Oct 30, 2026

கழுத்துல கர்ச்சிஃப்

கழுத்துல கர்ச்சிஃப்

இப்படி ஃபேஷன் இருந்திருக்கிறது.
இங்கே எம்ஜிஆர் கழுத்துல கர்ச்சிஃப்.
1965ல இலங்கைக்கு சரோஜாதேவியுடன் 
எங்க வீட்டுப் பிள்ளை வெற்றி கொண்டாட்டத்திற்காக போயிருந்த போது.

இந்த கழுத்துல கர்ச்சிஃப் கலாச்சாரம் பின்னால் படங்களில் கொள்ளைக்கூட்டத்தில்,  ரவுடிகளில் சிலரிடம் இருந்ததுண்டு.
மதுர சல்லிகளுக்கு இந்த 'Neck kerchief' 
'Illegal Cooling glass'  இரண்டும் கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி. மொட்டையன் ஏதாவது தொர்ரி பண்ணி செழிம்பாயிட்டா,
கழுத்துல கர்ச்சிஃப்போட, இல்லீகல் கூலிங் கிளாஸ் சகிதம் 
சட்டய பேண்ட்டுக்குள்ள விட்டு
 in பண்ணித்தான்
 அப்பல்லாம் 
ஏ.ஏ. ரோட்டுல வருவான். 
மொட்டயன் எம்ஜிஆர் ரசிகன்.

பாடல் காட்சிகளில் எம்ஜிஆர் 
எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.

கதாநாயகியைப் பார்த்து சிரித்து 
தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
 ( மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர் மேனரிசம் தான். ’ஜாரி’ மிரண்டு ஓடும்!)

கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.

......

Oct 25, 2026

CROWN


"Uneasy lies the head wears a CROWN."
- Shakespeare 

But there is no uneasiness to the SKULL wearing a CROWN as it has found a relief from MIND.

 CONTENT is the CROWN for a WRITER.

"My CROWN is in my HEART, not on my HEAD
My CROWN is called CONTENT"
- Shakespeare

Oct 24, 2026

பூவாளூர் சந்தயில நஸீருதின் ஷாவும் ராஜநாயஹமும்

https://www.facebook.com/share/r/19i9bUn165/

Naseeruddin Shah with spine.
 Humble salute.

"Hindu theatre festival"க்காக 
ந.முத்துசாமி எழுதிய வண்டிச்சோடை நாடகம் 
 R.P. ராஜநாயஹம்  இயக்கிய போது 
நஸீருதின் ஷாவும் நாடகம் போட்டார்.
'ஹிண்டு' கனமாக கௌரவப்படுத்தியது.

'பூவாளூர் சந்தையில உங்க பொட்டியும் எம்பொட்டியும் இடிச்சிண்டதே'ங்கறாப்ல இப்படியெல்லாம் ஈஷிண்டு நிக்கும்படி சம்பந்தம்.

இது குறித்து பேராசிரியர் செ. ரவீந்திரன் ஆதங்கம் கீழே:

"அன்று (28-08-2016) மியூசியம் அரங்கில் கூத்துப்பட்டறையின் வண்டிச்சோடை நாடகமேடையேற்றத்தின் இறுதியில் கூத்துப்பட்டறையின் நடிகர் பிரசன்னா பங்கேற்பாளர்கள் பற்றிய 
அறிமுகம் செய்த பிறகு 
அன்று நாடகம் பார்க்க வந்திருந்த நாடகாசிரியர் கூத்துப்பட்டறை நிறுவன இயக்குநர்
ந.முத்துசாமி, 
நாடகத்தை இயக்கிய R.P.ராஜநாயஹம் முதலானவர்களுக்கு 
ஒரு மரியாதை நிமித்தமாக 
ஒரு மலர்ச்செண்டாவது கொடுத்து கௌரவித்திருக்கலாம். 
அந்த சுரணையெல்லாம் தி இந்து நாடகவிழா அமைப்பாளர்களுக்குக்
கிடையாது என்பதைச் சொல்ல வேண்டும்.”

- பேராசிரியர் டாக்டர் செ.ரவீந்திரன்
” நாடகவரங்கில் ஓர் ஒளியமைப்பாளனின் நினைவுக்குறிப்புகள்” மணல் வீடு 27வது இதழ்.

Oct 22, 2026

அறிவாலயத்தில்

2011

அறிவாலயத்தில் நடந்த மணவிழாவில்
தலைவர் மூதறிஞர் கலைஞர், 
பேராசிரியர் 
இருவர் அருகில் நிற்கும் 
    R.P. ராஜநாயஹம்

சனிப்பொணம்

"சனிப் பொணம் தனிப்போகாது"
சொலவட 
சனிக்கிழம குடும்பத்தில சாவு வந்தா அடுத்து இன்னொரு சாவு சில நாளில் நடக்கும் என்று Conviction.
Convictions are more dangerous than lies.
- Nietzsche 

மருந்து சாப்பிடும் போது குரங்க நெனக்கக்கூடாதுங்கற மாதிரி 
போன சனிக்கிழம இந்த சொலவட தான் உடனே ஞாபகம் வந்தது. அடுத்து அந்த குடும்பத்துல ரெண்டு நாள்ள இசையமைப்பாளர் தேவாவோட தம்பி சபேஷ் மகன் அகால மரணம் நேர்ந்தது.

....

Photo 
R.P. Rajanayahem 2006

Oct 19, 2026

ஆனந்த விகடன் தீபாவளி மலரில் R.P. ராஜநாயஹம் எழுதிய 'V.K. ராமசாமி'


வி.கே. ராமசாமி 
அழியாத நினைவுகள் 
- R.P. ராஜநாயஹம்

விருதுநகர் கந்தசாமி ராமசாமி .   1947ல் நாம் இருவர் படத்தில்   முதியவராக நடித்த போது வி.கே.ஆர் ஜென்ஸி தான். வயது 21. 

தன் 15 வயதிலேயே நாடகத்தில் முதியவராக நடித்தவர்.
 
Supporting actors aren’t just those familiar faces who can steal a film.They show a way for movies to portray real life.
ரங்காராவ், ராதா, பாலையா போன்ற பெரும சாதனையாளர்களோடு வி.கே. ராமசாம ஒப்பிட முடியாத சாமானியர் தான். ஆனாலும் விசேஷமான நடிகர்.

நாம் இருவர் நாடகத்தில் செய்த சண்முகம் பிள்ளை பாத்திரத்தில் திரையிலும் வந்த வாலிபன் வி.கே. ராமசாமி. 

ராமச்சந்திரன் போல சினிமாவில் நிறைய ராமசாமி. புளி மூட்டை ராமசாமி, ஃப்ரண்ட் ராமசாமி அப்போது இருந்தார்கள்.

1950களில் ராமசாமி பாத்திரங்கள் எல்லாம் வேலாயுத பிள்ளை, நாராயண பிள்ளை பையா பிள்ளை இப்படித்தான். 

'பராசக்தி' நாராயணப்பிள்ளை பிரபலம் எல்லோரும் அறிந்த விஷயம். 

1954ல் வி.கே. ராமசாமி 'கனவு' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். பத்மினியின் அக்கா லலிதா இந்த படத்தில் கதாநாயகி.

நடிக்க வந்த பத்து வருடத்தில் ஏ.பி
 நாகராஜனோடு இணைந்து 'மக்களைப் பெற்ற மகராசி', 'நல்ல இடத்து சம்பந்தம்' கே.சோமூ இயக்கத்தில் தயாரித்தவர் ராமசாமி.

நாகராஜனின் திரையுலக வாழ்வில் வி.கே.ஆருக்கு முக்கிய பங்கு உண்டு. ஏபிஎன் பெருவாழ்வுக்கு அஸ்திவாரம் இட்டவர்.

 ஏ.பி.நாகராஜன் முதன்முதலாக இயக்க 'வடிவுக்கு வளைகாப்பு' தயாரிப்பிலும் அவருடைய பார்ட்னர்.
இயக்குநர் ஆக முதல் போட்டு கை கொடுத்தவர் வி.கே. ராமசாமி தான்.
நாகராஜன் இயக்கிய குலமகள் ராதையை தயாரிப்பதற்கும் முதல் போட்டார்.

வி.கே.ராமசாமியின் தம்பி 
முத்துராமலிங்கம் காரணமாக நாகராஜனுடன் மனத்தால் ஏற்பட்டு விட்டது. நட்பை பரிபாலணம் செய்வது சுலமான விஷயமில்லை.

இதனால் திருவிளையாடல் துவங்கி இவருடைய எந்தப் படத்திலும் வி.கே.ஆர் நடித்ததேயில்லை.
இத்தனைக்கும் சிவாஜி கணேசனுக்கு  ராமசாமி நெருங்கிய நண்பர்.

வில்லத்தனமான கதாபாத்திரங்கள் ஆரம்பத்தில் செய்தவர். வி.கே. ராமசாமி சிடுசிடுப்புடன் கடுகடுவென முகம் சுண்டி பேசுவதை சிறப்பாக நடிப்பில் வெளிப்படுத்தியவர். " அட மூதேவி" என்பார்.
கலகலப்பாக முக மலர்ந்தும் நடிப்பை பிரமாதமாக காட்டி நடிப்பவர்.

இவர் சரித்திரப்படம் சர்வாதிகாரியில் எம்ஜிஆருடன் முதன் முதலாக நடித்தார். வீர பாண்டிய கட்டபொம்மனில் எட்டப்பனாக நடித்தவர். மகாகவி காளிதாஸில் இருந்தார். பெரும்பாலும் சரித்திர புராண படங்கள் நடித்ததில்லை. இவருடைய பாணிக்கு அந்த மாதிரி படங்கள் அவ்வளவாக சரிப்பட்டு வராது.

நகைச்சுவை நடிப்பில் சீர்த்தன்மை கொண்டவர்
கொண்ஷ்டைகளே கிடையாது. Slapstick comedy இராது. வசனத்தில் பிரமாதமாக score செய்து விடுவார்.

'குடும்பத்தலைவன்'ல
 எம்.ஆர். ராதாவுடன். 
வி.கே.ஆர் "ஒங்க சின்ன மகன் come" 
ராதா "கம்ம சொல்லு, கம்மச்சொல்லு"

வி.கே.ஆர் "காலம் கெட்டுப்போச்சி"
ராதா "என்னடா, காலத்த தராசுல வச்சி நிறுத்துக்கிட்டே வர்ற"

பார் மகளே பார். அந்தஸ்து, பணத்திமிர் பிடித்த சிவாஜி கணேசனிடம் கோபமாக சண்டை போட்டு பேசும் காட்சி மறக்க முடியாது.
 

புதிய பறவை நாகேஷ் 'Boy' என்ற சிவாஜியின குரலுக்கு அதீத வேகம் காட்டும் போது ராமசாமி நக்கல்
"பையன் ரொம்ப சுறுசுறுப்பு".

'முரடன் முத்து'  - இவர் பெயரே செட்டியார்.

'ஊட்டி வரை உறவு சிவாஜி, முத்துராமன் பாலையாவுடன் லூட்டி படு சுவாரசியம்.
 வி.கே.ஆரின் காமெடி உச்சம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத, சலிக்காத காட்சிகள்.
"டாக்டர் F.R.C.S.  foreign returned"
 வி.கே.ஆர்  வெள்ளந்தியாக " அதனால ஒன்னும்  தப்பு இல்ல "

வி.கே.ஆர் " ஒங்க பையன் என் கால்ல விழுந்து .."

பாலையா " என் பையன் கால்ல விழ மாட்டான். வேட்டி தடுக்கி விழுந்துருப்பான்"

தேவர் தயாரிப்பு படங்களில் விகேஆருக்கு வாய்ப்பு இருந்தது.

மாட்டுக்காரன வேலன்
எஸ். வரலட்சுமி "என்னங்க, மாட்டுக்கொட்டாய்ல இந்த அதிசயத்த வந்து பாருங்களேன்"
வி.கே.ராமசாமி "என்ன ஏசுநாதர் மறுபடி பிறந்துட்டாரா?"

'பட்டிக்காடா பட்டணமா' 
"மாப்பிள்ள அமெரிக்காவில் இருக்கார்.
வர்றதுக்கு மூணு மாசமாகும்"
ராமசாமி " ஏன்? நடந்தே வர்றாரா?"

நவாப் நாற்காலியில் எரிச்சலுடன்
 " அது என்னா பார்? மூன்ஸ்டால் பார்.. மூஞ்சப்பாரு"

ஜெய்சங்கர் ஏசி ரூமைப் பார்த்து குஷியாகி " ஏசி! ஐசி! ஓசி"
இவர் கடி "ஜோக் அடிக்கறியே. பழய ஜோக்கெல்லாம் படிப்பியா?" 

"தடிய தூக்குற வயசா இது?"
சுகுமாரி கேள்வி.
வி.கே. ராமசாமி பதில்
" முடியுது. தூக்குறோம்"
அப்பப்ப ரெட்டை அர்த்தத்தில் தான்
 வி.கே. ராமசாமி வசனம்.

டி.பி.முத்துலட்சுமி “ மாப்பிள்ளை பாடிக்கிட்டே அழுகுறாரு.”

வி.கே.ராமசாமி “பாடிக்கிட்டே அழுவுறவன இப்பத்தான் பாக்குறேன்.”

"பையன் தண்டவாளத்தில தலய வச்சி படுத்திருக்கான்"
"தலகாணி வச்சிக்க சொல்லு

விருதுநகரில் பெரும் தலைவர் காமராஜர் வீடு இருந்த பகுதியில் இவருடைய பெற்றோர் வீடு. காமராஜர் தமிழக முதல்வராக இருந்த போது இவர் நல்ல இளமையில் இவருக்கு திரையுலகில் நல்ல மதிப்பு.

'உயர்ந்த மனிதன்'  சிவாஜி கணேசனுக்கு மைல்கல்.
 வி.கே.ஆர்  ஜோடி மனோரமா. ராமசாமி இளைஞனாக கதாபாத்திரம். நடிக்கும் போது எதிர்பாராத விதமாக முத்தம் கொடுத்து விட்டாராம். மனோரமா "என்னண்ணே இப்படி" என்று சங்கடப்பட்டிருக்கிறார்.

'வீட்டுக்கு வீடு' நாகேஷுடன் அப்பா ராமசாமி அதகளப்படுத்துவார். "தந்தை வழியில் கொஞ்சம் பாதகம்"

1978ல் 'ருத்ர தாண்டவம்" கதாநாயகன். நடித்த நாடகத்தை இவரே திரைப்படமாக தயாரித்து நடித்தார்.
முன்னதாக 1966ல் கே.எஸ்.ஜி இயக்கிய 'செல்வம்', 
1968ல் ரவிச்சந்திரன் நடித்த 'டில்லி மாப்பிள்ளை'  
1971ல் பட்டு  'கண்மலர்' எல்லாம் ராமசாமி சொந்த தயாரிப்பில் வந்தவை.
1980ல் ரவிச்சந்திரன், சங்கீதா நடித்த 'பம்பாய் மெயின் 109' இவர் சொந்தப்படம்.

1983ல் வி.கே. ராமசாமி 'ஜோடிப்புறா' என்ற படத்தின் இயக்குநர். தயாரிப்பும் இவரே. தன் மகன்களை 
(V.K.R. ரகுநாத் - M.R.R. ரகு)
கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடிக்க வைத்தார்.

படத்தயாரிப்பாளராக ரொம்ப நஷ்டங்களை எதிர் கொண்டவர். இது பற்றி இவர் வேதனை "சிவாஜிக்கு சண்முகம் போல எனக்கு நல்ல தம்பி அமையவில்லை"

எம்.ஜி.ஆர் சொன்னாராம்" என்னை வைத்து படம் எடுத்து ஒங்க கடனையெல்லாம் அடச்சிட்டு நிம்மதியா இருங்க. நீங்க பத்திரிக்கையில விளம்பரம் மட்டும் குடுத்துட்டு சும்மா இருங்க. மத்த விஷயங்கள நான் பாத்துக்றேன்" . ராமச்சந்திரன் ராமசாமிக்கு கயிறு போட்டு விட்டார்.
ஆனா கட்சி ஆரம்பிச்சி பிஸியாகி பின்னால தமிழ் நாட்டின் முதல்வராக ஆகி விட்டார். ராமசாமிக்கு பல்பு தான்.

பிற்காலத்தில் ரஜினி அருணாசலம் படத்தில் வி.கே.ராமசாமியோடு இன்னும் சிலரையும் தயாரிப்பாளர்களாக்கி லாபத்தில் பங்கு கிடைக்கச் செய்தார் என்பதை நன்றி, நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார்.

'கல்யாணராமன்' சாமிபிள்ளள பாத்திரம் 
மணிரத்னம் 'அக்னி நட்சத்திரம்' காமெடி ஜனகராஜ் சகிதமா

ஃபாசில் பூவே பூச்சூடவா 
 'வருஷம் பதினாறு' கார்த்திக் 
 'அரங்கேற்ற வேளை' பிரபு ரேவதியுடன்.

மாதவன் நடித்த டும்டும், ராஜேந்தர் இயக்கத்தில் சிம்பு நடித்த காதல்
அழிவதில்லை வரை நடித்தவர்.

வி.கே. ராமசாமி மனைவி ரமணி. அவுட்டோர் ஷுட்டிங் இவரோடு தான் வருவார். படங்கள் ரமணி பெயரில் தயாரித்திருக்கிறார். நாற்பது வருடங்களுக்கு மேல் இவர் தான் துணைவி. 
ரமணியம்மாள் எம் ஆர் ராதாவுடன் வாழ்ந்தவர். அவர் மகன் ரகுவுக்கு ராமசாமி Step Father. ரகு அப்பா ராதா என்றாலும் பரிவோடு வளர்த்ததாக ரகு நெகிழ்ந்து சொல்கிறார். இவருக்கு ரவி என்று தம்பி. எம்.ஆர். ராதாவுக்கு பிறந்த இந்த இருவரையும் தன்னுடைய legal heir ஆக்கிய பெருந்தன்மையாளர் ராமசாமி.

வாழ்க்கையைப் பொருத்தவரை கதாநாயகன் அந்தஸ்தில் இருந்தவர் வி.கே. ராமசாமி.
படுக்கை சுத்தமில்லை. அவர் எத்தனை கல்யாணம் செய்தார்? பிள்ளைகள் ஆணும் பெண்ணுமாக ஏழு பேர் என்கிற விஷயம் உண்மை தானா?

இந்த ரகு பல படங்கள் கார்த்திக் கதாநாயகனாக     நடித்து இயக்கியவர். குஷ்பு, கனகா, சுவாதி, பல்லவி இவர் இயக்கத்தில் கதாநாயகிகளாக நடித்தவர்கள்.

ரகு கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து டேவிட் நாதன் ஆகி விட்டார்.

ராம் மனோகர் என்ற ராமசாமி மகன் வி.சேகர் இயக்கிய 'நீங்களும் ஹீரோ தான்' படத்தில் காளியப்பன் என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 
ராம் மனோகர் (V.K.R. ரகுநாத்) அப்படியே அப்பா வி.கே.ஆர் சாயலில் இருப்பார். 

 

வி.கே. ராமசாமி நாடக உலக அனுபவங்களை கலைப்பயணம் என்ற பெயரில் நூலாக எழுதியிருக்கிறார். திரையுலக ஆனுபவங்கள் பற்றிய புத்தகம் எழுத ஆரம்பித்த போது மரணம் நிகழ்ந்து விட்டது. அதை எழுதி முடித்திருந்தால் பொக்கிஷமாய் இருந்திருக்கும்.
பி.டி. சம்பந்தம் என்ற மிக குள்ளமான நடிகர். அல்பமான கதாபாத்திரங்கள்  படங்களில் செய்தவர். இவர் பற்றி விகே.ஆ சொன்னார் "சம்பந்தம் தான் எல்லோருக்கும் வாத்தியார். நாடக உலகில் ஜாம்பவான். கண்டிப்பானவர். இவரிடம் அடி வாங்காத நாடக நடிகர்களே கிடையாது. என்.எஸ். கிருஷ்ணனே இவர் காலில் விழுவார்."

நடிகர் சங்க செயல்பாடுகளில ராமசாமி பெரும் பங்காற்றினார். நாடக, திரைப்பட நடிகர்களை ஒருங்கிணைத்தவர். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதில் ஈடுபாட்டுடன் நடந்து கொண்டவர்.
இவருடைய அரசியல் வாழ்வு. காமராஜர் நேரடி தொடர்பில் இருந்தும் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது அ.தி.மு.க.வில் சேர விருப்பம் தெரிவித்தார். எம்ஜிஆர் " நீங்க அரசியலுக்கு வரவேண்டாம். திரையுலகிலேயே இருங்கள்."                               Subtext -  சரிப்பட்டு வர மாட்டீங்க.
 எம்ஜிஆர் மறைவுக்குப்பின் சிவாஜி கணேசன் 'தமிழக முன்னேற்ற முன்னணி' ஆரம்பித்தவுடன் அந்த கட்சியில் சேர்ந்து விட்டார். மேஜர் சுந்தர்ராஜன், சௌகார் ஜானகியும் சிவாஜி கட்சியில் இணைந்தார்கள்.
1989 தேர்தலில் எம்ஜிஆர் மனைவி ஜானகியுடன் கூட்டணி. சிவாஜி கூட திருவையாறு தொகுதியில் தோல்வியுற்றார். 
கலைஞர் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சி
 மேஜர் சுந்தர்ராஜனோடு சிவாஜிக்கு நிரந்தர பகை. நல்லவேளை ராமசாமியிடம் மனஸ்தாபம் ஏற்படவில்லை.

சிவாஜியோடும் எம்.ஜி.ஆரோடும் படங்களில் பல சமயங்களில் சேர்ந்து நடிப்பது என்பது கத்தி மேல் நடப்பது போல. அந்த அளவிற்கு அவர்களிடையே புகைச்சல், மனஸ்தாபம் இருந்த்து. வி.கே.ராமசாமி கவனமாக இருந்திருக்கிறார். 
டி.ஆர். மகாலிங்கம், டி.ஆர். ராமச்சந்திரன் துவங்கி ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், ஏ.வி.எம் ராஜன், சிவகுமார், தாண்டி கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரின் பெரு மதிப்பிற்கும் உரியவராகவும் வாழ்ந்த பாக்யசாலி ராமசாமி. மாதவன், சிம்பு வரை பார்த்தவர். 
சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்னை இருந்தாலும் அவற்றையெல்லாம் புறம் தள்ளி நடிப்பதில் அவரிடம் இருந்த Consistency  சிலாக்கியமானது. 1947 துவங்கி 2002 வரை திரைப்பயண சாத்தியம் அசாதாரணமானது.

Legend எனும் சொல் இப்போதெல்லாம் Cliche தான். வி.கே. ராமசாமி ரொம்ப மேலே மதிக்கப்பட வேண்டும்.

Oct 16, 2026

ஆனந்த விகடன் தீபாவளி மலர் 2026 ல் ராஜநாயஹம் எழுதிய " V.K. ராமசாமி"

ஆனந்த விகடன் 2026 தீபாவளி மலரில் 

R.P. ராஜநாயஹம் எழுதியுள்ள 

"V.K. ராமசாமி"


Oct 14, 2026

M.R. ராதா - V.K. ராமசாமி - ரமணி அம்மாள்

இந்த புகைப்படத்தில் M.R. ராதிகா குழந்தையாக. பிறந்த நாள் நிகழ்வு?
ராதிகா அம்மா கீதா மடியில் இருக்கிறார்.

நின்று கொண்டிருப்பவர் M.R. ராதாவுக்கு அப்போது மற்றொரு மனைவி ரமணி.
1960களின் முன் பகுதி புகைப்படம்.

ரமணியம்மா கைராசி படத்தில் எம்.ஆர். ராதா மனைவி சுசிலாவாக நடித்திருக்கிறார். அப்போது அவருக்கு நிஜ மனைவி. பின்னாளில் வி.கே. ராமசாமிக்கு மனைவி.

நடிகை ரமணிக்கு ராதாவின் மூலம் இரண்டு மகன்கள். ரகு. ரவி.
M.R.R. ரகுவை இப்ப வீடியோவில் பார்க்கும் போது அச்சு அசலாக ராதா போலவே இருக்கிறார். கார்த்திக் கதாநாயகனாக நடித்த சில படங்களின் இயக்குநர் ரகு. கிறிஸ்தவராக மாறி விட்டார்.பெயர் டேவிட் நாதன்.

எம்ஜிஆர் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முன்பே ரமணி அம்மாள் ராதாவை விட்டு பிரிந்து விட்டார்.

1970 வாக்கில் ரமணி அம்மாளை (இரண்டு குழந்தைகளுடன் இருந்த போது)  தன் பாரியாளாக V.K. ராமசாமி ஏற்றுக்கொண்டார். குழந்தைகளுக்கு step father என்றாலும் சொந்த பிள்ளைகளாக வளர்த்து சொத்திலும் பங்கு கொடுத்தார்.

ரமணி அம்மாள் நாற்பது வருடங்களாக V.K.R உடன் வாழ்ந்தார்.

Cinema Enum Bootham 234, 235 Episodes

234, 235 Episodes 

R.P. ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம் 

1. தனுஷ் 

2. சிம்பு

......

R.P. ராஜநாயஹம்
'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

Oct 9, 2026

அந்த குர்பானி பாட்டு போட்டு விடுண்ணே

1981 

மதுரை கார்ப்பரேசன் கக்கூஸ்களில் சினிமா பாடல் டேப் ரிக்கார்டரில் ஒலிக்கும். 

டவுன் ஹால் ரோடும் மேலமாசி வீதியில் சந்திக்கும் இடத்தில் உள்ள பொது கழிப்பிடத்தில் சத்தமாக பாட்டு சத்தம் கேட்கும். 

தீப்பொறி ஆறுமுகம்  மெல்வதற்கு சரியான அவல்.

பொதுக்கூட்ட மேடையில் தீப்பொறி குத்த வக்கிற போஸ் குடுத்து உரத்த சத்தமாக குரல். 
ரெண்டுக்கு போய்க்கிட்டிருக்கிறவன் முக்கிக் கொண்டே கேட்கிறானாம் நேயர் விருப்பம்.
"அண்ணே, அண்ணே அந்த குர்பானி பாட்டு போட்டு விடுண்ணே.. குர்பானி ஜீனத் 'அம்மன்' பாட்டுண்ணே"

கூடியிருக்கிற மொத்த ஜனக்கூட்டமும் குலுங்க குலுங்க சிரிக்கிற காட்சி காலக்கண்ணாடியில் தெரிகிறது.

Oct 7, 2026

Descendant of Satan

Dec 9, 2012 post 

Descendant of Satan
- R.P. ராஜநாயஹம் 


The day a lawyer was born,Satan exulted.
"Allah has blessed me with progeny of my own."
- Akbar Ilahabadi

இந்த கவிதையை குஷ்வந்த் சிங் தன் சுய சரிதை  
Truth,Love & a Little Malice ல் குறிப்பிடுகிறார்.

சாத்தானின் வழித்தோன்றல் தான் வக்கீல்.

’A common prostitute renders more service to society than a lawyer.If anything,the comparison is unfair to whore.
குறைந்த பட்சம் அவள்  சமூகத்தேவைக்கு சேவை செய்கிறாள். அவள் தன் க்ளையண்ட்களுக்கு சுகம் தருபவள். 
வக்கீல் அப்படி  pleasure கூட தருவதில்லையே’ என்று சொல்லும் குஷ்வந்த் சிங் இங்கிலாந்தில் அந்தக்காலத்தில் மற்றவர்கள் மூன்று வருடம் படித்த சட்டப்படிப்பை ஐந்து வருடம் படித்து விட்டு லாகூரில் ப்ராக்டிஸ் செய்யும்போது குற்றவுணர்வுக்குள்ளானவர்
- 'My only regret was that I wasted five years studying Law and another seven trying to make a living out of it.'

John Grisham எழுதிய விறுவிறுப்பான கிரைம் நாவல்கள் லீகல் வகையைச்சார்ந்தவை.Legal Thrillers. (Bleachers நாவல் ஃபுட்பால், கோச்சிங் என்று மாறுபட்டது.)  
சில நாவல்கள் ஹாலிவுட் படங்களாகியிருக்கின்றன. அவருடைய பிரபலமான The Firm நாவல் டாம் க்ரூஸ் நடித்து1993ல் திரைப்படமானது. 

Grisham எழுதிய  The Rain Maker நாவல் மேட் டாமன் நடித்து 1997ல் வெளி வந்தது. அந்தப்படத்தில் கூட வக்கீலை ஏனோ செக்ஸ் தொழிலாளியுடன் தான் ஒப்பிட்டு வசனம் - 'What is the difference between a lawyer and a hooker ? A hooker 'll stop screwing you when you are dead.
I'm just another lawyer. Just another shark in the dirty water.'

The Firm நாவலில் Grisham - When you were in Law school you had some noble idea of what a lawyer should be. 
A champion of individual rights; a defender of the Constitution;a guardian of the oppressed;an advocate for your client's principles.
Then after you practice for six months you realize we are nothing but hired guns.
Mouthpieces for sale to the highest bidder, available to anybody, 
any crook, with enough money to pay our outrageous fees.

எரியிற வீட்டில் பிடுங்குனது தான் ஆதாயம்.

.....

மீள் பதிவு