இந்த ராஜநாயஹம் புகைப்படம் பார்த்து
நீலன் கனிஷ்கா பின்னூட்டம் 

"புகழ்பெற்ற ஷாருக்கான்  ஸ்டைல் போஸ்..சூப்பர்."

ராஜநாயஹத்தின் இந்த குறிப்பிட்ட புகைப்படம் பார்த்து விட்டு கடந்த வருடங்களில் பிரமாதமாக பலர் "Wow" சொல்லி ரசித்திருக்கிறார்கள்.

R.P.ராஜநாயஹம் பதில் :

"ஷாருக்கான் 1992ல Deewana ல தான் பாலிவுட் அறிமுகம். 1993ல Baazigar, Darr ரெண்டு படங்கள்ல கலக்கி ஃபேமஸ்.

ராஜநாயஹம் மேற்கண்ட புகைப்படம் 
1989 மார்ச் மாதம் 
இல்லத்தரசியால் எடுக்கப்பட்டது. 

ஷாருக் கான் ஃபீல்டுக்கு வருவதற்கு முன்
ராஜநாயஹம் இயல்பாக கொடுத்த 
போஸ் இது. I'm humbled.
ராஜநாயஹம் சுயம்பு.

அணிந்திருக்கும் ஷர்ட் Charagh Din."

நீலன் கனிஷ்கா: "உண்மையை சொன்னேன்ணே...
இருங்க ஆதாரத்தோட வறேன்..😊"

ஷாரூக்கான் பல புகைப்படங்கள் இந்த போஸில் இருப்பதை பார்த்ததுண்டு.

ஷாரூக்கானின் படமொன்றை நீலன் 
உடனே அனுப்பி விட்டார்.

154th, 155th Episodes Cinema Enum Bootham


154th, 155th Episodes

R.P. ராஜநாயஹம்
"சினிமா எனும் பூதம்"
தொலைக்காட்சி தொடர்

முரசு டிவியில்
10.11.2024 ஞாயிற்றுக்கிழமை காலை எட்டரை மணிக்கு

17.11.2024 ஞாயிற்றுக்கிழமை காலை
எட்டரை மணிக்கு

டணால் K.A. தங்கவேலு

T.R. ராமச்சந்திரன்

......

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்
 ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது.

Nov 3, 2024

வேடிக்க -24

வேடிக்க - 24

03.11.2024
மாலை மணி 6.30 
பெசண்ட் நகர் பீச்

வேடிக்க பாக்றப்ப

மு.மேத்தாவை அடையாளம் கண்டு சந்திக்க வாய்ப்பு.

'கண்ணீர் பூக்கள்' மு.மேத்தா

காந்தி பற்றி 'உன்னை நினைக்கும் போதெல்லாம் நான் அழுது விடுகிறேன்'

'விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடு தான்'

கல்லூரி ஆங்கில இலக்கிய படிப்பின் போது 
அத்து மீறி குறுக்கிட்ட தமிழ் புதுக்கவிதை தொகுப்புகள் 
அபி மௌனத்தின் நாவுகள், நா.காமராசன் 'கறுப்பு மலர்கள்' 
மீரா ' கனவுகள்+கற்பனைகள் - காகிதங்கள்', 
மு. மேத்தா கண்ணீர் பூக்கள்.

'எதிர்காலத்தில் மு.மேத்தாவும் கவிதை எழுதலாம்' வெங்கட் சாமிநாதன் கிண்டல்.

ரஜினி வேலைக்காரன் - இளையராஜா
கொடுத்த வாய்ப்பு ஆறு பாடல்கள்.

'சிங்காரமா ஊரு… இது
சென்னையின்னு பேரு
ஊரச் சுத்தி ஓடுதையா
கூவம் ஆறு!'

உதயகீதம் 'பாடு நிலாவே  தேன்கவிதை' 

'சிட்டு பறக்குது குத்தாலத்தில்' பாடல்
கார்த்திக் 'நிலவே முகம் காட்டு' 
இளையராஜா 

'மேலூரு மாமன்' 
மக்களாட்சியில் 
இளையராஜா

விக்ரம் ' காசி' யில்
'என் மன வானில் சிறகு விரிக்கும் வண்ணப்பறவைகளே'

சங்கர் கணேஷ், எஸ்.ஏ. ராஜ்குமார் மெட்டுக்கும் பாடல்.

எம்.எஸ். வி இசைக்கும் பாட்டு எழுதியிருக்கிறாராம்.

மு.மேத்தா கேட்டார் 'கலைஞர் டிவியில் உங்களுக்கு 'சினிமா எனும் பூதம்' சீரியலுக்கு மாதச் சம்பளம் எவ்வளவு?' 

இன்று காலை ஒளிபரப்பானது 'சினிமா எனும் பூதம்' 153வது எபிசோட்.