லப்பர் பந்து
தினேஷை லப்பர் பந்தில் பார்க்கும்போது ஓவியர் நடேஷ் ஞாபகம்.
கூத்துப்பட்டறையில் தினேஷ் எலக்ட்ரிகல் வேலை பார்த்த போது நடேஷ் கண்டபடி திட்டி அவமானப் படுத்தியிருக்கிறார். நடேஷ் அனுமானம்: 'தினேஷ் அதை எப்போதும் மறந்து விடவே முடியாது'.
ஹரிஷ் கல்யாண் பார்க்க ரொம்ப பழைய வி.வி. சடகோபன் சாயல் கொஞ்சம் தெரிகிறது.
பார்க்க ஜி.என்.பி போல சடகோபன் அழகான சங்கீத வித்வான். திரைப்பட நடிகர்.
லப்பர் பந்து தினேஷின் தீர்க்கமான பார்வை வித்தியாசம். தீர்க்கப்பார்வை பெரும்பாலும் நடிகர்களுக்கு strain தரக்கூடியது. ஆனால் தினேஷ் இயல்பாக தீர்க்க பார்வை. சித்தர் பார்வை.
கதாநாயகி ஸ்வாசிகா பிரகாசமான பெர்ஃபாமன்ஸ். யசோதை பூமாலை குடும்பம் மகள் மாமியார், அம்மா எல்லாம் முழு ஜீவனோடு படைக்கப்பட்ட பாத்திரங்கள்.
சஞ்சனா 'இனிமே எவனும் பொண்ணு பாக்க இங்க வரக்கூடாது'ன்னு அம்மா அப்பாவை எச்சரிக்கிற காட்சி.
ஹரிஷ் கல்யாண் செய்த அன்பு ரோல் கவினோ, அசோக் செல்வனோ செய்து விடக் கூடியது.
ஆனால் பூமாலை ரோலில் தினேஷ் பொருந்திய அளவுக்கு வேறு நடிகரை நினைத்து பார்க்க முடியாது.
தேவதர்ஷினிக்கு மெய்யழகனில் அரவிந்த் சாமிக்கு ஜோடி. லப்பர் பந்து படத்தில் கணவராக யாரோ முகம் தெரியாத பெரியவர். ஆர்ட்டிஸ்ட் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். கூட நடிப்பவர் பற்றி பேதம் பார்க்காமல் தெளிவாக நடிப்பை காட்டுவது விசேஷம். எண்ணெய் விளம்பரத்தில் ரோபா சங்கருடன் வருவார்.
காளி வெங்கட், பால சரவணன் கதாபாத்திரங்கள் முழுமையான பரிமளிப்பு.
தமிழரசன் பச்சமுத்து பிரமிக்க வைக்கும் இயக்குநர்.
திகட்டாத வசனம்.
அமீர் கான் லகானுக்கு அப்புறம் சுவாரசியமான கிரிக்கெட் படம்.
ஆனால் இந்த லப்பர் பந்து கிரிக்கெட் பற்றியது மட்டுமல்லாத பன்முகத்தன்மை கொண்டது. பற்பல வீச்சுகள்.
https://www.facebook.com/share/p/WfnfiP7x4q2HKUb7/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/p/jzie5793pKCkSM6Z/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/p/2j8s23PeJ4PB1BKL/?mibextid=oFDknk
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.