Appreciation Star
கோயம்புத்தூர் பீளமேடு, காலை.
எல்லா பள்ளிக்குழந்தைகள் போலவே தான் அதி காலை எழுந்து காலை கடன் முடித்து சீருடை அணிந்து, சாப்பிட்டு விட்டு, நேற்று மாலை செய்து முடித்த
'ஹோம் ஒர்க்' சரி பார்த்து, கிளம்புகிற நேரத்தில் பூக்குட்டி அவசரமாக ரொம்ப சின்ன star எடுத்து ராஜநாயஹம் கையில், மணிக்கட்டுக்கு மேலே விரல்களுக்கு கீழே ஒட்டி விட்டு
சொன்னாள் "Very good தாத்தா. Appreciation star. எடுக்கக்கூடாது. Sixty minutes"
கிச்சனில் பிஸியாயிருந்த ஆச்சியை "Very good ஆச்சி..கையை நீட்டு. Congratulations"
star ஒட்டி விட்டு
" தாத்தா, ஆச்சிக்கு rule என்னன்னு சொல்லிடு"
பூக்குட்டி அப்பா அஷ்வத்துடன் கிளம்பும் போதே ஆச்சியிடம்
ராஜநாயஹம் தாத்தா குரல்
" எப்ப எடுக்கணும்னு சொல்றேன்"
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.