தெலுங்குப் படம் ‘மனம்’. நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா இணைந்து நடித்து வெளி வந்துள்ளது. மூன்று தலைமுறை நடிகர்கள் அப்பா, மகன், பேரன் இணைந்து நடித்த படம் உலக சினிமாவில் இது ஒன்று மட்டுமே என்று பரவலான நம்பிக்கை இங்கே இருக்கிறது.
இன்று ‘தி இந்து’ செய்தித்தாளில் இந்து டாக்கீஸ் உலகத் திரை உலா விலும் இப்படியே குறிப்பிடப்பட்டுள்ளது!ஆனால் அது உண்மையல்ல. மூன்று தலைமுறை இணைந்து நடிப்பது 2014ல் நிகழ்ந்து விட்ட அதிசயம் என்ற பிரமை தவறாகும்.
1971ல் பிருதிவிராஜ் கபூர், ராஜ் கபூர், ரண்திர்கபூர் இணைந்து நடித்து
‘கல் ஆஜ் அவுர் கல்’ அதாவது 'நேற்று, இன்று, நாளை' என்ற பெயரில் ஒரு படம் பேரன் ரந்திர் கபூர் இயக்கத்தில் வந்துள்ளது. ரந்திர் கபூர் தான் கரிஷ்மா கபூர், கரீனா கபூர் இருவரின் அப்பா. ரன்பிர் கபூரின் பெரியப்பா.
ஜெயா டிவியில் நாகேஸ்வர ராவ் பேட்டி பார்க்க கிடைத்தது. என்ன அழகாக நாகேஸ்வர ராவ் தன் நினைவுகளைச் சொன்னார்! You should look gracefully old. முதுமையில் அழகு என்றால் என்ன என்பதை அவரது தோற்றம் உணர்த்தியது.
..........................................................................................................
O Mehbooba, O Mehbooba
ராஜ்கபூரின் இந்தி படம் 'சங்கம்' .இந்த படத்தில் அந்த காலத்திய மற்ற எல்லா இந்தி படங்கள் போல எல்லா பாடல்களும் ஹிட் தான்.
ஹிந்திப்பட ரசிகர்கள் ஒவ்வொருவரும் இதில் ஒவ்வொரு பாடலை பிடித்த
பாடலாக சொல்வார்கள்!
.
எனக்கு பிடித்த பாடல்
“ O Mehbooba , O Mehbooba
Tere Dil Ke Paas Hi Hai Meri Manzil-e-mashood
Voh Kaunsi Mehfil Hai Jahan Tu Nahin Maujood “
https://www.youtube.com/watch?v=FHOugjKQ_KU
இந்த ஒரு பாடலுக்கு " சங்கம் " படத்தில் வரும் பிற பாடல்கள் உறை போட காணாது .
பாடல் முகேஷ் பாடியது . இந்த பாடலை காதால் மட்டும் கேட்பது போதாது .அவசியம் கண் கொண்டு அந்த பாடல் காட்சியோடு தான் பார்த்து ரசிக்க வேண்டும் .
ராஜ் கபூர் அட்டகாசம் ரொம்ப உச்சம் . என்ன ஒரு
Lively Enthusiasm , spirit, activeness! ராஜேந்திர குமாருடன் படகில் ஏறிவிடும் வைஜயந்தி மாலாவை கொஞ்சமும் மனசை விடாமல் மற்றொரு படகில் ஏறி துரத்தி பாடும் ராஜ் கபூர் . அந்த பனி மூட்டமும் அழகான ஏரியும் .. காண இரு கண் போதவே போதாது .
பெண்ணாக இருப்பதென்பது ஒரு "பிழை" யல்ல என்றாலும் கூட குறைந்த பட்சமாக அவள் ஒரு "அசாதாரண விசித்திரம் . "
To be a woman, If not a defect, is at least a peculiarity.
மேற்கண்ட வார்த்தைகள் பெண்ணிய வாதியும் சார்த்தரின் இனிய தோழியுமான சிமோன் தி புவோ (Simone de Beauvoir) சொன்னதாகும் .
தான் கவர்ந்து செல்லப்படவேண்டிய விஷேச பரிசு என்றே தன்னை பற்றி பெண் நினைப்பவள் .
இதனை உணர்த்தக்கூடிய வைஜயந்தி மாலாவின் உணர்வும் , பாவமும் இந்த பாடலை மிகவும் உன்னத நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது . நான் இந்த பாடல் காட்சியை மட்டும் நூற்றுக்கணக்கான தடவை பார்த்திருக்கிறேன் . சலிக்கவில்லை .
பாடல் காட்சிகளில் ஷம்மி கபூரின் Arrogance பற்றி ஹிந்திப்பட ரசிகர்கள் அறிவர் . உண்மையில் அவர் அண்ணன் ராஜ் கபூர் இந்த ஒரு பாடல் காட்சியில் மட்டும் தம்பி ஷம்மியை மிஞ்சி விடுகிறார் .
பாடலை பாடும் முகேஷ் கூட தன்னுடைய எல்லையை மீறித்தான் கிஷோர் குமார் பாடுவதை போல படு குஷியோடு
Tere Dil Ke Paas Hi Hai Meri Manzil-e-mashoodஎன பாடியுள்ளார் .
முகேஷ் மிகவும் அமைதியாக பாடுபவராகத்தான் பெரும்பாலும் யார் மனதிலும் தோற்றம் தருவார் . ராஜ் கபூர் என்றாலே முகேஷ் நினைவில் வந்து விடுவார் . அந்த அளவுக்கு ஒரு அபூர்வ காம்பினேசன் .
“ Kis Baat Pe Naaraaz Ho, Kis Baat Ka Hai Gham
Kis Soch Mein Doobi Ho Tum, Ho Jaayega Sangam
O Mehbooba, O Mehbooba “
எனக்கு இந்தி தெரியாது . இந்தி பாடல்களுக்கு பெரும்பாலும் அர்த்தம் கூட தெரியாது தான் . அதனால் என்ன ?!
சமீபத்தில் எனக்கு ஒரு அனுபவம் . தமிழில் கூட ஒரு பாடல் வரி நான் நினைத்ததற்கு மாறாக வேறு வார்த்தைகள் இருந்ததை அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன் .
'ஹல்லோ மிஸ்டர் ஜமின்தார் ' படத்தில் பி பி எஸ் பாடிய " காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு " என் Favourite.
அதே படத்தில் மற்றொரு அருமையான பாடல் " இளமை கொலுவிருக்கும் ,இயற்கை மணமிருக்கும், இனிய சுவையிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகம் இல்லை உலகத்திலே " என்ற பாடல் . இதில் ஒரு சரணத்தில் வரும் வரிகளை " இன்று தேடி வரும் , நாளை ஓடி விடும் , செல்வம் சேர்ந்தபடி அமைந்திடுமா ? எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா ?" என நான் சிறுவனாய் இருந்த காலத்தில் இருந்தே பாடி வந்துள்ளேன் .
ஆனால் சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்னார்:
" செல்வம் சேர்ந்த படி அமைந்திடுமா " என்று கவிஞர் எழுதவில்லை " செல்வம் சிரித்தபடி அமுதிடுமா ?" என்று தான் எழுதினார் !"
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா?

........................................................................................
இந்தி திரையுலகம் ஒரு பாற்கடல்
"குடும்பம் ஒரு பாற்கடல். லக்ஷ்மி,உச்சரவரஸ், ஐராவதம் அதிலே தான் . அமிர்தமும் அதிலே தான். ஆலகால விஷமும் அதிலே தான்." என்றார் லா.ச.ரா.
இந்தி திரையுலகம் பற்பல குடும்பங்களின் கதம்பம்.
அதில் ஒரு குடும்பம் பற்றி இங்கே :
இவர்கள் பெங்காலிகள்.அசோக் குமார் - கிஷோர் குமார் இருவரும் சகோதரர்கள் . எல்லோருக்கும் தெரியும் தான்.
இந்த இருவருக்கும் ஒரு உடன் பிறந்த சகோதரி . பெயர் சதிதேவி.
இந்த சதிதேவிக்கு மகன்களில் ஒருவர். ஜாய் முகர்ஜி.நாற்பது வருடங்களுக்கு முன் Love in Tokyoபடத்தில் கதாநாயகன் . " ஜாப்பான் லாவ் இன் டோக்கியோ " முஹம்மத் ரபி பாடல்!
மேற்படி அந்தக்கால ஹிந்திப் பட கதாநாயகன் ஜாய் முகர்ஜி தம்பி ராம் முகர்ஜி. இவருடைய மகள் தான் இன்றைய இந்தி நட்சத்திரம் ராணி முகர்ஜி.
தங்கத்தகட்டழகி, தாமரை முகத்தழகி,சிரிக்கும் சிங்காரி ராணி முகர்ஜி!
ஜாய் முகர்ஜியின் இன்னொரு சகோதரர் சோமு முகர்ஜி.இவருடைய மகள் தான் கஜோல்.அஜய் தேவ்கனின் மனைவி.கஜோல் அம்மா நடிகை தனுஜா இன்னொரு நடிகை நூட்டனுடைய தங்கச்சி.
கட்டான உடை உடுத்தி, சிட்டாகப் பறந்து வரும் தென்ன மரத்து சிட்டு,தேன் போன்ற லட்டு,தட்டு லொட்டு எவர்சில்வர் தட்டு போன்ற கன்னங்கள் கொண்ட கஜோல்!
அதாவது ராணிமுகர்ஜியோட அப்பாவுக்கும், கஜோல் அப்பாவுக்கும் கிஷோர் குமார் தாய் மாமன்!
இன்னும் பல.. இன்னும் பல..இன்னும் பல பாற்கடல்கள்!
மதன் புரி - அம்ரீஷ் புரி சகோதரர்கள் வில்லன் நடிகர்கள்.
ராஜ் கபூர் -ஷம்மி கபூர் - சசி கபூர்
பிரேம் நாத் - ராஜேந்தர் நாத் - நரேந்தர் நாத் .
பிரேம்நாத் குணச்சித்திர நடிகர். ராஜேந்தர் நாத் காமெடியன். நரேந்தர் நாத் வில்லன் நடிகர்.
இந்த பிரேம் நாத் சகோதரர்களின் உடன் பிறந்த சகோதரி கிருஷ்ணா தான் ராஜ்கபூர் பொண்டாட்டி.
ராஜ் கபூர் மூத்த மகன் ரந்திர் கபூர் மகள்கள் கரீஷ்மா கபூர், கரீனா கபூர்.
ரிஷி கபூர் மகன் ரன்பீர் கபூர்.
ஷம்மி கபூரும் கிஷோர் குமாரும்( கொஞ்ச மாதம் மட்டும் )சகலை பாடிகள்.
ஷம்மி கபூர் பொண்டாட்டி கீதா பாலி.
இந்த கீதா பாலி தங்கச்சி யோகிதா பாலி தான் கிஷோர் குமாரின் மூன்றாவது பொண்டாட்டி!ஒரு பத்து மாதம்கழித்து பிரிந்து விட்டார்கள்.
இப்ப இந்த யோகிதா பாலி மிதுன் சக்ரவர்த்தி பொஞ்சாதிங்கோ! இந்த மிதுன் சக்ரவர்த்தி யோகீதா பாலியை கட்டறதுக்கு முன்னாலே ஒளப்புனது நம்ம ஊர் ஸ்ரீதேவியை.வக்கீல் ஐயப்பன் நாயுடு மகள் ஸ்ரீதேவி புருஷன் போனிகபூர் தான் அனில் கபூரோட அண்ணன்.
சரி விடுங்க ..ஆதாம் ஏவாள் முறைப்படி எல்லோருமே சொந்தக்காரங்க தானே!
..............................................................................................
குண்டு குண்டு கபூர்கள்!
தம்பி சசி முகத்தை அன்புடன் வருடும் ஷம்மி!
Barfi! ரன்பிர் கபூர் படம். அவனுடைய தாத்தா ராஜ்கபூர் படம் பார்த்த திருப்தி.
கொள்ளுத் தாத்தா ப்ருத்வி ராஜ்கபூர் வம்ச பரம்பரை.
ராஜ் கபூர், ஷம்மி கபூர், சசி கபூர் மூவருமே வெகுவாக மாறுபட்ட தனித்தன்மை மிக்கவர்கள்.
ராஜ் கபூர் வெளிப்படுத்திய சாப்ளின் பாணி.
’ஓ மெஹ்பூபா! ஓ மெஹ்பூபா! ’
’ஜீ நாயகா மருநாயகா’
’ஓ மெஹ்பூபா! ஓ மெஹ்பூபா! ’
’ஜீ நாயகா மருநாயகா’
ஷம்மி கபூர் டான்ஸ். காஷ்மீரை Glamourize செய்த காதல் மன்னன். இன்றும் அந்த டான்ஸ் மிஞ்ச ஆள் இல்லை. What an arrogance! சமீபத்தில் ரன்பிரின்
அப்பா ரிஷி கபூர் கூட தன் சித்தப்பா ஷம்மியை யாராலும் ரீப்ளேஸ் செய்யவே முடியாது
என்று சொல்லும்படி தான்.
Rishi Kapoor says " The Ultimate Romantic hero is a slot reserved for Shammi Kapoor! Just look at his style, the aura, everything about him was fantastic!"
’அந்தாஸ்’ படத்தில் நின்று கொண்டிருக்கும் ஹேமா மாலினியின் பாதத்திலிருந்து தலை வரை ஆப்பிளை தன் வாயாலேயே உருட்டும் ஷம்மி கபூர்!..தில் வுசுஜோ சோஜா...

ரோமன் போலன்ஸ்கியின் china town படம் 1974ல் ஜாக் நிக்கல்சன் நடித்து வந்தது எல்லோருக்கும் தெரியும். முன்னமே
அதே டைட்டிலில் ஷம்மி கபூர் நடித்துக்கூட 1962ல் ஒரு china town ஹிந்திப்படம் வந்தது! இரண்டுக்கும் கதையில் எந்த சம்பந்தமும்
கிடையாது.
ஷம்மி கபூர் இறந்த போது ஹ்ரித்திக் ரோஷன் Tribute: வழக்கமான
RIP கிடையாது. Dance In Heaven!
For Shammi, I don’t want to say ‘Rest In Peace’ but
rather ‘ Dance in Heaven!’
சசி கபூர் ரொம்ப ஒல்லியாக ’ப்யார் கா மௌசம்’ ’ஷர்மீலி’ படங்களில்!
’தும் பின் ஜவுன் கஹான்? தும் பின் ஜவுன் கஹான்? ’
’கில் தே ஹைன் குல் யஹான், கில் கேபி கர்னகோ’
‘கைஸெ கஹெ ஹம் ப்யார் நெ ஹம் கோ, க்யா க்யா கேல் திகாயே’
’தும் பின் ஜவுன் கஹான்? தும் பின் ஜவுன் கஹான்? ’
’கில் தே ஹைன் குல் யஹான், கில் கேபி கர்னகோ’
‘கைஸெ கஹெ ஹம் ப்யார் நெ ஹம் கோ, க்யா க்யா கேல் திகாயே’
ரன்பிர் கபூரின் பெரியப்பா ரந்திர் கபூர். கரிஷ்மா, கரீனாவின் அப்பா.
கல் ஆஜ் அவுர் கல் படத்தில் தாத்தா ப்ருத்வி, அப்பா ராஜ், ரந்திர் மூவரும் நடித்திருக்கிறார்கள்.
’ஜவானி திவானி’ ஜெய பாதுரிக்கு ஜோடியாக ரந்திர் கபூர். என்ன பாடல்கள்! பின்னால்அபிஷேக்
பச்சனுக்கும் கரிஷ்மா கபூருக்கும் ஊர் கூடி கல்யாணம் நிச்சயமாகி கேன்சலாகிப்போகும் என்பதை அப்போது நினைத்திருக்க
மாட்டார்கள்!
அந்தக் காலத்தில் ரந்திர் கபூரை Sexiest Male என்று ரேகா சொல்வார்!
எம்.ஜி.ஆர் ‘ரிக்ஷாக்காரன்’ இந்தியில் ரிக்ஷாவாலா.ரந்திர் கபூர் தான் அதில்
கதாநாயகன். ’ஹாத் கி ஷஃபாய்’ வெற்றிப்படம்!ரந்திருக்கு சீக்கிரம் மார்க்கெட் போய்விட்டது.
ரிஷி கபூருக்கு ஸ்டெடி மார்க்கெட். நல்ல டான்ஸர்.
ஆனால் monotonous acting!
ஆனால் monotonous acting!
மேரா நாம் கபூரில் ஜூனியர் ராஜ்கபூர். பாபி ஹிட். கேல் கேல் மைன். ஹம் கிஸிசே
கம் நஹின் வரை ரிஷி கபூர் ஜோர் தான். ஜாலி தான். ’கர்ஸ்’ தான் எனக்குள் ஒருவன் என்று
தமிழில் கமல் நடித்தது!
ராஜ்கபூரின் மூன்றாவது மகன் ராஜீவ் கபூர் ஒரு ஃப்ளாப்.
ரன்பிர் கபூர் ’சாவரியா’ பார்த்த போதே நல்ல நடிகன் என்பது தெரிந்தது. தாஸ்தாவ்ஸ்கியின்
வெண்ணிற இரவுகள் கதையைத் தழுவியது.
பர்ஃபி யில் ரன்பிர் நடிப்பு உன்னதம்.
இலியானா ஒரு கவிதை!
‘பூனை மூக்கி’ பிரியங்கா சோப்ரா பிய்த்து உதறியது மகா ஆச்சரியம்!
கபூர் குடும்ப நடிகர்கள் எல்லோருமே ஒரு விஷயத்தில் மாறுதலில்லாதவர்கள்.
கதாநாயகன் மார்க்கெட் போனவுடனே,உடனே,உடனே குண்டாகி
ஊதிப்பெருத்து விடுவார்கள். ராஜ்கபூர், ஷம்மி கபூர், சசி கபூர் மூவருமே அளவுக்கு மேல்
பெருத்து மூச்சி விடவே சிரமப்பட்டார்கள். ரந்திர் கபூரும் மார்க்கெட் போனவுடன் மஹா
குண்டன். இப்போது ரிஷி கபூர்!
……………………................................................................................
Very nice brother, All the best.
ReplyDelete