என் அம்மா எப்போதும் பேச்சிற்கிடையில் இயல்பாய்,பொருத்தமாய் பல சொலவடைகள் சொல்வார்.
1.தாங்குவார் கோடியிருந்தா தளர்ச்சிக்கேடு ரொம்பவாம்
2.சும்மாயிருக்கிற அம்மையாருக்கு அரைப்பவுன் தாலி காணாதாம்.
3. தரையில கிடந்தவன் பாய்க்கு வருவான். பாயில படுத்தவன் தரைக்கு வருவான்.
4. சாஸ்திரம் பார்த்தா சடலம் கூட எடுக்க முடியாது.
5. மறந்த சொத்து பிள்ளைகளுக்கு ஆவாது.
6.ஆட்டை அறுக்கும் முன்னே, காதை எனக்கு சுட்டுக் கொடுன்னானாம் ஒருத்தன்.
7.நூலோடு வந்தவ நூறோடு போவா
நூறோடு வந்தவ நூலோடு போவா.
8. கூத்துக்கு பிள்ளை பெத்து கோமாளின்னு பேர் விட்ட கதையால்ல இருக்கு.
9.யானைய குடுத்துடுவான். அங்குசத்த குடுக்க மாட்டான்.
10. உடம்பு ஒருத்தருக்கு பொறந்திருந்தா நாக்கு பல பேருக்கு பொறந்தது.
11. பீத்தல் ஆத்தோட போனா பிள்ளக்குட்டியெல்லாம் பின்னாடியே போச்சாம்!
12. சொக்கனுக்கு சட்டி அளவு
.........................................
http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html