Oct 8, 2019

பின்னால எப்டி வருவானுங்களோ..

1962. இந்திய சீன யுத்தத்தில் தோல்வி.

காஞ்சி தலைவன் படம் 1963ல ரிலீஸ். எம்ஜிஆர், பானுமதி, எம். ஆர். ராதா.

மு. க. மேகலா பிக்சர்ஸ்.

சீன யுத்தத்தின் போது தான் ஷுட்டிங் நடந்திருக்கும்.

'வெல்க நாடு, வெல்க நாடு, வெல்க வெல்கவே, படைகள் வெல்கவே' சிதம்பரம் ஜெயராமன் பாடிய பாடல் காஞ்சி தலைவனில்.

(ரத்த திலகம் கண்ணதாசன் பாடல் "புத்தன் வந்த திசையிலே போர், புனித காந்தி மண்ணிலே போர்")

பல்லவர் காலத்தில் சீனர்கள் புழங்கியிருக்கிறார்களே.

எம் ஆர் ராதா சொந்தமாக வசனம் பேசுபவர்.
சீனர்களுடன் பேசும் காட்சி அந்த பல்லவ சரித்திர படத்தில் உண்டு.
ராதா அந்த டைம் சென்ஸ்
"இப்பல்லாம் நல்லாத்தான் இருக்கானுங்க. பின்னால எப்படி வருவானுங்களோ.. என்ன பண்ணுவானுங்களோ..? "

நேருவிடம் பாய் பாய் உறவு கொண்டாடிய சூ-என்-லாய் கதை தெரிந்த விஷயம்.

மோடி - ஜின் பெங் பல்லவ மகாபலிபுரம் சந்திப்பு நடக்க இருக்கிறது.
'இந்தியா சீனா பாய் பாய்'னு பல்ல ஈன்னு காட்டிட்டு போயிடுவான்.

'எப்டி வருவானுங்களோ, என்ன பண்ணப்போறானுங்களோ'ன்ற  பயம் நிரந்தரமானது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.