Share

May 31, 2023

சினிமா எனும் பூதம் 79th, 80th Episodes


79th, 80th Episode 

R.P. ராஜநாயஹம்
'சினிமா எனும் பூதம்' நிகழ்ச்சி
முரசு டிவியில்
காலை எட்டரை மணிக்கு

04. 06. 2023 ஞாயிற்றுக்கிழமை
79வது எபிசோட்

11. 06. 2023 ஞாயிற்றுக்கிழமை 
80வது எபிசோட் 

பாரதிராஜா

K. பாக்யராஜ்

May 29, 2023

R.P. ராஜநாயஹம் நூல்கள் வெளியிடும் ஜெய்ரிகி சாய் ரமணா

ஜெய்ரிகி பதிப்பக உரிமையாளர் சாய் ரமணா :

பெங்களூரு இரவிச்சந்திரன் புத்தகம் வெளிவர முடிவு எடுத்தாகவிட்டது.

சரி யாரு அவரை பற்றி எழுதியிருக்கிறார்கள் என பார்க்கலாம் என்று தேடியபொழுது அகப்பட்ட பெயர் ராஜநாயஹம்.

அவரை தொடர்பு கொள்ளலாம் என நினைத்தபோது முடியவில்லை, புத்தகம் வெளிவந்தது.

 சரவணன் மாணிக்கவாசகம் அவர்களிடம் கொடுக்க சென்றபோது, "இவர் புத்தகத்தை நிறைய இடங்களில் தேடியிருக்கிறோம் நானும் ராஜநாயஹம் அவர்களும்" என்றார்.

"சார் அவர் முகவரி குடுங்க, அவருக்கும் புத்தகத்தை அனுப்பி வைக்கலாம் "

"இல்லைங்க அவர் வீடு மாத்துறார், இப்ப முடியாது, அப்புறம் பார்க்கலாம்.."
கிளம்பி வந்துவிட்டேன்,
அதனை மறந்தும்விட்டேன்.

அடுத்து ஒரு ஆறு மாதம் கழித்து சரவணன் மாணிக்கவாசகம் அவர்களிடம் இருந்து ஓர் அழைப்பு

சாய்.. "நண்பர் R.P. ராஜநாயஹம் மூன்று புத்தகங்கள் பதிப்பிக்க வேண்டும் என்கிறார், நீங்க பண்ணி தர முடியுமா?

என்னது முடியுமாவா ? அவர் எண்ணை அனுப்புங்கள்,பேசுகிறேன்..

எதிர்முனையில் ராஜநாயஹம், சாய் புத்தகம் பதிப்பிக்க முடியுங்களா...?

"சார், ஒரு வருஷமா உங்களை தேடி கொண்டிருக்கிறேன், கண்டிப்பாக பண்ணிடலாம்" என சொல்லி, இதோ அவரது முத்தான மூன்றில் முதலில் "தழல் வீரம்".

நான் அவரின் சினிமா என்னும் பூதம் ரசிகன், அவரது புத்தகங்கள் 
பதிப்பிப்பது என்பது இன்னும் சிறப்பு.

வாங்குங்கள், வாசியுங்கள், மகிழுங்கள்..

May 28, 2023

இவரை நினைக்கும்போது ஏன் கண் கலங்குகிறது?


ராஜநாயஹம் - இவரை நினைக்கும்போது
 ஏன் கண் கலங்குகிறது?


"R.P. ராஜநாயஹம்.

சின்ன வயதில் சாந்தி என்றொரு நரிக்குறவர் பெண். அக்காவின் சிநேகிதி. வருடத்திற்கு ஓரிரு முறை எங்கள் கிராமத்திற்கு பாசி மணிகள் ஊசி சீப்பு விற்க வருவார். எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசி ஆசுவாசப்படுத்திக்கொள்வது வழக்கம். பேசிக்கொண்டிருக்கும்போது கையில் மணிகளைக் கோர்த்து பிண்ணிக்கொண்டிருப்பார். கலர் கலராக கோர்த்து எப்படிப் பின்னுகிறார்? சடுதியில் எப்படி மாலையாக மாறுகிறது? ஆச்சரியப்பட்ட பிள்ளைப்பருவம். 

   ஆர்ப்பி சாரின் எழுத்தைப் படிக்கும்போது அந்த ஆச்சரியம் எனக்கேற்பட்டதுண்டு.  
மணிகளைக் கோர்ப்பதுபோல எப்படி லாவகமாக எழுதுகிறார்?
 அதனை முடிக்கும் போது ஒரு மாலையை கட்டிய நேர்த்தி! 

என்னவகை எழுத்து இது?

இலக்கியம், அரசியல், அறிவியல், உளவியல், சினிமா,இசை, ஓவியம்.....என எல்லாவற்றையும் இணைத்து சுவாரஸ்யமாக  ஒரு தேர்ந்த கதை சொல்லியைப்போல....சொல்லும் புதுவகை எழுத்து.

ஓரிரு முறை பார்த்திருப்பேன்.

என் பேரைச்சொல்லிக் கூப்பிடும் அளவிற்கு அவரது நண்பன். நான் செய்த பேறு.

இவரை நினைக்கும்போது 
ஏன் கண் கலங்குகிறது?"

- வாசுதேவன் காத்தமுத்து

Vasudevan Kathamuthu

May 27, 2023

R.P. ராஜநாயஹம் தழல் வீரம் - சரவணன் மாணிக்கவாசகம் முன்னுரை


R.P. ராஜநாயஹம் 'தழல் வீரம்' நூலுக்கு சரவணன் மாணிக்கவாசகம் முன்னுரை 

ப. சிங்காரத்தைப் பார்க்கப் போயிருந்தோம்.  தமிழுக்கு இரண்டு நல்ல இலக்கிய நூல்களைக் கொடுத்தவர்,  முதுமைவாடை வீச அமர்ந்திருந்தார்.  அவரது படைப்புகள் குறித்து எதுவும் சிலாக்கியமான அபிப்ராயம் அவருக்கில்லை.  அவரைப் பார்த்துவிட்டு  வந்த பிறகு,  அன்றைய பொழுது முழுக்க சிங்காரம் குறித்து, புயலிலே ஒருதோணி குறித்து நெருங்கிய ஒருவரின் துயரத்தைச் சொல்வது போல் அங்கலாய்த்துக் கொண்டே இருந்தார்.  அது தான் ராஜநாயஹம்.

இந்தத் தொகுப்பில் தான் மிக முக்கியமான கட்டுரையான 'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை"  அக்கட்டுரையின் பின்னான அரசியல் என்ற இணைப்புக் கட்டுரையும் இருக்கின்றன.
  " ஊட்டிக்குப் போகாமல் சின்னவனின் சைக்கிளை சரி பண்ணியிருக்கலாம்"  என்று முடியும் கட்டுரை இயலாமையையும், வேதனையையும் மட்டும் சொல்லவில்லை. 
தமிழ் இலக்கியவாதிகள் தீவிர வாசகர்களுக்கு கையளிக்கும் பதில்மொய் வரிசையையும் சொல்கிறது. 

 இன்னொரு பிரபல எழுத்தாளர் நாங்கள் இருவரும் இருக்கையில் தான் சொன்னார் 
 " வாசகன் என்பதற்காகக் கிரீடம் எல்லாம் நாங்கள் வைக்க முடியாது". 

 இன்னமும்,  எல்லாக் காலங்களிலும் எழுத்தாளர்களை நேரில் சந்திக்க வாசகர்கள் சாரைசாரையாய் போய்க் கொண்டிருக்கிறார்கள்.  As flies to wanton boys நாம் எழுத்தாளர்களுக்கு.

The Catcher in the Rye இருவரில்  யார் யாருக்குப் பரிந்துரை செய்தோம் என்பது நினைவிலில்லை.   2012ல் இந்த அமெரிக்க நாவல் குறித்து ராஜநாயஹம் எழுதி இருக்கிறார் என்பது நினைவிலிருந்தது. 

 தமிழில் பலரால் மறக்கப்பட்ட,  கிருஷ்ணன் நம்பி, சார்வாகன், கோபி கிருஷ்ணன், சம்பத்  போல யாருடைய பெயருக்குப் பின்னாலும் Slash ராஜநாயஹம் என்று டைப்செய்து பாருங்கள், கண்டிப்பாக ஒரு பதிவேனும் இருக்கும்.  இத்தொகுப்பிலும் சம்பத், கிருஷ்ணன் நம்பி குறித்து கட்டுரைகள் உள்ளன.  கிருஷ்ணன் நம்பியின் 'தங்க ஒரு கதை"  தமிழில் நல்லதொரு மாயயதார்த்தக் கதை.

கு.அழகிரிசாமி பற்றிய கட்டுரை கதைகளைப் பற்றி மட்டும் பேசாது,  அவர் வெளியில் செருப்பை விடும் பாணியையும் சொல்கிறது. 

1993ல் ஏ.வி.எம்.ராஜனின் பிரச்சாரம் குறித்த கட்டுரையில்,  1965ல் "என்ன தான் முடிவு' படத்தில் ஏசுவைப்பற்றி அவர் சொல்வதும் வருகிறது.  நினைவுகள் கால் நூற்றாண்டைத் தாண்டி ஒன்றுடன் ஒன்றை முடிச்சிடுகின்றன.  நினைவுகள் சிலுவைகளாவது இப்படித்தான்.  

இத் தொகுப்பில் இன்னும் எத்தனையோ பேர் வந்து போகிறார்கள்,  அவர்களை சுவாரசியமாக்குவது இவர் எழுத்து.

ஒன்றை வாசிக்கையில் வேறொன்று நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாதது.  அது பிரத்தியேக வாசிப்பு அனுபவம்.  அதைத் தான் Mobi-dick - வாடிவாசல் கட்டுரை சொல்கிறது. 

  போர்ஹேயின் கதைகள் குறித்த கட்டுரையைப் படித்த உடனேயே,  மதுரை சோமுவின் இசை பற்றிய கட்டுரை.   சட்டென்று மாறும் சூழல் சர்ரியல் உலகை நினைவுறுத்திப் பின் சுயநினைவுக்கு வருகிறோம். 

 இது தான் இவர் எழுதுவார் என்பதை யாரும், எப்போதும் யூகிக்கமுடியாது.  அதுவும் தான் ராஜநாயஹம்.

R.P.ராஜநாயஹம் 'தழல் வீரம்' வெளிவருகிறது


R.P. ராஜநாயஹம் எழுதியுள்ள நூல்

தழல் வீரம்

விரைவில் வெளிவருகிறது.

அசோக் சாய் ரமணாவின் 
ஜெய்ரிகி வெளியீடு

May 26, 2023

A barren sceptre .. வளைந்த செங்கோல்..


ரொம்ப சிறுவனாக பள்ளியில் தமிழ் பாடத்தில் படித்த வரி 'நீதி வழுவிய மன்னன் செங்கோல் வளைந்தது'.

கண்ணகி வழக்காடி வாதாடி ... The first ever advocate?!

The barren scepter represents 
poor power as a king. 

"Upon my head they placed a fruitless crown,
And put a barren scepter in my gripe"

- Macbeth

"Bloody-sceptered"

- Macduff

"Give me a staff of honor for mine age,
But not a scepter to control the world. 
Upright he held it, lords, that held it last."

Titus Andronicus

Shakespeare

May 23, 2023

Friendship

முத்து  அண்ணாமலை 
சரத்பாபு friendship தான் கண்ணுக்கு தெரியுதா?

சலங்கை ஒலி கமல் - சரத்பாபு?

சாவு

நெறய்ய சாவு  பாத்த  பெறவு தான் சாவு

May 17, 2023

பூஜ்ஜியத்துக்குள்ளே ..

அந்த 'வளர் பிறை'யில் சௌந்தர்ராஜன் பாடிய பாடலை  பள்ளி, கல்லூரி படிக்கும் போதே பாடுவேன். 
Favourite பாடல்களில் இதுவும் உண்டு.

'பூஜ்ஜியத்துக்குள்ளே 
ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனைப் புரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்' - கண்ணதாசன்

இப்போதும்  தான் இருபது வருடங்களாக கடவுள் நம்பிக்கை கிடையாது என்றாலும் இப்படி பாடல்களை பாடுவேன்.

'பச்சை மாமலை போல் மேனி,
பவளவாய் கமலச்செங்கண்'

'மலர்களிலே பல நிறம் கண்டேன், 
திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்'

'கோபியர் கொஞ்சும் ரமணா,
கோபாலகிருஷ்ணா'

 ' அம்பலத்து நடராஜா, உன் குணத்தை காட்டுதற்கு என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனய்யா?'

' பாஞ்சாலி உன்னிடத்தில்
சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில்
கீதை கேட்டான் '

பத்து வருடங்களுக்கு முன்பு பள்ளியில் communicative trainer (2013 to 2015)ஆக இருக்கும் போது வெள்ளிக்கிழமை பிரார்த்தனை கூட்டத்தில் பாடிய போது ஆசிரியர்களும் குழந்தைகளும் பாராட்டியதுண்டு. 

நெகிழ்ந்து அழுத குழந்தைகள் நிறைய்ய 

பள்ளியில் கூட்டிப் பெருக்கும் பெண்களும் கூட ' நீங்க பாடும் போது கண் கலங்கி விட்டது ' என்பார்கள்.

CBSE பள்ளியில் ரம்ஜான் கொண்டாடிய போது 'கூன் பிறையை போற்றிடுவோம், குர் ஆனை ஓதிடுவோம்' (மு.க. முத்து பாடல்) பாடினேன். நான்காவது படிக்கும் முஸ்லிம் குழந்தை தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.

Morning prayerல் ' பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம், தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மெளனம், மெளனம் ' பாடும் போது உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் கண் கலங்கி குரல் தளுதளுத்தது.
பல குழந்தைகள் கண்களில் கண்ணீர்.

பாடம் நடத்த மூன்றாம் வகுப்பு போன போது பெண் குழந்தையொன்று " Sir, when you sang about mother, I controlled my tears. I went to the rest room and cried"

2002ல் திருச்சியில் இருந்த போது பள்ளி நண்பன் ஒருவனை பார்க்க போயிருந்தேன். அங்கே ஒருவர் வந்தார். அவரிடம்  அறிமுகம் செய்யப்பட்ட போது அவர் முக மலர்ந்து " நீ சின்னப் பையனாக Saint Joseph's  'அன்பு என்பது தெய்வமானது ' பாடியதை  மறக்க முடியுமா?" என்றார்.
சிறுவனாக Saint Joseph's ல் ஏழாம் வகுப்பு படித்த போது
அவர்  அங்கே பத்தாம் வகுப்பு படித்தவராம். 

கூத்து பட்டறையில் மாஸ்டராக நான்கு வருடங்கள் இருந்த போதும் பாடியிருக்கிறேன்.

ஆடிய காலும் பாடிய வாயும் எப்போதும் நிறுத்தாது.

May 12, 2023

மே மாத காலையில் பனி


12.05.2023
காலை ஆறு மணி

மே மாத பனி

சித்திரைப் பனி

அக்னி நட்சத்திரக் காலத்திலும் பனி

மாம்பாக்கம் 

ஜன்னல் வழி காட்சி 

ராபர்ட் டி நீரோக்கு 79 வயசுல 7வது கொழந்த

ராபர்ட் டி நீரோ 79 வயசில
 ஏழாவது குழந்தைக்கு
 அப்பா ஆயாச்சி.

Courtesy: Times of India
Chennai Times 11. 05. 2023

எந்த பொம்பளைக்கு  கொழந்தன்னு
ராபர்ட் டி நீரோ சொல்லவேயில்ல.
இதான்யா இவன் கிட்ட 
ஒரு கெட்ட பழக்கம்.
.....

கின்னஸ் சாதனை என்னன்னா
லெஸ் கோல்லி ன்னு ஆஸ்திரேலியா பெரியவர் 92 வயிசில குழந்தைக்கு அப்பாவானதாக..

.....

Dec 24, 2008

கிளர்ந்தெழும் தாபம் - 14

Carnal thoughts-14

ஏழு வயது பையன் .அவன் வயதே ஆன சிறுமி .இவன் அந்த சிறுமியின் மேல் இயங்கிகொண்டிருந்தான் . சிறுவனுடைய அம்மா தான் பார்க்க நேர்ந்தது .
"அவ தாம்மா மேலே படுக்க சொன்னாள்." சிறுவன் பதறிபோய் ஜட்டியை அவசரமாக போட்டுக்கொண்டிருந்த சிறுமியை காட்டினான் .
"என்னடி இது "
"எங்க அம்மா மேலே எங்க அப்பா படுப்பாங்க , ஆண்ட்டி " களையிழந்த முகத்துடன் சிறுமி .

................
.......

Shuffle Along Orchestra மூலம் பெரும்புகழ் பெற்ற இசைஞானி யூபி பிளேக் (Eubie Blake) தன் 97 வயதில் ஒரு கேள்வியை எதிர்கொண்டார் .

"காம இச்சை,காம உந்துதல் ஒரு மனிதனுக்கு எந்த வயது வரை இருக்கும் ?" என்ற இந்த கேள்வி 
அவர் முன் வைக்கப்பட்ட போது எரிச்சலுடன் பதில் சொன்னார் :
" நீங்கள் இந்த கேள்வியை என்னை விடஅதிகமாய் வயதானவரிடம் அல்லவா கேட்கவேண்டும் . "

.....

Aug 3, 2014

கிளர்ந்தெழும் தாபம் - 39

Carnal Thoughts - 39

 

சித்தப்பா ஜகதலப்ரதாபன் வருகிறார். நகைக்கடை பஜாரில் உள்ள தன் அண்ணன் மகன்  கடைக்குள் நுழைகிறார். கல்லாவில் அமர்ந்திருக்கும் சண்முகம்" வாங்க சித்தப்பா!"
"சம்முவம் !"
"சொல்லுங்க சித்தப்பா!"
கடையில் சண்முகத்தை பார்க்கவந்திருக்கும் என்னையும்பார்க்கிறார்.
"தொர! (துரை) பேராண்டி!"
நான் " தாத்தா!"

"காட்டுல வேல ஜாஸ்திய்யா! இந்தப்பக்கம் வரமுடியல"
சண்முகம்"என் தம்பிய அப்பப்ப விவசாயத்தயும் பாக்கச்சொல்லுங்க!''
சண்முகத்தின் சித்தப்பா மகன் மெத்தப்படிச்ச இஞ்ஜினியர். உள்ளூரில் பில்டிங் காண்ட்ராக்டர்.
சின்னக்கடை வீதியில் உள்ள சித்தப்பாவின் காம்ப்ளக்ஸில் தான் இஞ்சினியர் தம்பியின் ஆஃபிஸ்.
"உன் தம்பியா! அவன் பண்ணைக்கு வராம இருந்தா போதும்யா"
"ஏன்?"
" ஐய்யோ! அவன் வந்தா உடனே அங்க வேலை பாக்கற பொட்டப்பிள்ளங்கள வேலைக்கு வேண்டாம் நீ போ.. நீ போன்னு சண்டை போட்டு நிறுத்திடுறாம்ப்பா... இப்ப காட்டு வேலக்கு பொட்டப்பிள்ளக கிடைக்கிறது எவ்வளவு சிரமம்? உனக்குத் தெரியும்ல.. நான் என்ன பாடு பட்டு வேலைக்கு பிள்ளகள கொண்டு வர்றேன்..  அங்கங்க கிராமம் கிராமமா அலஞ்சி காட்டு வேலக்கு  பொட்டப் பிள்ளகள கொண்டு வர்றேன். இவன் திடீர்னு ஒரு நாள் பண்ணைக்கு வர வேண்டியது.. வந்தவுடன அந்தப்பிள்ளக மேல எரிஞ்சி விழுரான்.. நீ வேலக்கு வேண்டாம் போன்னு ஒவ்வொருத்தியா சண்ட போட்டு அனுப்பி விட்றான்... உடனே கார்ல ஏறிப் போயிடறான்.நான் காட்டு வேலைக்கு பொம்பளையாள் கிடைக்காம என்ன பாடு படுறேன்னு ஒந்தம்பிக்கி தெரியமாட்டேங்குதேப்பா... சம்முவம்..நீ கொஞ்சம் தம்பிக்கு புத்தி சொல்லுப்பா.. டேய்.. சித்தப்பாவ ஒழுங்கா விவசாயத்த பாக்க விட்றான்னு சொல்லுப்பா.. உன் சித்தி தாம்ப்பா சும்மா இருக்காம தம்பிக்கிட்ட
 " போடா காட்டயும் போய் பார்றா... "ன்னு உசுப்பி விடுறா...  உன் சித்திக்கும் புத்தி சொல்லுப்பா..."

Deconstruction ! 
ஜகதலப்ரதாபன் கிளம்பிப்போனவுடன் சண்முகம் சொல்கிறார்: தொர! இப்ப என் சித்தப்பா என்ன சொல்லிட்டுப்போறாரு.. புரியுதா? "
Subtext!
ஜகதலப்ரதாபன் மாதிரியே குரலை மாற்றி சொல்ல ஆரம்பிக்கிறார் சண்முகம். " சம்முவம்! நான் காட்டுக்கு பண்ணைக்கு விவசாயம் பாக்க மட்டுமாப்பா போறேன். டொக்கு போடவும் தானேப்பா.. நான் இந்த வயசில டொக்கு போட என்ன பாடு படுறேன் தெரியுமா? ஏம்ப்பா... டொக்கு போட பொம்பளையாளு கிடைக்கிறது எவ்வளவு சிரமம்? நான் டொக்கு போட பொட்டைப்பிள்ளக கிடைக்காதான்னு கிராமம் கிராமமா  நாயா அலஞ்சி பண்ணைக்குகொண்டு வந்தா.. தம்பி இத கண்டு பிடிச்சி திடீர்னு பண்ணக்கு வந்து எங்க அப்பா டொக்கு போடத்தான உன்னை கொண்டு வந்துருக்காருன்னு சண்ட போட்டு ஒவ்வொருத்தியா
விரட்டி விட் ற்றாம்ப்பா...   உன் சித்தி தாம்ப்பா தம்பிய " காட்டுக்குப் போய் அங்க இருக்கறவளயெல்லாம் விரட்டி விடுறா.. ஒங்கப்பன் வீட்டுக்கே வர மாட்டங்கறான்.. உனக்கும் கல்யாணமாகி நீயும் பிள்ள பெத்துட்ட.. இன்னும் ஒங்கப்பன் அடங்க மாட்டேங்கிறான... நானும் நாப்பது வருசமா அவன் சேட்டய பொறுத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.. இன்னும் கிழவன் அடங்க மாட்டேங்கறானே!" ன்னு உசுப்பி உசுப்பி உடுறா!சம்முவம்! நீ தம்பிக்கிட்ட சொல்லுப்பா.. சித்திக்கிட்டயும் சொல்லுப்பா..  ஏழு வயசில எந்திரிச்சது எழுபது வயசுல மடங்காதுன்னு புத்தி சொல்லுப்பா.."

.....

Apr 17, 2022

எல்லாம் அமஞ்சிகற்து தான், வாச்சிக்கற்து தான்

Anthony Quinn

86 வயது வரை ஆந்தணி க்யின் கொண்டாட்டமான வாழ்க்கை.

 12 குழந்தைகள் இவருக்கு. 

அவருடைய செக்ரெட்டரி காத்தரினுக்கு கூட இரண்டு குழந்தைகள் கொடுத்தார்.
 இதில் முதல் குழந்தை பிறக்கும் போது ஆந்தணி க்யினுக்கு 78 வயது. 
81 வயதில் அடுத்த குழந்தைக்கு தகப்பனாகி விட்டார்.