1983
கல்யாணத்திற்கு முந்தைய நாள் மாலை, இரவும் சரியான ஐப்பசி மழை.
கல்யாண மண்டபத்தில் ராஜநாயஹத்தின் Full Suit Dress, மணப்பெண்ணின் கல்யாண பட்டு புடவை, தாலி எல்லாம் வைத்து சடங்கெல்லாம் முடித்து
பத்து மணிக்கு மேல் கிளம்பும் போது
விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர் பட்டி கிருஷ்ண பிள்ளை சித்தப்பா கல்யாண ஆடைகள், தாலி செயின் வைக்கப்பட்ட சூட் கேஸை கையில் எடுத்து கொண்டார். பக்கத்திலேயே வீடு.
எனக்கு முன்னால் நடந்த கிருஷ்ண பிள்ளை வெளியே வந்தவுடன் மழைத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த கால்வாயில் சூட்கேஸோடு விழுந்து விட்டார். அவருடைய 'ஐயய்யோ அம்மாடி' கூப்பாடு. பேரதிர்ச்சி.
கால்வாய் என்ன, மழைநீர் இல்லாவிட்டால் அது சாக்கடையே தான்.
அவரை தூக்கி மேலே விட்டு, முழுக்க மூழ்கி விட்ட சூட்கேஸை மேலே கொண்டு வந்து, வேதனையோடு வீடு வந்து அவசர அவசரமாக சூட்கேஸை திறந்து...
கோட் முன் மேல் பகுதியில் மட்டும் லேசாக ஈரம்.
நீரால் சுத்தம் செய்து, அயர்ன் பண்ணி ஸ்டேண்டில் தொங்க விட்டாயிற்று.
பெரியவர்கள் வளமை நோக்கு படி
' த்ருஷ்டி கழிந்தது ' 'கண்டம் கழிந்தது' பெரு மூச்சு.
காலையில் Coat போடுவதற்கு முன் waist coat ல் எடுக்கப்பட்ட புகைப்படம்.
ராஜநாயஹத்தின் பின் புறம் ரவி.
ராஜநாயஹத்தின் இந்த குறிப்பிட்ட புகைப்படம் ரொம்ப பிரபலம்.
சுவாரசியமான சம்பவம் எல்லாம் இதை முன் வைத்து நடந்திருக்கிறது.
....
Artificial Intelligence
07.11.1983
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.