Jun 15, 2024

பாக்யராஜ் - பாலாஜி மோதல்

பாக்யராஜ் - பாலாஜி மோதல்
- R.P. ராஜநாயஹம் 

"கே. பாலாஜிக்கு
 மறு பக்கம் உண்டு. யாருக்குத்தான் 
மறு பக்கம் இல்லை?"  -
'சினிமா எனும் பூதம்' நூலில் 
R.P. ராஜநாயஹம் 

விதி படத்தில் 'போஸ்ட் மேன்' காட்சிகளை பாக்யராஜே இயக்க வேண்டும் என்பது கே.விஜயன் வேண்டுகோள். 'உங்களை நான் இயக்க மாட்டேன். உங்க டைரக்ஸன்  பாக்க ரொம்ப ஆசை'

விஜயனுக்காக எழுதிக்கொண்டு வந்திருந்த பேப்பரை தூக்கிப் போட்டு விட்டு ஷாட் கூட பிரிக்காமல் விறுவிறுவென்று ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே வசனம் எழுதி ஷூட் செய்ததைப் பார்த்து விஜயன் உள்பட பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் யூனிட்டே பிரமித்திருக்கிறது.

உதவி இயக்குநர்கள் லிவிங்ஸ்டன், இளமுருகு, விஸ்வம் மூவரையும் 
போஸ்ட்மேன் காட்சியிலேயே பார்க்க முடியும்.

பாக்யராஜ் தன்னுடைய அசிஸ்டெண்ட்களை வைத்துக்கொண்டே, 
தான் நடிச்ச காட்சிகளை 'விதி'யில் இயக்கியிருக்கிறார்.

பாலாஜி எண்ண ஓட்டம் 'இதுக்கு சம்பளம் எவ்வளவு கேட்பாரோ, ரொம்ப கேட்டுடுவாரோ' 

வேலை முடிந்தவுடன் பாக்யராஜிடம் சம்பளம் பற்றி கேட்ட போது இவர் பதில் "சம்பளமெல்லாம் வேண்டாம். எனக்கும் அஸிஸ்டெண்ட்களுக்கும்
ஆளுக்கு இரண்டு ஷர்ட் மட்டும் எடுத்து கொடுங்கள், போதும் "

பாலாஜிக்கு பெரும் ஆசுவாசம். இன்ப அதிர்ச்சி.

விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீதுளரோ?

'விதி'யோடு போகாமல் 'என் ரத்தத்தின் ரத்தமே' யாக நேர்ந்தது விதி.

"என் ரத்தத்தின் ரத்தமே" 
பட தயாரிப்பில் கே. பாலாஜி நடவடிக்கைகள்.

வழக்கமான ரீமேக் பாணியில் பாக்யராஜிடம் வந்திருக்கிறார்.

Mr. India போனி கபூர் தயாரிப்பில் தம்பி அனில் கபூரை promote செய்வதற்காக 300 reel வரை செலவழித்து எடுக்கப்பட்ட படம். ஸ்ரீதேவி கதாநாயகி.

அதை கே. விஜயன் இயக்கத்தில் பாக்யராஜ் கதாநாயகன் எனும் போதே பாக்யராஜ் சொல்லியிருக்கிறார்
 " ரீமேக் படம் எதற்கு? புதிதாய் கதை ரெடி பண்ணலாம்"

கந்தன் புத்தி கவட்டுக்குள்ள. 
பாலாஜி பிடிவாதம். 
His Remake obsession is popular.மிஸ்டர் இண்டியா ரீமேக் ரீமேக் ரீமேக் தான்.

கே. பாக்யராஜ் படங்களை இந்தியிலும் தெலுங்கிலும் ரீமேக் ரீமேக் செய்து கொண்டிருந்தார்கள்.

Recidivist Balaji made a hell a lot of mistakes again and again. Repeated errors.

திருத்த முடியாத தவறாளியாக தயாரிப்பாளர் பாலாஜி.

விநாசகாலே விபரீத புத்தி.

ஸ்ரீதேவி தமிழில் நடிக்க மறுத்தார்.
பாக்யராஜுக்கு ஃபோன் போட்டு ஸ்ரீதேவி கண்ணியமாக விளக்கியிருக்கிறார்.
'இந்தியில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் தமிழில் நடிக்க வருவது சிக்கல்கள் ஏற்படுத்தும். Tabloids gossip பிரச்சினைகள்..'

Mr. India படத்தில் ஸ்ரீதேவி காட்சிகளை பயன்படுத்த முடியாத நிலை பாலாஜிக்கு.

ராதாவை புக் செய்ய பாலாஜி முயன்ற போது பாக்யராஜ் ஹீரோ என்பதால் ராதா அதிகமாக சம்பளம் கேட்டார். 

பாலாஜி கோபமாகி 'I will teach her a lesson' என சொல்லி மீனாட்சி சேஷாத்ரியை புக் செய்திருக்கிறார்.

ஃப்ளைட் டிக்கெட், தங்க வைக்கிற செலவு எகிறியது.

ஒவ்வொரு முறையும் ஷூட்டிங் வரும்போது கெஸ்ட் ஹவுஸில் தங்க மறுத்து மீனாட்சி சேஷாத்ரி ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கினார்.

கேமராமேனுக்கு உடம்பு சரியில்லை. 
அதனால் ட்ரிக் ஷாட் அனுபவமில்லாத 
புது கேமராமேன்.

ஏ.எல். நாராயணன் கேட்ட சம்பளம் கிடைக்காததால் மெல்ல ஒதுங்கிக் கொண்டார்.

பாக்யராஜிடம் பாலாஜி கேட்டார் 'ஷூட்டிங் போது நீங்களே டயலாக் பொறுப்பை பார்த்து செய்து கொள்ளவேண்டும் '

டைரக்டர் விஜயன் நோய் வாய்ப்பட்டு மரணம்.
விஜயன் மகன் சுந்தர் கே. விஜயனை உடன் வைத்துக் கொண்டு இயக்கத்தையும் பாக்யராஜ் பார்த்துக்கொள்ள பாலாஜி வேண்டிக் கேட்டார்.

பாலாஜி சொன்னவற்றை யெல்லாம் ஒத்துக்கொண்டு செய்திருக்கிறார்

ஐந்து மணிக்கு இவர் நடிக்கிற பகுதி முடிந்தவுடன் கிளம்பியிருக்கிறார்.

ட்ரிக் ஷாட் எடுப்பதில் இவருக்கென்ன வேலை.
அனுபவமில்லாத கேமரா மேனிடமும் சுந்தர் கே. விஜயனிடமும் ட்ரிக் ஷாட் எடுப்பது விஷயமாக instruction கொடுத்து விட்டு கிளம்பிய பின் 
ட்ரிக் ஷாட் ஷூட்டிங் ரொம்ப நேரத்தை விழுங்கியிருக்கிறது.

பழி இவர் மேல். பாக்யராஜ் ஐந்து மணிக்கே கிளம்பி விடுகிறார்.

இந்த படத்திற்கு சம்பளத்துடன் கோவை ஏரியாவும் இவருக்கு தருவதாக பாலாஜி ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கோவையிலும் இவரே வெளியிட திட்டமிட்டு தியேட்டர் பார்த்திருக்கிறார்.
பாக்யராஜ் அண்ணன் தன்ராஜிடம் தியேட்டர் பார்க்க சொன்னபோது தயாரிப்பாளர் பாலாஜி தன்னிச்சையாக தியேட்டர் பார்க்கிற விஷயம் தெரிய வந்திருக்கிறது.

நம்பிக்கை துரோகம்.

'கோவை ஏரியாவும் சம்பளத்தோடு தருவதாக சொல்லியிருக்கிறீர்கள்' 
என்பதை எடுத்துச் சொன்ன போது
பாலாஜி பொய்
'இல்லவே இல்லை. நான் அப்படியெல்லாம் சொல்லவேயில்லை ' 

பாக்யராஜ் - பாலாஜி மோதல்.

Producers Councilக்கு பாக்யராஜ் போயிருக்கிறார்.
ஏ.வி.எம். சரவணன்
 "பாலாஜி யார் சொன்னாலும் கேக்கவே மாட்டாரு"

அடுத்து FEFSIக்கு பாக்யராஜ் போயிருக்கிறார்.

பாலாஜி தன் செல்வாக்கை பயன்படுத்தி 
போலீஸே 
FEFSI president ஐ கன்னத்தில் அறைந்து சிறையில் அடைத்த சம்பவம் ஈடேறி விட்டது.

FEFSI சாலை மறியல்,  பஸ்ஸை தாக்குவதுமாக விஷயம் பூதாகரம்.

முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களை பாக்யராஜ் நேரில் சந்திக்கிறார்.
கலைஞர் உடனே FEFSI president ஐ ஜெயிலில் இருந்து விடுவிக்க உத்தரவிடுகிறார்.

இந்த களேபரங்களுக்கிடையே,
பூர்ணிமா பாக்யராஜ் மூலம் பாக்யராஜை சந்திக்க ரஜினிகாந்த் அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருக்கிறார்.
ரஜினியை வரச்சொல்லி பாக்யராஜ் தலையசைக்கிறார்.
ரஜினி வள்ளுவர் கோட்டம் லேக் ஏரியா வீட்டிற்கு வருகிறார்.

"பாலாஜியிடம் மோதல் எதற்கு?"

பாலாஜி கோபம் பற்றி ரஜினி " பாலாஜி முரட்டு ஆளு. துப்பாக்கிய தூக்கி காட்றார்"
பாக்யராஜ் " நீங்க உடனே அவர ' என்னங்க பாக்யராஜ சுட்டுடுவேன்னு துப்பாக்கிய காட்றீங்க. நீங்க செய்றது பெரிய தப்பு, அராஜகமான அநாகரீகம்.' னு அங்க சொல்லியிருக்கணும். அதை விட்டுட்டு எங்கிட்ட வந்து எதுக்கு மோதல்னு பஞ்சாயத்து பேசுறீங்க. அவருக்கு என் வீடு தெரியுமே. இங்க வந்து தான என்ன புக் பண்ணாரு. அந்த துப்பாக்கிய எடுத்துக்கிட்டு இங்க என் வீட்டுக்கு வரச்சொல்லுங்க. "
ரஜினிகாந்த் " இல்ல. இது தப்புன்னு அங்கயே சொல்லிட்டேன் " 
இதை சொல்லி விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

என் ரத்தத்தின் ரத்தமே ஓடவில்லை. தோல்வி.

பூர்ணிமா பாக்யராஜை ஏதாவது நிகழ்ச்சியில் பார்க்கும் போதெல்லாம் பாலாஜி குடும்பத்தில் மற்றவர்கள் அன்பாக பேசியிருக்கிறார்கள்.
பாலாஜிக்கு கிட்னி ஃபெய்லியர்.

 

ஜெயலலிதா ஆட்சியில் அவர் பிறந்த நாளிற்கோ எததற்கோ பாலாஜியிடம் ஆசி பெற்றார்.

பாலாஜி மகன் " He is counting his days"

பூர்ணிமா பாக்யராஜ் விருப்பப்படி கே.பாலாஜியை சந்திக்க சம்மதிக்கிறார்.
Your gentleness shall force more than your force move us to gentleness. 
(Shakespeare in 
As you like it)

Gentleness is a strong hand with a soft touch. 

பாலாஜியே வீட்டில் தானே தயாரித்த ஐஸ்கிரீம் அன்போடு கொடுத்து பாக்யராஜையும், பூர்ணிமாவையும் உபசரித்திருக்கிறார்.

Gentle Bhagyaraj still speaks truth, sometimes even painful truth, but in doing so guards his tone so the truth can be well received.

https://www.facebook.com/share/p/E4AEgG6ZDxa53nZ1/?mibextid=oFDknk

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.