Share

Oct 3, 2024

லப்பர் பந்து

லப்பர் பந்து

தினேஷை லப்பர் பந்தில் பார்க்கும்போது ஓவியர் நடேஷ் ஞாபகம்.
கூத்துப்பட்டறையில் தினேஷ் எலக்ட்ரிகல் வேலை பார்த்த போது நடேஷ் கண்டபடி திட்டி அவமானப் படுத்தியிருக்கிறார். நடேஷ் அனுமானம்: 'தினேஷ் அதை எப்போதும் மறந்து விடவே முடியாது'.

ஹரிஷ் கல்யாண் பார்க்க ரொம்ப பழைய  வி.வி. சடகோபன் சாயல் கொஞ்சம் தெரிகிறது. 
பார்க்க ஜி.என்.பி போல சடகோபன் அழகான சங்கீத வித்வான். திரைப்பட நடிகர். 

லப்பர் பந்து தினேஷின் தீர்க்கமான பார்வை வித்தியாசம். தீர்க்கப்பார்வை பெரும்பாலும் நடிகர்களுக்கு strain தரக்கூடியது. ஆனால் தினேஷ் இயல்பாக தீர்க்க பார்வை. சித்தர் பார்வை.

கதாநாயகி ஸ்வாசிகா பிரகாசமான பெர்ஃபாமன்ஸ். யசோதை பூமாலை  குடும்பம் மகள் மாமியார், அம்மா எல்லாம் முழு ஜீவனோடு படைக்கப்பட்ட பாத்திரங்கள்.

சஞ்சனா 'இனிமே எவனும் பொண்ணு பாக்க இங்க வரக்கூடாது'ன்னு அம்மா அப்பாவை எச்சரிக்கிற காட்சி.

ஹரிஷ் கல்யாண் செய்த அன்பு ரோல் கவினோ, அசோக் செல்வனோ செய்து விடக் கூடியது.
ஆனால் பூமாலை ரோலில் தினேஷ் பொருந்திய அளவுக்கு வேறு நடிகரை நினைத்து பார்க்க முடியாது. 

தேவதர்ஷினிக்கு மெய்யழகனில் அரவிந்த் சாமிக்கு ஜோடி. லப்பர் பந்து படத்தில் கணவராக யாரோ முகம் தெரியாத பெரியவர். ஆர்ட்டிஸ்ட் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.  கூட நடிப்பவர் பற்றி பேதம் பார்க்காமல் தெளிவாக நடிப்பை காட்டுவது விசேஷம். எண்ணெய் விளம்பரத்தில் ரோபா சங்கருடன் வருவார்.

காளி வெங்கட், பால சரவணன் கதாபாத்திரங்கள் முழுமையான பரிமளிப்பு. 

தமிழரசன் பச்சமுத்து பிரமிக்க வைக்கும் இயக்குநர்.
திகட்டாத வசனம்.
அமீர் கான் லகானுக்கு அப்புறம் சுவாரசியமான கிரிக்கெட் படம்.
ஆனால் இந்த லப்பர் பந்து கிரிக்கெட் பற்றியது மட்டுமல்லாத பன்முகத்தன்மை கொண்டது. பற்பல வீச்சுகள்.

https://www.facebook.com/share/p/WfnfiP7x4q2HKUb7/?mibextid=oFDknk

https://www.facebook.com/share/p/jzie5793pKCkSM6Z/?mibextid=oFDknk

https://www.facebook.com/share/p/2j8s23PeJ4PB1BKL/?mibextid=oFDknk

Oct 1, 2024

நம்பிக்கை இல்லா தீர்மானம்

தீர்மானம் 

தள்ளாத முதிய பெரியவர்.
மகனால் பெருந்துயர் அனுபவித்தவர்.
கடுமையான கருத்து வேறுபாடு.
புத்திரனிடம் அடி வாங்குவது 
எத்தனை துரதிர்ஷ்டம்?

நெஞ்சே ரணமான நிர்க்கதியான நிலை.
ரொம்ப படுத்தி எடுத்து விட்டான்.
தண்ணிய போட்டுட்டு தெருவில நின்னு கண்டபடி வெண்ட வெண்டயா திட்டுவான்.

முதுமையில் நிம்மதியிழந்த பெரியவர் வெறுத்துப் போய் சொன்னார்
"அவனை வீட்டை விட்டு போகச் சொல்லிட்டேன்"

 அப்படி நடக்கவில்லை. 
தொடர் துயர்.
Filial ingratitude.


அருவருப்பாக குமுறும் மனதை வெளிப்படுத்தினார்.

"இவன் எனக்கு பெறந்தவனே இல்ல."

"நல்லா தெரியிது. சந்தேகமே கிடையாது. இவன் எனக்கு பெறந்தவனே இல்ல."

"கொழந்த பெறந்தப்ப பிரசவ ஆஸ்பத்திரியில் ஏதோ தவறு நடந்திருக்கு.
எங்க கொழந்தக்கு பதிலா கவனக்கொறைவா வேற கொழந்தய மாத்தி வச்சிருக்காங்க. சந்தேகமே இல்ல. இவன் எனக்கு பொறந்தவனே இல்ல. நல்லா யோசிச்சித்தான் தீர்மானமா சொல்றேன்."

மெய்யழகன்

மெய்யழகன் 

ஆரம்பத்தில் கண்ணை மூடி 'அத்தான் நான் யாருன்னு சொல்லுங்க " என்று உற்சாகமாக மாப்ள கேட்கும் போதே கண்ணைத் திறந்தவுடன் 
கடைசியாக படத்தில் வருகிற உருளக்கிழங்கு கதையை சொல்லி  அத்தான் நினைவில் மெய்யழகன் ஞாபகம் வந்திருக்க வேண்டும்.
 இயல்பாக அப்படித்தான்
இது மாதிரி சூழலில்
எங்கேயும் எப்போதும் நடக்கும்.
( இங்கே அப்டின்னா கதையே காலியாயிருக்குமேங்க. )
படத்தை இன்னும் மிக பிரமாதமாக வேற ரூட்ல கொண்டு போயிருக்க முடியும். 

அரவிந்த் சாமிக்கு இவ்வளவு super ego தேவையேயில்லை. கார்த்தியிடம் பட்டென்று ஞாபகம் வரவில்லையேன்னு 
சொல்லியிருந்தா மாப்ள அத்தானிடம் கடைசியில் பேசுகிற வசனங்கள் முதலிலேயே வந்திருக்கும்.
'அவன் யாருன்னு கண்டு பிடிக்க முடியல'ன்னு படம் பூரா அரவிந்த் சாமி தவிச்சி தக்காளி விக்கணுமா? ஓவர் பில்டப்.
கல்யாண வீட்ல ராஜ்கிரண்ட்ட கேக்கவே முடியலன்றது வேடிக்க.
ஊருக்கு வந்தப்புறம் ஃபோன் போட்டு கேட்டிருந்தா ராஜ்கிரண் தெளிவா சொல்லியிருப்பார். ஜவ்வா இழுக்கணுமா?

ரொம்ப காலத்துக்கு அப்புறம் ரெண்டு ஜீவனுள்ள கதாபாத்திரங்கள்.
கார்த்தி "பச்சக்" என்று மனதில் ஒட்டிக்கொண்டு விட்டார். 
என்னா பெர்ஃபாமன்ஸ். 

"கொஞ்சம் தள்ளி இன்னொரு லாட்ஜ் இருக்கு. இவ்வளவு நீட்டா இருக்காது."

Zorba the Greek ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
அரவிந்த் சாமிக்கு கார்த்தியிடம் கிடைக்கிற தரிசனம். 
சோர்பா படைத்த கலைஞன் கஸான்சாகிஸ்.
படமாக வந்த போது ஆந்தணி க்வின்.

 அரவிந்த் சாமி பிரமாதமான Scene stealer. செம்ம. பேசாமலேயே கூட கலக்குகிறார். 

மணிரத்னம் 'கடல்' பார்த்தப்பவே நிறைய்ய பயன்படுத்தப்பட வேண்டிய நடிகர் என்று குறிப்பிட்டதுண்டு.  
கமல் ஹாசனுடன் அரவிந்த் சாமி நடிக்கவேயில்லையே 
- ஆதங்கம் வெளிப்படுத்தியதுண்டு.

மாடு பாம்பு த்ரில்.
சைக்கிள்.

கார்த்தி எடுக்கிற வரலாற்று பாடம்
சரி தான்.
The quote by Goethe 
that appears in Sophie's World ( author- Jostein Gaarder)
is, "He who cannot draw on three thousand years is living from hand to mouth".

இடைவேளைக்கு பிறகு வருகிற தொய்வு 
கதையில் விழுந்து விட்ட ஆரம்ப ஓட்டையால். வேற வழியில்ல. No go.