May 20, 2025

வேடிக்க - 41


வேடிக்க - 41


மே 19ம் தேதி பாக்யராஜ் சார் அழைத்ததால் அவர் வீட்டிற்கு சென்ற போது சந்திக்க வாய்த்த ஜோன் ஃபெர்ணான்டோ. தூத்துக்குடி பூர்வீகம்.
அப்பா சென்னையில் இண்டியன் ஓவர்சீஸ் பேங்க்கில் பணியாற்றி ஆறு வருடங்கள் முன்பு ஓய்வு பெற்றிருக்கிறார். அம்மா டீச்சர் வேலை பார்த்தவர்.

ஜோன் ஃபெர்ணான்டோ 
டி.வி. சீரியல்களில் 
எடிட்டர் அசோக் மேத்தாவிடம் அசிஸ்டென்ட். 

தூத்துக்குடி ஃபெர்ணான்டோ என்றாலே சந்திரபாபு ஞாபகம் வரும். சாதாரணமாக தூத்துக்குடிக்காரர்கள் யாரை சந்திக்க நேரும் போதும்  சந்திரபாபு பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். 
தூத்துக்குடி ஃபெர்ணான்டோ என்றால் உணர்ச்சி வசப்பட்டு, கண்கலங்குவதைக்கூட பார்த்ததுண்டு.

ஜோன் ஃபெர்ணான்டோ வயது 35.

"சந்திரபாபு தெரியுமா? தூத்துக்குடி  ஃபெர்ணான்டோ தான்."என்று சொன்னபோது 
ஜோன் தெளிவான பதில் 
" தெரியாது சார் "


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.