Oct 9, 2019

சட்டி மண்டயன்


சட்டி மண்டயன் அகராதியில சில அசைக்க முடியாத தீர்மானங்கள்.
தாட்டி போறப்ப அவ பார்வ இவன் மேல பட்டுடுச்சின்னா, ஏறெடுத்துப் பாத்துச்சின்னா
“வெறிச்சிக்கார கண்டாரோலி”ம்பான்.
விரட்டிப்போனாலும் இவன கண்டுக்காம எப்பவும் சட்டையே பண்ணலன்னா
” திமிரெடுத்த தேவிடியா. பயங்கர மண்டக்கனம் பிடிச்ச ரூட்டு”ன்னு டிக்ளேர் பண்ணிடுவான்.
Convictions.
ஏ.ஏ.ரோடு மெய்யப்பன் ரண்டாவது தெரு முனை. காந்தி கறி கடை. வியாபாரம் முடிஞ்ச பின்னால அது எப்பவும் கொம்பு தாழங்களோட தாப்பு.

சாயந்திரம் நாலு மணி ஊமை வெய்யில்.
எக்ஸ் சர்விஸ் மேன் பிச்சை கையில ஒரு குச்சியோட நல்ல சவுண்டா
“ பெட்டாலியன இறக்கி ரெஜிமெண்டவே காலி பண்ணுவண்டா. அடிச்சி காலி பண்ணிடுவேன்” வழக்கம்போல. மனநிலை பிறழ்ந்தபின் எப்பவும் இப்படி வார்னிங் தான்.
சட்டி மண்டயன் மூஞ்சு கடும் விரக்தியில். தலையில பேண்டேஜ். காந்தி கறி கடையில சோகமாக ஒக்காந்திருக்கான்.
அவனுடைய அண்ணனுக்கும் இவனுக்கும் கை கலப்பு. சட்டி மண்டயன் மண்ட ஒடஞ்சி ரத்தம் வழிஞ்சிது பாத்துக்கங்க.
மொட்டயன் வந்து விசாரிச்சான். ’என்னடா?’
என்னன்னு சட்டி மண்டயன் சுரத்தேயில்லாமல் சொன்னான்.
ஆட்டு மூக்கன் பீடிய வாயில வச்சிக்கிட்டே வந்தவன் ‘ டே, என்னடா?’
சட்டி மண்டயன் “ போங்கடா, சொந்த கத சோக கத”
சொந்த கத, சோக கத அன்பே வா நாகேஷ் டயலாக் சல்லிக மத்தியில ரொம்ப முக்கியமான வக்காபுலரி.
மொட்டயன் தான் ஆட்டு மூக்கனுக்கு விவரம் சொன்னான்.
” துன்பக்கதை, துலாபாரம்” அந்தக்காலத்தில் துலாபாரம் தான் ரொம்ப சோகமான படம்.
சல்லிங்களுக்கு லவ் ஃபெயிலியர்னா,( எப்பவும் one side love தான்) எங்கயாவது செம்மயா மாத்து வாங்கிட்டா, வீட்டில தொர்ரி பண்ணி வனவாசமாயிட்டா, போலீஸ்ல சிக்கி அந்தல சிந்தலயானா..இப்படி துயரமான விஷயங்களுக்கு
எப்போதும் குறியீடாக “ சொந்தக் கத, சோக கத, துன்பக்கதை, துலாபாரம்”

ஒத்த காதன் வந்தான். சட்டி மண்டயன் ’எதுவும் கேக்காதடா’ சைகையிலயே சொன்னான். ஆட்டு மூக்கன் உடனே ஒத்த காதனுக்கு விளக்கினான்.
குருவி மண்டயன் சைக்கிள்ள சள்னு வந்து நின்னு “ டேய், சிந்தாமணில ராமன் தேடிய சீத ரிலீஸ் எப்படா?. ஒரு வருஷமா சொல்லிக்கிட்டெ இருக்காங்கெ.. சிந்தாமணில தான் ரிலீசாம். மீனாட்சில போட்டா நல்லாருக்கும்..” சலசலன்னு ஆரம்பிச்சவன் அப்ப தான் கவனிச்சு ”என்னடா சட்டி மண்ட. என்னடா இது மண்டயில பெரிய கட்டு?”
சட்டி மண்டயன் மூஞ்சி ஜிவ்வுனு சிவந்து செவேல்னு ஆயிடுச்சி.

சட்டி மண்டயன் ரோஷக்காரன். சட்டி மண்டயான்னு கூப்பிட்டா கூட கோபப்பட மாட்டான். ஆனா சத்தாய்க்கிற மாதிரி தெரிஞ்சா  
கெட்ட கோபம் வந்துடும்.
ஒத்தக்காதன் கார்ப்பரேஷன் பார்க்குல “ சட்டி சுட்டதா, கை விட்டதடா”ன்னு பாடுனதுக்கே “டேய் சுன்னி, நீ என்னய தான்டா லந்த குடுக்கிற”ன்னு ஆடிட்டான்.
மொட்டயன் “ அவனே கடுப்புல இருக்கான்டா? கேக்காதடா..சும்மா இர்டா”
அப்ப தான் ’தொல்ல’ (தொல்லை என்பதன் ’மரூ உ’) வந்தான்.
இடது கை ஆட் காட்டி விரல் மீது வலது கை ஆட்காட்டி விரலை லாக் போட்டு இரண்டு கைகளும் இடது பக்கமாக பின்னிய நிலையில் இருக்க வந்தவன் எல்லாரையும் பார்த்தான். சட்டி மண்டயனையும் பார்த்தான்.
பின்னால் வானத்தை பார்த்தவாறே சொன்னான்
 “ என்னடா இது. மத்திய மந்திரி வந்து வைக டேம தெறந்தான். கலெக்டர் வந்து காலேஜ திறந்து வக்றான். முதலமைச்சரு வந்து பாலத்த திறக்கிறான்.
முந்தா நாளு ஜெமினி கணேசன் வந்து ’சவ்வாஸ்’ ரெடி மேட் கடைய தொறந்து வச்சான்.
சட்டி மண்டயனோட அண்ணன் இவன் மண்டய தொறந்து விட்டுட்டானேடா”
சட்டி மண்டயன் அவ்வளவு அசதியிலயும் சட்டுனு எந்திரிச்சவுடன தொல்ல ஓட ஆரம்பிச்சான்.
“ டேய்..தொல்ல.. சும்பக்கூதி ஒன்ன கொல்லாம உட மாட்டன் டா”ன்னு விரட்டிட்டு ஓடும்போது சறுக்கி விழுந்து சட்டி மண்டயனுக்கு வலது முன்னங்கை ஒடஞ்சிடுச்சு.
Sorrows never come singly.
.....


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.