இயக்குநர் நலன் குமாரசாமி என்னை பார்க்க வேண்டும் என்று நான்கு மாதங்களுக்கு முன் அழைத்திருந்தார்.
டாக்ஸி அனுப்பியிருந்தார்.
மாம்பாக்கத்தில் இருந்து அண்ணா நகருக்கு நலன் அலுவலகம் போனேன்.
இயக்குநர் நலன் இரண்டு வருடங்களாக என்னைப்பற்றி எப்போதும் குறிப்பிடுவாராம்.
ஒரு நல்ல ரோல் ராஜநாயஹத்திற்கு தர வேண்டும் என்பாராம்.
அஸோசியேட் டைரக்டர் ராமசுப்ரமணியன் சொன்னார்.
நலன் குமாரசாமி என்னிடம் ' இந்த ரோலுக்கான சாய்சில் இருக்கும் நடிகர் நானா படேகர். கார்த்தி தான் படத்தின் கதாநாயகன்'
என்னை நடிக்க வைத்து மூவி கேமராவில் படம் பிடித்தார்கள்.
மதிய உணவு அங்கேயே ஏற்பாடு செய்தார்கள்.
மீண்டும் ஷுட் தொடர்ந்து முடிந்தது.
இயக்குநர் நலன் குமாரசாமி ' இதில் என் முடிவு மட்டுமே இல்லை. கதாநாயகன், தயாரிப்பு தரப்பும் தான் முக்கிய கதாபாத்திரங்களுக்கான நடிகர்களை தீர்மானிப்பார்கள்.'
' ராஜநாயஹம் சார், உங்களுக்கு unique face. எந்த திரைப்பட நடிகரோடும் உங்களை ஒப்பிடவே முடியாது.
உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தால் சினிமாவில் ஒரு ரவுண்டு வரமுடியும். தனித்துவமான நல்ல முகம் '
நலனுடைய அன்பும், இந்த அபிமானமும் கண்டு சிலிர்த்தேன்.
நான் சொன்னேன்
' இந்த கௌரவமே போதும் சார்.
இந்த பாத்திரம் எனக்கு கிடைக்காவிட்டாலும் நான் தாங்கிக் கொள்வேன். A slip between the cup and lip என்பதை நிறைய்ய பார்த்தவன்.'
மீண்டும் அதே டாக்ஸியில் மாம்பாக்கத்திற்கு அனுப்பி வைத்தார் நலன்.
அப்புறம் ஞாபகம் வந்தது. அவரோடு ஒரு ஸெல்ஃபி எடுத்திருக்கலாம். மறந்தே போனேன்.
இன்னொரு நாள் மீண்டும் என் வீட்டிற்கு அவருடைய அஸிஸ்டெண்ட்களை மூவி கேமராவோடு அனுப்பி வைத்தார்.
என்னை நடிக்க வைத்து படமெடுத்தார்கள்.
பல ஸ்டில்ஸ் மொபைல் போனிலும் எடுத்துக்கொண்டார்கள்.
அதன் பிறகு இன்று தான் நலனோடு செல் பேசினேன்.
நான் நடிப்பதாக இருந்த
கதா பாத்திரத்திற்கு சத்யராஜ் fix செய்யப்பட்டிருக்கிறார்.
நடிப்பதற்கு திரையுலக வாய்ப்பு பற்றி எப்போதும் எந்த பிரமையும் கிடையாது. நல்ல வாய்ப்பு என்பதெல்லாம் இதோடு முடிவுக்கு வந்து விட்டது. இதுவே முற்றுப் புள்ளி
https://m.facebook.com/story.php?story_fbid=1947373802142743&id=100006104256328&mibextid=Nif5oz
..
ராஜநாயஹம் முகத்தை ஓவியமாக வரைந்தவர்
பிரபல ஓவியர் முரளிதரன் கிருஷ்ணமூர்த்தி.