Share

Jul 24, 2009

சீர்காழி கோவிந்தராஜன்

சீர்காழி கோவிந்த ராஜன் குரலில் மெலடி கிடையாது . முரட்டு குரல் . டிஎம் எஸ் குரலில் உள்ள 'கனிவு' 'தண்மை' 'குழைவு 'சீர்காழியிடம் அறவே கிடையாது . பாடும்போது ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு விடுவார் .நான் பாடுவதில் மேதையாக்கும் என்ற கர்வம் குரலில் வெளிப்படும்.தமிழ் உச்சரிப்பு சுத்தம் . ஆனால் தேவைக்கு மேல் அழுத்தம் கொடுத்து வார்த்தைகளை கடித்து விடுவார் .
அந்த காலத்தில் பல தமிழ் படங்களில் கதாநாயகி கலங்கி தவித்து தக்காளி விக்கும்போது சீர்காழி செயற்கை உருக்கத்துடன் "துள்ளி வரும் சூறை காற்று துடிக்குதொரு தென்னம்தோப்பு இல்லை ஒரு பாதுகாப்பு காவல் இல்லா கன்னி என்றால் கண்கலங்கும் வாழ்க்கை உண்டு ''என்று கதறுவார் ." நீதி மத யானை வீதிவழி சென்றதம்மா !" என கேவுவார் .சிகரட் பிடிக்க ,ஒண்ணுக்கு அடிக்க பலரும் எழுந்து போவார்கள் .
சில பாடல்களை சவால் போல பாடி விடுவார் . டிஎம் எஸ் " முருகா என்றழைக்கவா ? முத்துக்குமரா என்றழைக்கவா?...எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன் " என்றுபக்திபாடல் உருக்கமாய் பாடியதற்கு சீர்காழி எதிர்ப்பாட்டு " முருகா என்றழைத்தால் என்ன ? கந்தா என்றழைத்தால் என்ன ? கார்த்திகேயன் என்றால் என்ன ?...எப்படியும் அழைக்கலாம் ! எங்கிருந்தும் காணலாம் " இதில் பக்தி கூட வேடிக்கையாக ஆகும்படி கூச்சலாக சீர்காழி ஆக்கியிருந்தார் .

'திருசெந்துரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் ' பாட்டில் டிஎம் எஸ் குரலை அமுக்கி மெலடி இல்லாமல் கூப்பாடு போடுவார் .
என்றாலும் கூட சீர்காழி பல பாடல்களை கணீரென்று தன் வெண்கல குரலில் அற்புதமாக பாடியிருக்கிறார் . அந்த பாடல்கள் அவருக்கானவை மட்டுமே .அப்படி சில பாடல்கள் கீழே :
1. அமுதும் தேனும் எதற்கு ? நீ அருகினில் இருக்கையிலே எனக்கு "
2. பணம் பந்தியிலே ! குணம் குப்பையிலே ! இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே !
3. எங்கிருந்தோ வந்தான் ! இடைச்சாதி நான் என்றான் !
4 . தேவன் கோயில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை
5 . ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே .
6.உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா !
7.மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா !
8.ஒற்றுமையாய் வாழ்வதாலே என்றும் நன்மையே
9.தட்டு தடுமாறி நெஞ்சம் கை தொட்டு விளையாட கெஞ்சும் சிட்டு முகம் காதல் கொள்ளும் . கண் பட்டு மலர் மேனி துள்ளும் .
10. சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி (பக்தி பாடல் )
11 .அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன் .
12.கண்ணிலே நீர் எதற்கு காலமெல்லாம் அழுவதற்கு .
13. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா
14. கல்லிலே கலைவண்ணம் கண்டான்
15 .நீயல்லால் தெய்வம் இல்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா ( பக்தி பாடல)
இரண்டு டைட்டில் சாங்க்ஸ் . தியேட்டரில் கைத்தட்டு வாங்குவார் .
1.காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாரும் இல்லை
2.வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர் நீச்சல் .
சீர்காழியை முழுமையாக ஒதுக்கவே முடியாது .

Once in a while , A consistency comes forward that is both sublime and foolish!
இந்த வார்த்தைகளை சீர்காழி கோவிந்தராஜன் என்று இல்லை . 'அரசியல்' துவங்கி எந்த துறையிலும் கலை ,இலக்கியம் , இசை , நடிப்பு என்று எந்த துறையிலும் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்த பலரை பற்றி எண்ணி பார்க்கும்போது சொல்ல வேண்டியிருக்கும் . இந்திய திரை பின்னணி பாடகர்களில் முழுமையான பி பி ஸ்ரீநிவாஸ் ,கிஷோர்குமார் பாடல்கள் பற்றி மட்டுமே மேற்கண்ட மேற்கோளை பிரயோகிக்க முடியாது . (இவர்களில் பிபிஎஸ் ஒருகாலகட்டத்தில் மார்க்கெட்டை இழந்து விட்டவர் என்றாலும் கூட )

14 comments:

 1. நமக்கு 1,3,5,6,12 பிடிக்கும்...
  சீர்காழியியை தொடந்து கேக்கமுடியாது.. கேட்டால்.. ?

  ReplyDelete
 2. சீர்காழியை கொஞ்சமாகக் கூட ஒதுக்கமுடியாது.ஒரு கொசுறு தக‌வல்(மதுரைக்கே மல்லி?).உளுந்தூர்பேட்டை ஷன்முகம் இவர் வளர்ச்சிக்கு ஒரு காரணம்."அறிமுகம் செய்தவன் ஆறுமுகன்....என்னை"என்றபாடலில் வரும் ஆறுமுகம் ஷண்முகம்தான்.

  ReplyDelete
 3. தோழா வணக்கம்
  நலமா .பார்த்து ரொம்ப நலசு "கனவு " ல நிகழ்ச்சில பார்த்தது . போன் நெம்பர் தாங்க பேசுவோம் .
  nandhuzn@yahoo.com
  98432 36345.

  ReplyDelete
 4. sirkazhi govindarajan and
  ulundurpettai shanmugham are
  co-brothers !

  ReplyDelete
 5. கோகிலவாணி படத்தில் ஜி.ராமநாதன் இசையில் சீர்காழி பாடிய
  'சரச மோகன சங்கீதாம்ருத சாரலில் மாங்குயில் கூவுது பார்' :

  திருவே என் தேவியே வாராய், தேனார் மொழி மானார் விழி'

  பாடல்களை ரிகார்ட் தேடி வாங்கி கேட்டுப் பாருங்கள்.அவர் பாடியதில் என்க்கு ரொம்ப பிடித்தது.

  ReplyDelete
 6. அவர் மகன் குரலும் அப்படியே!

  ReplyDelete
 7. Please listen to the song sahAdEvamn mentioned here: http://www.dhool.com/sotd2/900.html

  ReplyDelete
 8. மகேந்திரன்Monday, 27 July, 2009

  திரு ராஜநாயஹம் அவர்களுக்கு,

  இசைமணி சீர்காழி அவர்களைப்பற்றிய உங்களின் பதிவு ஒன்றை படிக்க நேர்ந்தது. சற்றே அதிர்ச்சியாகவும், மிகுந்த வியப்பாகவும் இருந்தது. இத்தனைக்கும் நான் சீர்காழியின் பரம ரசிகனோ, பக்தசிகாமணியோ இல்லை. இருந்தும் முதன்முறையாக
  இத்தனை உக்கிரமானதொரு விமர்சனம் அவரைப்பற்றி படிக்கும் போது இப்படி ஒரு பதில் கொடுக்காமல் இருக்க இயலவில்லை. முதலில் நீங்கள் என்ன சொல்ல
  விரும்புகிறீர்கள் என்பதிலேயே குழம்பிப்போயிருக்கிறீர்கள்.

  "சீர்காழி கோவிந்த ராஜன் குரலில் மெலடி கிடையாது. முரட்டு குரல்.." என்று துவங்கும் உங்கள் பதிவு "சீர்காழியை முழுமையாக ஒதுக்கவே முடியாது" என்று முடிகிறது.

  டிஎம்ஸ் குரலில் உள்ள 'கனிவு' 'தண்மை' சீர்காழியிடம் அறவே கிடையாது தான், ஏனெனில் அவர் டி.எம்.எஸ் கிடையாது. இதுநாள் வரை யாருமே எழுப்பியிருக்க
  முடியாத உங்கள் முரட்டு விமர்சனத்தில் நீங்கள் சொல்லியிருப்பது போல, ஒரு
  உணர்ச்சி வசப்படும், கர்வம் மிகுந்த பாடகருக்கு 60 க்கு முந்தைய திரையிசை வரலாற்றில் இடமே இருந்திருக்க முடியாது. யாரையும் யாரோடும் ஒப்பிட முடியாது.
  டி.எம்.எஸ் கண்டிப்பாக மறுக்க முடியாத அளவுக்கு நல்ல பாடகர் தான். ஆனால் அவர் குரலில் உள்ள மிகுதியான நாடகத்தனம், உங்களை கனிவு, தண்மை என்று நம்பவைத்து
  சீர்காழியின் இயல்பான குரலை மறுக்க வைத்திருக்கிறது.

  "உள்ளத்தில் நல்ல உள்ளம்" போன்ற பாடல்களில் உங்களை கலங்கவைத்த ஒரு பாடகரின் குரல் மற்றொரு பாடலில் நளினமற்ற அபத்தக்கூப்பாடாக உங்களுக்கு
  பட்டிருப்பது, யாரோ கத்தியை கழுத்தில் வைத்து வற்புறுத்தி உங்களை எழுத வைத்திருப்பார்களோ என்றென்னை அச்சப்பட வைக்கிறது.

  முதலில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். விமர்சனம் என்பது வேறு..தனிமனிதக்கருத்து என்பது வேறு.

  இம்மைக்கும் மறுமைக்கும் புகழ் சேர்த்த அவரைப்பற்றிய உங்களின் தனிப்பட்ட கருத்தையே ஒட்டுமொத்த விமர்சனமாக நீங்கள் எழுதியிருப்பது மிகுந்த அபத்தமாயிருக்கிறது. உங்கள் ரசனையை சந்தேகிக்க வைக்கிறது.

  என்றேனும் நீங்கள் "ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே" கேட்டிருக்கிறீர்களா? கேட்டுவிட்டு சொல்லுங்கள்..
  உங்கள் மனசாட்சி தலைகுனிந்ததை..!!

  ReplyDelete
 9. Dear R P Rajanayahem,

  So you have come back. It's nice to have you again in the blogspace. Let it not turn as 'Once in a while a consistency comes forward...

  - Rajasundararajan

  ReplyDelete
 10. Thank you Kavignar Rajasundararajan Sir!

  ReplyDelete
 11. திரு. ராஜநாயஹம் அவர்களுக்கு,

  வணக்கம்.

  சீர்காழி திரு.கோவிந்தராஜன் தமிழ் இசை வானில் ஒரு மங்காத நட்சத்திரம். அவர் போல் ஒருவர் முன்பும் இல்லை பின்பும் இல்லை. பொத்தாம் பொதுவாக உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கோவில் திருவிழா மைக் செட்டில் கூப்பாடாக ஒளிபரப்பப்பட்ட பாடல்களைக் கேட்டு விட்டு எழுதிய விமர்சனமாகவே தோன்றுகிறது. அவரது குரலில் உள்ள மேன்மை,மென்மை,கனிவு, கம்பீரம் என பல்வேறு பாவங்களை உணர நீங்கள் அவரது பாடல்களில் பலவற்றைக் கேட்க வேண்டும். அவர் பாடிய அபிராமி அந்தாதி 100 பாடல்களையும் கேட்டுவிட்டு பின்னர் இதை நீங்கள் மீண்டும் எழுத வேண்டும். முக்கியமாக சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை TMS அவர்களோடு ஒப்பீடு செய்தது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். அந்நாளில் கர்நாடக சங்கீதத்தில் தமிழ்ப் பாடல்களைப் பாடி சபாக்களில் நல்ல கூட்டத்தைக் கூட்டிய ஒரே கலைஞர் சீர்காழி அவர்கள் தான். MGR,சிவாஜி என எந்த நாயகர் வாயசைத்தாலும், அவர்களின் குரல் வாகுக்கு ஏற்றவாறு மாற்றிப் பாடுபவர் TMS.
  கண்ணை மூடிக் கொண்டு கேட்டுப் பாருங்கள் , சீர்காழி அவர்களின் குரலை எளிதில் அடையாளம் காணலாம். கோவிலின் வெண்கல மணி அடித்தால் எழும்பும் ஓசை போன்றது அவரின் குரல். "திருச்செந்தூரின் கடலோரத்தில்" பாட்டு - அதன் இசை கேட்டீர்கள் என்றால் அது நிச்சயம் ஒரு மெலடி இல்லை என்பது புரியும். ஒரு உற்சாகத் துள்ளல் நிறைந்த ஒரு பரவசமான பாடல். எதிரில் தான் வணங்கும் தெய்வம், அவனைப் பற்றி புகழ்ந்து உருகுகிறார். ஒரு உற்சாகத் துள்ளல் அவரது பாட்டில் தொற்றிக் கொள்கிறது. இதை உணராமல் "கூப்பாடு" என்று தரக் குறைவாக விமர்சித்து விட்டீர்கள்.
  அகத்தியர் படத்தில் வரும் "வென்றிடுவேன்" , "நமச்சிவாய என சொல்வோமே" என இரண்டு பாடல்களிலும் இரு வேறு பாடகர்களோடு பாடியிருப்பார். இரண்டிலும் தனி முத்திரை. முதலில் - ஆணவம் கொண்ட அரசனின் (இராவணன்) பாடலுக்கு பதிலடி. இரண்டாவதில், போட்டிக்கு இழுக்கும் துறவியின் ( நாரதர் ) பாடலுக்கு மறுமொழி.
  "நடந்தாய் வாழி" - பாடலில் அவர் வாழ்த்தும் மகிழ்ச்சி ஒரு வகை.

  பக்திப் பாடல்கள் பாடுவதில் தன்னிகரற்றவர் சீர்காழி திரு கோவிந்த ராஜன் அவர்கள்.
  அவரது குரலை கூப்பாடு என்று சொல்வது நீங்கள் அவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் விமர்சிப்பவர் என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

  பரிமாறப்பட்ட உணவு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் - "எனக்குப் பிடிக்கவில்லை" என்று கூறாமல் பரிமாறப்பட்ட உணவு நன்றாக இல்லை என்று கூறுவது தவறு.

  அன்புடன்
  -திரு

  ReplyDelete
 12. உங்கள் பழைய பதிவுகளை அசைபோடும் போது...

  இது நடந்து ஒரு 20 வருடங்களுக்கு மேல இருக்கும், நானும் எங்கம்மாவும் லஸ் பிள்ளையார் கோவிலுக்கு சென்று திரும்புகையில் சீர்காழி கோவிலிருந்து வந்த ஆன்மீக நிலையில் வானம் பார்த்து அமர்ந்திருந்தார் காரில். ஒரு பிச்சைக்காரன் நெடுநேரமாய் நின்றுயிருந்தான் எனக்கு முதுகு காட்டியபடி சீ-யிடம் கையேந்தியபடி. தெய்வீக நிலையில் இருந்த சீ கையிலிருந்த உதிரி பூக்களையும் வீபூதியையும் பிச்சைகாரன் கையில் இட்டார். மறுபடியும் மோனநிலை வான்நோக்கி. பிச்சை அவரையும் பார்த்து தன் கையையும் பார்த்து சில நிமிடம் திகைத்து நின்றது. பின்பு கையை துடைத்து உதறி விட்டு சென்றது. இதை பார்த்து என் தாய் உதிர்தத கமெண்ட் censored.

  அடுத்த முறை காபாலீஷ்வரர் கோயிலில் ‘கலையாத கல்வியும்’ படிக்காமல் விலகி நடந்தேன்.

  இந்த பின்னூட்டத்தை மகேந்திரன் மற்றும் திருவிற்கு சமர்ப்பிக்கின்றேன்.

  ReplyDelete
 13. 'Arimugam seithavan aarumugan' was written by Nellai Arulmani. Not Ulundurpettai Shanmugam. Sirkazhi gave him an identity because he was his co brother.

  You guys seem to have biassed with someone or something to talk ill about a legend.
  PEOPLE ARE NOT FOOLS TO CHERISH AND RELISH "SIRKALI SONGS". The sun will continue to shine despite the barking of dogs and the cats closing its eye.

  ReplyDelete
 14. சீர்காழியின் தயாள குணத்தை அவரிடம் கல்வி உதவி,, திருமண-குடும்ப நல நிதி, கோயில் திருப்பணிகள் என்று உதவி பெற்றவர்கள்,நிறைய சொல்லக் கேட்டிருக்கிறோம். எச்சில் கையால் காக்கையை கூட ஒட்டாத, திரையில் செல்வச் செழிப்பில் இருந்த கலைஞர்களைப்பற்றியும் அறிவோம்.
  ஆலயங்களில் பிச்சைக்காரர்களை ஊக்குவிக்காமல் இருப்பது அவரவர் தனிப்பட்ட கருத்து. சீர்காழியாராக இருந்ததால் பூ பிரசாதத்தையாவது கொடுத்தார் . மற்றறொரு கலைஞனாய் இருந்தால் பிச்சைக்காரன் கையில் இருந்த காசையும் எடுத்து பையில் போட்டிருப்பார்.சீர்காழியின் தர்ம கைங்கரியமான அபிராமி அந்தாதி பதிகம் கல்வெட்டை, தினம் தினம் ஆயிரம் பக்தர்கள் படித்து இறை அருள் பெறுகிறார்கள். படிக்காமல் போவோர்கள் இருப்பதால் நஷ்டம் சீர்காழிக்கு அல்ல.

  மறைந்தும் இசையால் உலகில் நாதமாய் விளங்கும் சீர்காழியாரே!! மறைந்த பின்னும், இயலாதோரின் பொறாமை காழ்ப்பும் உன்னை விடவில்லையோ புனிதனே?
  நீ பாடியதைப்போல,"போற்றுவார் போற்றலும்,தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே"! கிருஷ்ணார்ப்பணம்!

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.