Oct 27, 2024
எம்ஜிஆர் 1972ல் பிரிந்த பின்
1972 ல் எம்ஜிஆர் பிரிந்த போது
மதுரையில் நடந்த முதல் கூட்டத்தில்
பேசியவர் பேராசிரியர் அன்பழகன் தான்.
அந்த கூட்டம் தான் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் கலந்து கொண்ட கடைசி கூட்டம். கூட்டம் முடிந்த பிறகு சில மணி நேரத்தில் அவர் மரணம்.
அடுத்த வாரம் அதே திலகர் திடலில் நடந்த இரண்டாவது கூட்டத்தில் மணிக்கணக்கில் நாவலர் நெடுஞ்செழியன் மிக நீண்ட நேரம் பேசினார். அந்த பேச்சு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.
(எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் என்று பத்திரிகைகளுக்கு அவசரமாக அறிவித்த நாவலர்)
முதல் வாரம் பேராசிரியர் பேசியதை விட
எம்ஜிஆரை மிக கடுமையாக நாவலர் தாக்கி பேசினார். காரண காரியத்துடன் நாவலரின் அற்புதமான பிரசங்கம்.
பல எம்ஜிஆர் ரசிகர்களே தி.மு.க திரும்பினார்கள்.
அதே இரண்டாவது கூட்டத்தில் ராஜாங்கம் திடீர் மறைவு பற்றி அதிர்ச்சியோடு மதுரை முத்து முந்தைய வாரம் அன்பழகன் தலைமை பேச்சாளராய் கலந்து கொண்ட கூட்டத்தில் ராஜாங்கம் எம்ஜிஆர் ஃப்யூஸ் போன பல்பு என்று குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி பேசினார்.
இது தான் உண்மை.
எம்ஜிஆரை மிக கடுமையாக தாக்கிய மதுரை முத்து எம்ஜிஆர் கட்சியில் சேர்ந்தார் என்பது சரணாகதி தான்.
நெடுஞ்செழியன் சரணாகதியும் அது தான்.
இது தான் நிதர்சனமான உண்மை.
நெடுஞ்செழியன் எப்படியெல்லாம் எம்ஜிஆரை தாக்கினார் என்பதை நெடுஞ்செழியன் பற்றிய ராஜநாயஹம் கட்டுரையில் பார்க்கலாம்.
இணைவதற்கு முன் எப்போதும் பல நாடகங்கள் நடக்கத்தான் செய்யும். தலைவர் அழைப்பு என்பதெல்லாம் அத்தகையதே.
கலைஞரை தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் சகட்டுமேனிக்கு தன்னை மிக கடுமையாக எதிர்த்தவர்கள் எல்லோருக்குமே ஞானஸ்நானம் கொடுத்தார்.
எம்ஜிஆர் கட்சியில் சேர்ந்து கலைஞரை கடுமையாக இவர்கள் விமர்சித்தார்கள்
வேடிக்க - 23
வேடிக்க - 23
27.10. 2024
Elliott's beech Ibaco
R.V. Singh and Professor Diljinder Kaur ( doctorate in English Literature)
From Uttarpradesh.
Tourists from Dehradun.
ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி R.V. சிங்.
காப்பிரைட் , ட்ரேட் மார்க் இதெல்லாம் தான் அவருடைய துறை.
அவருடைய மனைவி டாக்டர் பேராசிரியை தில்ஜிந்தர் கெளர்.
முதல் நாளும் ராஜநாயஹத்தை பார்த்திருக்கிறார்கள்.
அந்த அம்மாள் கணவரிடம் சொல்ல அவர் விசாரித்தார்.
ஒரு மணி நேரம் மூவரும் சரளமாக ஆங்கில உரையாடல்.
கிஷோர் குமார் பாடல்கள் பாடினேன்.
'கோரா காகஸ்தா யேமன் மேரா',
'சல்தே சல்தே கபி அல் விதனா கெஹனா'
'கில் தே ஹைன் குல் யஹான்'
எனக்கு இந்தி மொழி தெரியாது என்பது அவர்களுக்கு ஆச்சரியம்.
'Congratulations and Celebrations',
'Goddess on a mountain top'
'We shall overcome',
'When I was just a child'
கலகலப்பாக ராஜநாயஹம் கச்சேரி.
They listened and enjoyed Rajanayahem songs cheerfully.
Rajanayahem - a die hard fan of Rajesh Khanna.
பரவசமாக R.V சிங் "Upar aaka neeche kaka"
'மேலே ஆண்டவன் கீழே ராஜேஷ் கன்னா'.
Pet name Kaka means Lovable Child.
ராஜநாயஹம் ஏன் movie celebrity ஆக முடியவில்லை என்று திகைத்து கேட்டார்கள்.
பேராசிரியை தில்ஜிந்தர் " 'Ghadha panjiri khate ka'. Means 'Fools get the best in life'
Oh it was a beautiful unforgettable evening.
Oct 25, 2024
Massimiliano Frezzato
Massimiliano Frezzato
Massimiliano Frezzato (12 March 1967 – 21 October 2024)
Italian Comic Artist.
His most famous work is
"I custodi del Maser" (Keepers of the Maser)
in 1996
and has been translated in numerous countries, including France, Belgium, Portugal, United States, Germany and Denmark
Science Ficiton graphic novel series from Italy.
https://www.facebook.com/share/p/9xUDkVuDzDE4gxyd/
Oct 24, 2024
Goddess on a mountain top
Goddess on a mountain top
Was burning like a silver flame,
The summit of beauty and love,
And Venus was her name.
Was burning like a silver flame
The summit of beauty and love
And Venus was her name
goddess on a mountain top
Was burning like a silver flame
The summit of beauty and love
And Venus was her name
Her weapons were her crystal eyes
Making every man mad
Black as the dark night she was
Got what no one else had, whoa!
She's got it
Yeah, baby, she's got it
Well, I'm your Venus
I'm your fire, at your desire
Well, I'm your Venus
I'm your fire, at your desire
She's got it
Yeah, baby, she's got it
Well, I'm your Venus
I'm your fire, at your desire
Well, I'm your Venus
I'm your fire, at your desire
Singer: Mariska Veres
the lead singer of the rock group Shocking Blue.
https://youtu.be/aPEhQugz-Ew?si=CZFhWZJrP9WX2l81
சமுசாவும், டீயும் ஆர்டர் செய்து விட்டு அங்கிருந்த ஜூக் பாக்ஸில் காசு போட்டு
Goddess on the mountain top
Burning like a silver flame
The summit of beauty and love
And Venus was her name
She's got it
Yeah, baby, she's got it
I'm your Venus, I'm your fire
At your desire"
மெய் மறந்து ரசித்துக் கேட்ட காலம் துவங்கி முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்வில் இனணந்து வந்த தாஜ் ரெஸ்ட்ரண்ட்.
செழிப்பாய் இருந்தால் பிரியாணி, பரோட்டா என்று அடித்து நொறுக்குவது வழக்கம்.
தாஜ் எதிரே கண்ணில்லாத மனிதர் புல்லாங்குழல் விற்றுக்கொண்டிருப்பார். புல்லாங்குழலில் அழகாக பாடல்களை வாசித்துக்கொண்டிருப்பார்.
தாஜ் ரெஸ்ட்ரெண்ட் அதிபர் ஜாலியான மனுஷர். காரின் பேனட் மீது தான் உட்கார்ந்துகொண்டு டிரைவரை கார் ஓட்டச் சொல்லி அவ்வளவு பிசியான ரோட்டில் வலம் வருவார்.
மதுரையில் இருந்து வெளியேறிய பின்னும் ஸ்ரீவில்லிபுத்தூர், பழனி, பாண்டிச்சேரி என்று வாழ்ந்த காலங்களிலும் மதுரை வந்தால் குடும்பத்துடன் எப்போதும் தாஜ் போய் பாம்பே டோஸ்ட், ஸ்பிரிங்க் சிக்கன், சிலோன் எக் புரோட்டா, மட்டன் பிரியாணி, ஃப்ரூட் சாலட் சாப்பிட்ட டாஜ் ரெஸ்ட்ரெண்ட்.
பழனியில் நான் இருந்த போது மதுரை வந்து குடும்பத்துடன் தாஜில் சாப்பிட்டு விட்டு கிளம்பிய போது குழந்தை கீர்த்தி தன் விலையுயர்ந்த விளையாட்டுப் பொம்மையை அங்கே விட்டு விட்டான். அது தொலைந்து விட்டதாகத் தான் நினைக்க வேண்டியிருந்தது.
ஆனால் ஆறு மாதம் கழித்து நாங்கள் மீண்டும் தாஜ் வந்த போது சர்வர் தாஜுதின் பாய் அந்த பொம்மையைபத்திரமாகக் கொண்டு வந்து கீர்த்தியிடம் கொடுத்தார்.
மொஹிதீன் பாய், தாஜிதின் பாய் ஆகியோரின் பரிமாறும் அழகு.
2009ல் மீனாட்சியம்மன் கோவிலில் ஒரு உறவு கல்யாணத்திற்கு போயிருந்த நான் தாஜ் போயிருந்த போது யூனி பார்ம் இல்லாமல் முதிய மொஹிதின் பாய்
"ரிட்டயர் ஆயிட்டேன். ஆனாலும் தினமும் டாஜ் வந்துடுவேன்."
தாஜ் களையிழந்து.. பொலிவிழந்து...
அன்று ஸ்பெஷல் ஆக அவரே பறிமாறும் போது பழைய விஷயம் பற்றி பேசினார். Nostalgia.
என்னிடம் கேட்டார்." ஞாபகம் இருக்கா? நீங்க இங்க உங்க ஃப்ரெண்ஸோட ஒக்காந்து சாப்பிடுவீங்க... விஜய காந்து அவரோட ஃப்ரெண்ஸூங்களோட அந்த டேபிளில் உக்காந்து இருப்பாரே.
ஞாபகம் இருக்கா?"
தாஜிதின் பாய் 'கோஸி' ஹோட்டலுக்கு ரொம்ப நாள் முன்னாலே போய் விட்டார்.
Horseman of Death - Salvador Dali
எம தர்மன் எருமையில வருவான்.
Horseman of death in a skeleton horse.
Horseman of Death 1935 Salvador Dali
Single Mother - Despair and Exhaustion
காகித ஓடம் கடல் அலை மீது போவது போல மூவரும் போவோம்
Despair and Exhaustion
19th century social realism.
Completed in 1888, the painting portrays
a single mother holding her infant with her other child clinging to her skirt.
🎨 "Abandoned, However Not By Friends in Need" (1888) by Frants Henningsen
🔍 The Story Behind the Artwork
Henningsen, a Danish artist known for depicting the struggles of middle-class and impoverished individuals, reflects societal concerns about the treatment of single mothers and their children during this time.
"கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்
அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை."
- கலைஞர் கருணாநிதி
காகித ஓடம் ' பாடலை மாயவநாதன் எழுதுவதற்கு பதிலாக 'மறக்க முடியுமா ' தயாரிப்பாளர் கலைஞர் மு.கருணாநிதி எழுதினார்.
டி கே ராமமூர்த்தியிடம் பாடலுக்கு மெட்டு கேட்டார் மாயவநாதன்.
ராம மூர்த்தி " என்னையா மெட்டு. 'மாயவநாதன், மாயவநாதன், மாயவநாதன்' இது தான் மெட்டு ." என்றவுடன் மாயவநாதன் கோவித்துக்கொண்டு போய்விட்டார்.
இந்த கோபம் தான் அவரை வறுமைக்கு விரட்டியது. மான ரோஷம் பார்த்தால் குடும்பம் தெருவுக்கு வந்து விடும் என்று அறியாதவராய் இருந்திருக்கிறார்.
( பல வருடங்களுக்கு முன் ,'தேவி 'பத்திரிகையில் மாயவநாதனின் குடும்பம் அவர் மறைவிற்குப்பின் ஓலை குடிசையில் வசிப்பதை படம் பிடித்து காட்டியிருந்தார்கள் )
காகித ஓடம் பாடலில் பல்லவி மட்டுமல்ல சரணம் கூட
' மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் ' தானே.
"தண்ணிலவு தேனிறைக்க , தாழைமரம் நீர் தெளிக்க " என்று குளுகுளு பாட்டு எழுதியவர் மாயவநாதன்.
பி.சுசிலா பாடியது. "படித்தால் மட்டும் போதுமா"? படத்தில் சாவித்திரி நளினமாக நடந்து பாடி நடிப்பதற்காக.
'நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ? நெஞ்சில்
நினைத்ததிலே நடந்தது தான் எத்தனையோ?
கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ?
கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ?'
என்ற,சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 'பந்த பாசம் ' படப்பாடலை எழுதியவரும் மாயவநாதன் தான்.
”இதழ் மொட்டு விரிந்திட, முத்து விளைந்திடும் சித்திரப்பெண் பாவை,
கண் பட்டு மறைந்தெனை விட்டுப் பறந்திடும் காரணம் தான் யாதோ?”
சந்தங்கள் கொண்ட சொக்க வைக்கும் இந்த பாடல் பந்த பாசத்தில் ஜெமினி - சாவித்திரிக்கு.
பி.பி.எஸ், சுசிலா.
இதயத்தில் நீ “ சித்திரப்பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ, இந்த கட்டுக் கரும்பினைத் தொட்டு குழைந்திட யார் வந்தவரோ”
'தண்ணிலவு தேனிறைக்க , தாழை மரம் நீர் தெளிக்க ' பாடலை குளிர்ச்சியாக எழுதிய மாயவநாதன் கடைசியில் நல்ல உச்சிவெயிலில்,கடும் பசிமயக்கத்தில்,நடுரோட்டில் சுருண்டு விழுந்து இறந்து போனார்.
'என்றும் மேடு பள்ளம்
நிறைந்தது தான் வாழ்க்கையென்பது ' என்று 'நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ ' பாடலில் ஒரு சரணத்தில் எழுதிய மாயவநாதன் அதே பாடலில் இன்னொரு சரணத்தின் கடைசி வரி
" வழி இங்கு வந்து முடியுமென்றால் யார் தடுப்பது?" என கேட்டு எழுதியிருந்தார்.
’விதி’ இங்கு வந்து முடியுமென்றால் யார் தடுப்பது? என்று தான் நான் எப்போதும் இந்த பாடலை பாடும்போதெல்லாம் முடிப்பேன்.
...
(01.12.2008 அன்று எழுதப்பட்ட பதிவு)
https://www.facebook.com/share/p/JPDKUVS47wf3VSKy/
How to win a BREAD?
How to win a BREAD?
Give us this day our daily bread.
“My bread is as boundless as the sea,
My loaf as deep; the more I give to thee,
The more I have, for both are infinite.”
-:Shakespeare
Some are born bready. Some achieve breadiness, and some have bread thrust upon them.
Christian Krohg
"The Struggle for Existence"
(1889)
Norway
Realism
He is widely known for his numerous genre paintings depicting Skagen sailors and fishermen. One of the artist's calling cards was the painting "The Struggle for Existence", which depicts the distribution of free bread to the poor...
____
பசியில் ரொட்டிக்காக ஏங்கித் தவிக்கும் குழந்தைகளும் பெண்களும்.
1889ம் ஆண்டு நுட்பமாக வரையப்பட்ட
The struggle for existence ஓவியம்
In hunger for bread
There is not a thing that is more positive than bread.With a piece of bread in hand they can
find paradise.
பசித்தவர்களுக்கு ரொட்டி தான் தெய்வம்.
Poverty is a great enemy to human happiness.
https://www.facebook.com/share/p/JPDKUVS47wf3VSKy/
'தழல் வீரம்' பற்றி ராஜா ஹஸன்
"தழல் வீரம் நூல் இதுவரைபடித்தவற்றிலேயே மிகவும் அருமையான படைப்பு.
ஒன்றில் இருந்து ஒன்று தாவிச் செல்லும் எழுத்து விரிந்து கொண்டே கட்டமைக்கும் உலகம் மிகவும் சிறப்பானது."
Raja Hassan
ராஜா ஹஸன் :
'ராஜநாயஹம் நமக்குத் தரும் செய்திகள் ஒவ்வொன்றும் வாசிக்க வாசிக்க அவை உணர்த்தும் சித்திரங்கள் அற்புதமானவை. ❤️இலக்கியம், திரைத்துறை, கர்நாடக இசை ,தமிழ் திரை இசை என பல துறை வித்தகர்.
வலைப்பூ காலத்தில் இருந்தே அவரது எழுத்துக்களை பின்தொடர்ந்து வருகிறேன். மிகவும் அற்புதமான கட்டுரைகள் .அவற்றில் செறிவான உள்ளடக்கம் அவை தரும் மெல்லிய புன்னகை.. ❤️ அந்தக் கதை மாந்தர்களின் வாழ்வனுபவம் வாசிப்பதற்கு மிகவும் இலகுவான தன்மை உடையது..
அவருடன் நட்பு என்றும் போற்றுதலுக்குரியது. மிகச் சிறந்த பண்பாளர் ❤️
சமீபத்தில் வாசித்த அவரது 'தழல் வீரம்' நூல் இதுவரை படித்தவற்றிலேயே மிகவும் அருமையான படைப்பு என்பேன்.
ஒன்றில் இருந்து ஒன்று தாவிச் செல்லும் எழுத்து விரிந்து கொண்டே கட்டமைக்கும் உலகம் மிகவும் சிறப்பானது. ❤️❤️
படைப்பூக்கத்துடன் இன்னும் பல நூல்களை எழுதி தமிழ் சமூகத்திற்கு சிறந்த தொண்டாற்ற வேண்டும் என அவரைக் கேட்டுக்கொள்கிறேன்.'
https://www.facebook.com/100006104256328/posts/3864575857089185/?app=fbl
https://www.facebook.com/share/p/gseJxQ6uvX8Ezj6E/
https://www.facebook.com/share/p/rVdqCxMYAQav3dUA/
Oct 20, 2024
வேடிக்க - 22
வேடிக்க - 22
திருப்பூரில் முதலில் அவினாசி பழங்கரையில் வேலை. 2003 மார்ச் 24 - மே 24
கம்பெனியிலிருந்து ஆஃபிஸ் வேலை சம்பந்தமாக பெரும்பாலும் திருப்பூர் செல்ல வேண்டியிருக்கும்.
ஸ்டாஃப்ஸ் யாராவது கம்பெனி பைக்கில் செல்லும் போது கூடவே ராஜநாயஹம்.
ஏப்ரலில் வாட் வரி விதிப்பு பற்றிய அரசு விளக்கத்தையொட்டி நடந்த கூட்டம்.
கூட்டத்திற்கு வந்திருப்பவர்களுக்கு சின்ன நோட்டு, பேனா கொடுக்கப்பட்ட போது கூட வந்த கம்பெனி ஸ்டாஃப் (Brahmin youngster. கல்யாணமானவன்) தனக்கு வாங்கிக்கொண்டு ராஜநாயஹத்திடம் இருந்து உடனே கிட்டத்தட்ட பிடுங்கினான்.
'புதுசா வேலைக்கு சேந்தவனுக்கு எதுக்கு இதெல்லாம்.' னு அர்த்தம்.
கூட்டம் முடிந்தவுடன் 'இன்னொரு வேலையிருக்கு'ன்னு ராஜநாயஹத்தையும் பைக்கில் பின்னால் உட்கார வைத்து கிளம்பினான்.
"ஆசிரமத்துக்கு போய் சாமியார பாக்கணும்"
ஆசிரமத்தில் நுழைந்தவுடன்
" எறங்குங்க" சொல்லி பதட்டத்துடன் பைக்கை ஸ்டாண்ட் போடாமல் கீழே போட்டு விட்டு ஓட ஆரம்பித்தான். " சாமி வர்றாங்க "
நெறய்ய ஜனங்க. அவங்களோட இந்த கம்பெனி ஸ்டாஃப் ஓடினான்.
"இங்க இல்ல அங்க"
ஒடனே அங்க ஓடினான்.
"இங்க இல்லீங்க.. அங்க"
மாறி மாறி ஓடிக் கொண்டே...
தவித்தான்.தக்காளி வித்தான்.
அவன் கீழே போட்ட பைக்கை தூக்கி ஸ்டாண்ட் போட்டு விட்டு ராஜநாயஹம் இதையெல்லாம் வேடிக்க பார்த்துக் கொண்டு...
அரை மணி நேரம் கழித்து இரைக்க இரைக்க வந்து பைக்க ஸ்டார்ட் பண்ணி
" ஒக்காருங்க. சாமிய பாத்துட்டேன். அது போதும். சாமிய பாத்ததே போதும்"
ரெண்டு மாசம் அந்த கம்பெனி வேலை.
அடுத்து வேலை பாத்த கம்பெனியில் எட்டு வருஷம்.
அப்ப ரெண்டு வருஷம் இருந்த வீடொன்றில் இருந்து அதே ஆசிரமம் மிக பக்கம்.
ஞாயிற்றுக்கிழமை ஆசிரம அன்னதானம்.
அந்த வீட்டு ஓனர் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதிய சாப்பாடு குடும்பத்தோடு ஆஜர்.
வாக்கிங் எப்போதும் அந்த ஆசிரமம் முன்பாக சாலையையொட்டி ராஜநாயஹம் போவதுண்டு.
.....
நேற்று மாலை இங்கே சென்னையில் சம்பந்தமேயில்லாமல்
நிர்ப்பந்தம் காரணமாக, எங்கே போகிறோம் என்றே தெரியாமல் சென்ற போது யாரென்றே தெரியாத கார்ப்பரேட் குருஜியின் ஆசிரமம்.
கண்ண கட்டி காட்டுல விட்ட நெலன்னாலும் வேடிக்க வேடிக்க தான்.
சாமியை பார்க்க ஏகப்பட்ட ஆண்கள் பெண்கள் கூட்டம். ஜனங்க பிரச்சினைகள் ரொம்ப கூடிப் போய் விட்டதே.
கார் உள்ளே நுழைய ஏகப்பட்ட கெடுபிடி.
பன்னிரண்டு வருடங்களாக திருப்பூரில் பார்த்தேயறியாத சாமியார் இப்போது மூனு செகண்ட் காணக்கிடைத்தார்.
ராஜநாயஹம் வேடிக்க பார்க்கும் போது special, sophisticated and richdevotees புடை சூழ தாண்டிப்போன குருஜி.
அப்போது கூட யாரென்று தெரியவில்லை.
அங்கிருந்து காரில் வெளியேறிய பின்னர் போகிற வழியில்'யார் இவர்?' என்று விசாரித்த போது தெரிந்தது. திருப்பூர் ஆசிரம சாமியார் தான்.
கீழே 2008ல் திருப்பூர் சாமியாரின்
பக்தை பற்றி எழுதிய பதிவு.
க.நா.சுவின் பிரபல நாவல் 'பொய்த்தேவு'
தலைப்பு பதிவிற்கு.
.....
2008 post
Sep 7, 2008
பொய்த்தேவு
- R.P. ராஜநாயஹம்
சென்ற வருடம் என் துணைவிக்கு பல் டாக்டரை பார்க்க அழைத்து சென்றிருந்தேன் . டாக்டரம்மா என் மனைவியை செக் செய்து ட்ரீட்மென்ட் கொடுத்துக்கொண்டிருந்த போது வெளியே பொழுது போகாமல் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தேன் . ஒரு அம்மாள் அங்கே ஒவ்வொருவரிடமும் ஏதோ சொல்லி ஒரு நகல் பிரதி ஒரு பக்கம் உள்ளதை நோட்டீஸ் போல கொடுத்துகொண்டிருந்தவர் என்னை பார்த்தவுடன் நான் வேலைவெட்டி இல்லாமல் அங்கே நிற்பதை புரிந்து கொண்டு உடனே என்னிடம் வந்து விட்டார் .
" சார் , நான் இங்கே ஆசிரமத்தை சேர்ந்தவள் . எங்க சாமி பெயரை தான் என் பெயருடன் வைத்திருக்கிறேன் பாருங்கள் . " அவர் கொடுத்த நோட்டீஸ் பார்த்தேன் .ஆமாம் . தன் பெயருடன் அந்த ஆசிரமத்தின் சாமியார் பெயரைத்தான் வைத்திருந்தார் ." என் கணவர் இங்கே பாங்கில் வேலை பார்க்கிறார் . எனக்கு இரண்டு பிள்ளைகள் கல்லூரியில் படிக்கிறார்கள் . ஆனால் என் கணவர் பெயரை என் பெயருடன் சேர்க்காமல் எங்க சாமியார் பெயரை தான் சேர்த்திருக்கிறேன் பார்த்தீர்களா ?"
நான் மையமான புன்னகையுடன் "ம்ம்ம் சொல்லுங்க " என்றேன் .
"சுவாமி சொல்லிட்டாங்க சார் . இனி இந்த சுனாமி பிரச்சினை கிடையாது . நான் பார்த்துகொள்கிறேன்ன்னு . கவலையே படவேண்டாம் சார் . எங்க ஸ்வாமி தான் சார் உலகத்தை காப்பாற்றியவர் . சுனாமி அழிவிலிருந்து உலகை காப்பாற்றியவர் . இதில் ஒரு பிரார்த்தனை இருக்கு பாருங்க .இதை சொன்னால் போதும் . எங்க சாமியார் உங்களுக்கு நீங்க கேட்டதெல்லாம் தருவார் . எப்போ சார் நீங்க எங்க ஆசிரமத்துக்கு வர்றீங்க "
என்னை பெருமையாக பார்த்து விட்டு மேலும் தொடர்ந்தார் ."இவ்வளவு சொல்றேனே . நான் யார் என்று நீங்க யோசிக்கிறீங்க . சொல்றேன் சார் . நான் வேறு யாருமில்லை சார் . ஸ்வாமி விவேகானந்தா இல்ல . சாட்சாத் விவேகானந்தாவோட மறு பிறப்பு சார் நான் . இந்த பிறவியிலே பெண்ணா பிறந்துருக்கேன் சார் ."
எனக்கு வேதனையாயிருந்தது . விவேகானந்தர் பெண்ணா பிறந்துட்டாரே என்பதற்காக இல்லை . இந்த பிறவியில் அவர் இன்னொரு சாமியாருக்கு இப்படி அடியாராக இருக்கிறாரே .....இப்படி நினைக்கும்போதே என் தவறை உணர்ந்து உடனே,உடனே திருந்திவிட்டேன் .யார் கண்டது . அந்த ஆசிரம சாமியார் தான் பரம ஹம்சரின் மறு பிறவியோ என்னவோ .
சட்டென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது . திருச்சியில் அந்த காலத்தில் பிரேமானந்தாவின் சிஷ்யர்களும்" எங்க சுவாமி வேறு யாருமில்லே . சுவாமி விவேகானந்தா வின் மறு பிறவி தான் ."என்று தான் பயமுருத்திகொண்டிருந்தார்கள் .
நாம் எப்போதும் நல்ல படியே நினைப்போம் . ஒருவேளை இப்படியும் இருக்கும் . விஷ்ணு ஒரே நேரத்தில் பரசுராமன் , பல ராமன் , ஸ்ரீகிருஷ்ணன் -இப்படி மூன்று அவதாரங்கள் எடுக்க வில்லையா . அது போல விவேகானந்தர் இப்போது பிரேமானந்தாவாகவும் இந்த திருப்பூரம்மாவாகவும் மறு பிறப்பு எடுத்திருப்பார்.
.....
Aug 25, 2008
பிரபலமான இரு வீடுகள்
- R.P. ராஜநாயஹம்
இல்லாதவனுக்கு பல வீடு.
நான் திருச்சியில் குடியிருந்த இரு வீடுகள் சற்றே விஷேசமானவை.
1986 ல் பீமநகர் ராஜா காலனியில் நான் குடியிருந்த வீடு பின்னால் ஒரு பதினான்கு வருடத்தில் சரித்திர புகழ் பெற போவது எனக்கு அப்போது தெரியாது. அந்த வீடு தான் பின்னால் கார்கில் யுத்த தியாகி மேஜர் சரவணனின் வீடு. பத்து வருடங்களுக்கு முன் பல பெரிய அரசியல்வாதிகள் அந்த வீட்டிற்குள் நுழைந்து சரவணனின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்ன போது மிகவும் popular. ஜெருசலேம் , மெக்கா போலாகியிருந்தது.
அந்த வீடு பிரபலமான கால கட்டத்தில் நான் ஸ்ரீவில்லி புத்தூரில் இருந்தேன்..
புதுவையிலிருந்து கிளம்பி 1990 டிசெம்பரில் திருச்சியில் எடமலைபட்டி புதூர் ஸ்டேட் பேங்க் காலனியில் நான் குடியேறிய வீடு அதற்கு ஏழு வருடங்களுக்கு முன் குடி இருந்த ஒருவரால் ஏற்கனவே பிரபலமாயிருந்தது.
1990 ல் அதற்கு சிலவருடம் முன்னரே அவர் பெரிய பணக்கார சாமியாராகி பாத்திமா நகரில் பெரிய ஆசிரமம் அமைத்து கோலோய்ச்சிகொண்டிருந்தார்.
அப்புறம் நான் ஸ்ரீவில்லி புத்தூர் போன பின் தான் 1994ல் அவர் அரசாங்க விருந்தாளியானார்.
1983 ல் அவர் அகதியாக வந்த போது குடியேறிய வீடு பின் எனக்கு 1990 ல் வீடாகி இருந்தது.
அக்கம் பக்கம் இருந்த அவருடைய பக்தர்கள் என் வீட்டை பற்றி அப்போது "சுவாமி குடியிருந்த வீடு எங்களுக்கு ஜெருசலேம் " என என்னிடம் சொல்வார்கள்.
ஒரு நாள் நான்காவது வீட்டில் குடியிருந்தஅவருடைய உப சாமியார் கமலானந்தா வின் தகப்பனார் இறந்த போது, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அந்த சாமியார் நடந்து வந்த போது என் வீட்டையும்(Nostalgia. அவர் குடியிருந்த வீடல்லவா ) அங்கே வாசலில் நின்று கொண்டிருந்த என்னையும் உற்று பார்த்தார்.
நான் உடனேயே " பன்னி போல இருக்கிறான். இவனை சாமியார் ன்னுறாங்களே " என்று வாய் விட்டே சொன்னேன். அது உண்மையென்றே ஆகிபோனது.
அந்த சாமியார் பிரபலமான பிரேமானந்தா.
.......
எம்.ஜி. சுரேஷ் சொன்ன
சம்பவம் கீழே.
சுரேஷ் தன் அலுவலக பணியில் ஏதோ ஊருக்கு இன்ஸ்பெக்சன் போயிருந்த போது நடந்தது.
அந்த ஊரில் விஷேசமான சாமியார் என நம்பப்பட்ட ஒருவர் இருந்திருக்கிறார்.
அவரை போய் பார்த்தால் என்ன என சுரேஷ் எண்ணியிருக்கிறார்.
அலுவலக ஊழியர்கள் சிலருடன் அந்த சாமியாரை பார்க்க கிளம்பியிருக்கிறார்.
அப்போது கூடவே வந்த உள்ளூர் அலுவலக பியூன், வழியெல்லாம் அந்த சாமியாரை மிக கடுமையாக விமர்சித்துக்கொண்டு வந்திருக்கிறார்.
" தேவிடியா பய சார் இந்த சாமியார். ஒண்ணாம் நம்பர் அயோக்கியன். இவனை போய் நீங்க பார்க்கனுமா ?"
'சரியான பொம்பளை பொறுக்கி. எத்தனை பொம்பளையை அசிங்கம் பண்ணியிருக்கான் தெரியுமா? தேவிடியா பய இந்த சாமியார் "
" பிராடு பய சார். ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்கான். இவனையும் சாமின்னு இந்த ஜனங்க நம்பிகிட்டு இருக்கு. த்தூ.சாக்கடை பன்னி.ஏன் சார் இந்த பன்னியை போய் நீங்க பார்க்க வர்றீங்களே "
''பணக்காரங்களை தான் இந்த சாமியார் மதிப்பான்.காசுலே தான் குறி. என்னைக்குனாலும் இவன் போலிஸ் கிட்ட கட்டாயம் ஒரு நாள் மாட்டுவான். எவ்வளவு நாள் தான் இவன் மோசடி நடக்கும். பேமானி சிக்குவான் பாருங்க ஒரு நாள் .ரொம்ப நாள் எல்லாரையும் ஏமாத்த முடியாது சார்.''
ஆசிரமம் வந்தவுடன் இந்த பியூன்
'குடு ,குடு ' என்று வேகமாக,
அவசரமாக ஓடி,
பய பக்தியோடு நடுங்கி தோப்பு காரணம் போட்டு ''சாமி, என் தெய்வமே, ஒங்க ஆசீர்வாதம் வேணும் சாமி '' என்று கூப்பாடு போட்டு சாஸ்டாங்கமாக சாமியார் காலில் விழுந்து விட்டாராம்.
......
ரோகிணி தமிழ் படங்களில் நாற்பத்தி ஏழு ஆண்டுகள்
ரோகிணி தமிழ்ப்படங்களில் நாற்பத்தி ஏழு ஆண்டுகள்.
ரோகிணி ஆந்திராவைச்சேர்ந்தவர்.
குழந்தையாயிருக்கும் போதே 1974ல் இருந்து தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
Her debut as a child artist was in 'Harathi'.
1974 Telugu movie.
1974லேயே இன்னும் இரண்டு படங்கள்?
அதனால் திரைப்படங்களில் ஐம்பது ஆண்டுகளாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
அருஞ்சாதனை.
1975ல 'யசோதா கிருஷ்ணா'ன்னு தெலுங்கு படம். ஜமுனா யசோதாவா நடிச்சாங்க. கிருஷ்ணனாக ராமகிருஷ்ணா.
இதில குழந்தையாக ரோஹிணி பாலகிருஷ்ணா. ஸ்ரீதேவி இளையகிருஷ்ணா.
'யசோதா கிருஷ்ணா' தான் தனக்கு debut என்ற அர்த்தத்தில் ரோகிணியே சொல்லியிருக்கிறார்.
தமிழில் நடிக்க ஆரம்பித்து நாற்பத்தி ஏழு ஆண்டுகள்.
பல மலையாள படங்களிலும் நடித்தவர்.
1989 துவங்கி நிறைய கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியவர்.
ஒரு சில படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார்.
இயக்குநர்.
ரோகிணி இயக்கத்தில்
2014ல் 'அப்பாவின் மீசை'
சேரன், நித்யா மேனன் நடிப்பில்.
டிவி சீரியலில் கூட இயக்கப்பணியாற்றியிருக்கிறார்.
ரோகிணி தமிழ் சினிமாவில் முதலில் 1977ம் ஆண்டு "முருகன் அடிமை" படத்தில் குட்டி முருகன் ஆக நடித்தார்.
1978ம் ஆண்டு புண்ணிய பூமி படத்தில் குட்டிப்பையனாக வாணிஸ்ரீ மகனாக.
எஸ் ஜானகி பாடிய"நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்" உருக்கமான பாடல் காட்சியில் வாணிஸ்ரீயுடன் வருகிற ரோகிணி.
Oct 16, 2024
We will rise again
"We will rise again"
George Rodrigue painting (2005)
The storm is up, and all is on the hazard.
Another storm brewing; I hear it sing i’ th’ wind.
Blow winds, and crack your cheeks! Rage, blow!
- Shakespeare
The to and fro conflicting WIND&RAIN
We won't be defeated by these floods.
Face the blues they send to meet us
Natesh appreciation on R.P.Rajanayahem
Natesh on R. P. Rajanayahem
Koothuppattarai Boss M. Natesh
on Actor R. P. Rajanayahem
"By 1990 I was 11 years old in theatre.
Kind of knew all techniques to train
an actor’s body-voice;
but not the mind.
I thought that a person with trained skills
in all that I know can go on stage,
pick up his/her life’s problems and deliver a solo show of good theatre.
No text by-hearting, no rehearsals. IT NEVER HAPPENED.
IN 2018 Rajanayahem comes on stage and does exactly that 28years later!!!!!!!!!!!!!...
I acknowledged the same day after the show
in front of the audience.
An intelligent, evocative, transformative actor changing roles like a chameleon.
R. P. Rajanayahem is a Transformative Actor "
..
நான்காண்டு பணிக்கு பின்னர் கூத்துப்பட்டறையை விட்டு R.P. ராஜநாயஹம் வெளி வந்த பின்னர்
பல மாதங்கள் கழித்து
ராஜநாயஹம் பற்றி வெளிப்படையாக நடேஷ் எழுதிய வார்த்தைகள்
"உங்கள் முக்கியத்துவத்தை கூத்துப்பட்டறை நண்பர்கள் உணர்ந்து
உங்களிடம் கற்று உயர்ந்து இருக்க வேண்டும்.
தவற விட்டு விட்டார்கள்."
- மு.நடேஷ்
.....
Natesh comment on Rajanayahem
3yrs back after entering KalaignarTV
as a TV Presenter
to do 'Cinema Enum Bootham' serial
"R.p. Rajanayahem,
I think you have started a new career in front of the cameras for the television channels.
If you can also perform your experiences in front of the television cameras you will very soon become a superstar in no time.
Mark this day time and period
when I say this to you."
https://www.facebook.com/share/p/mMZxsdTVsxeUJLKm/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/p/heHwQq8newkxgxnY/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/v/SnHdMoKoHLeoTZVU/?mibextid=oFDknk
Oct 15, 2024
"IN THE RAIN" (painted by Gaetano Bellei)
Italian painter Gaetano Bellei
"IN THE RAIN"
In the painting "In the Rain" (1919)
where the perfect technique
of conveying rain
and clothes of models attracts attention.
'Raindrops keep falling on my head'
.....
2009 பதிவு
புல்லை நகையுறுத்தி
- R.P. ராஜநாயஹம்
புல்லை நகையுறுத்தி , பூவை வியப்பாக்கி விந்தை செய்யும் ஜோதி என்று குயில் பாட்டில் பாரதி சூரிய நமஸ்காரம் செய்வார்.
' புல்லை நகையுறுத்தி '
சூரியோதயம் புல்லை நகையாக்குகிறது. அல்லது புல்லுக்கு நகை தருகிறது.பாரதி புல்லை நகையாக்கினார் .
தாணு பிச்சையா என்ற தங்க நகை செய்யும் ஆசாரி ,
தங்கத்தொழிலாளியின் கவிதை தொகுப்பு 'உறை மெழுகின் மஞ்சாடிப் பொன் '.
அதில் ஒரு தங்கமான கவிதை -
காதில் தங்கத்தில் தொங்கட்டான் போட்டுக்கொள்ள வசதியில்லாத ஏழைப்பெண். என்றாவது காதில் தொங்கட்டான் போட்டுக்கொள்ள முடியும் என்ற ஆசையும் நம்பிக்கையும் போகுமோ? காதின் துளை மூடிவிடாமல் இருக்க வேப்பங்குச்சியை ஒடித்து சொருகியிருக்கிறாள். மழை பெய்கிறது . மழைத்துளிகள் ஏழைப்பெண் காதில் வழிகிறது. காதில் உள்ள வேப்பங்குச்சியிலிருந்து சொட்டு சொட்டாக தொங்கட்டான் ஆகி .....
" ஓடித்துரசி போட்டுக்கொண்ட
வேப்பங்குச்சியால் உகுக்கிறாள்
தொங்கட்டானைப் போலுள்ள
மழைத்துளிகளை "
விவசாய எதிர்பார்ப்பை பொய்க்க வைத்த மழை பற்றி தேர்ந்த முதிர்ந்த விவசாயி
" நேத்து பெஞ்சது என்ன மழையா ? மாமியா செத்ததுக்கு மருமக அழுத மாதிரில்லே இருந்துச்சு . மழைன்னா புருஷன் செத்தா பொண்டாட்டி அழுதமாதிரி இருக்கணும் ."
எஸ்.வைத்தீஸ்வரன் கவிதை - மேகங்களின் சேட்டை பற்றி :
வானம் கட்டுப்பாடற்று
பெற்றுத் திரியவிட்ட
மேகங்கள் ,
பொல்லா வாண்டுகள் .
நினைத்த இடத்தில் ,கவலையற்று ,
நின்று தலையில் பெய்துவிட்டு ,
மூலைக்கொன்றாய் மறையுதுகள்
வெள்ளை வால்கள்!"
மழை ,மேகங்கள் எனும்போது மின்னல் பளிச்சிடும் .
பிரமிளின் மின்னல் படிமங்கள் - ககனப் பறவை நீட்டும் அலகு, கடலில் வழியும் அமிர்த தாரை
'யது நாத்தின் குருபக்தி 'சிறுகதையில் தி.ஜானகி ராமன் :மின்னலின் அழகைக் காண ஒரு கணம் போதாதா ? ஒரு கணத்திற்கு மேல் தான் கிடைக்குமா ?'
மேக்பெத் நாடகத்தின் முதல் வசனம்
“When shall we three meet again?
In thunder, lightning or in rain “
.....
.
Third class in a train
இந்த ஓவியம்
டாக்டர் ஷிவாகோ திரைப்படத்தை நினைவு படுத்துகிறது.
அதில் இதை விட அதிகமாக புளி மூட்டையை அடைத்தது போல ரயிலில் நிர்ப்பந்தமாக மக்கள்.
The poverty of the poor in a third class train.
Cattle class?!
“The Third Class Carriage”, 1864,
Honoré Daumier (1808.2 ~ 1879.2);
realism,
oil on canvas,
65cm x 90cm
Metropolitan Museum of Art in New York.
1. One of three series by
French painter Honore Daumier
2. The artist expresses the loneliness
and helplessness of the expressionless people in
the third-class carriage.
The child's mother and grandmother,
maintaining their healthy vitality
despite the crowded rooms, unclean
environment, and difficult city life.
3. The artist
instinctively
observed people's muscles and
movements
and expressed them well
without missing
even the smallest
detail.
Oct 14, 2024
R.P. ராஜநாயஹம் எழுத்து - கீதப்ரியன்
கீதப்ரியன் கார்த்திகேயன் வாசுதேவன்:
R.P. ராஜநாயஹம் சார்,
உங்களுக்கு மீறி இங்கே இலக்கியவாதி, எழுத்தாளர், தத்துவஞானி , அல்லது கவிஞர் இல்லை,
தவிர தலைக்கனமின்றி முன்னோடிகளை கொண்டாடும் பண்பை உங்களிடம் அனைவரும் படிக்க வேண்டும்.
அபுனைவுக்கும் சாகித்ய விருதுகள் தரப்பட்டுள்ளன, சாகித்ய விருது உங்களுக்கு தரப்படுவது சரியானது,
சாலப் பொருத்தமானது.
உலக இயல் இசை நாடகங்கள் குறித்து ஒரிஜினலாக மனிதில் இருந்து இங்கே எழுதுவது நீங்கள் மட்டுமே, உங்கள் எழுத்துகள் க்ளாஸிக் ஆக மாறுகிறது.
நூறாண்டு தாண்டியும் வாசிக்கப்படும் அபுனைவுகள் உங்களுடையது.
உங்களுக்கு கிடைக்காத விருதுகள் விருதுகளே அல்ல என்பேன், இதை எழுத எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
முழுத்தகுதியும் கொண்ட தமிழ் இலக்கியவாதியின் மீதான சாபம் உண்டு, அது வாழும் காலத்தில் கொண்டாடப்படாதது,
அது உங்களுக்கும் நடக்கிறது.
இந்நிலை நிச்சயம் மாறும்.
Oct 12, 2024
வேடிக்க - 21
வேடிக்க - 21
பெசண்ட் நகர் பீச்.
அவ்வப்போது கலகலப்பாக
பாட்டு கச்சேரி. ராஜநாயஹம் பாடுவதை ரசிக்கும் பெரியவர் சந்திரன்.
Chandran Peechulli Krishnan.
Citizens Support Services
ராஜநாயஹம் பாடும் போது வந்து அமர்ந்து விடுவார். Western, Hindi, Tamil songs.
Open throat ல பாடும் ராஜநாயஹம்.
மற்றவர்கள் சொல்வார்கள். " நீங்கள் பாடினால் இவர் வந்து உட்கார்ந்து விடுவார்."
சமீபத்தில் தான் அவருடன் பேச முடிந்தது.
" உங்க குரலில் உள்ள மெலடி ரொம்ப பிடிக்கும்"
Keralite.
சந்திரன் மூன்று Ph.D வாங்கியவர்.
Marine science, Engineering, Law மூன்றிலும் Doctorate.
எழுபத்தெட்டு வயது. மனைவியோடு பெசண்ட் நகரில் வசிக்கிறார்.
Twitter activist. சமூக பிரச்னைகள் பற்றி நிறைய எழுதுபவர்.
மகன்கள் இருவரும் கப்பல்களில் கேப்டன்.
Oct 11, 2024
Appreciation
Retd Customs Joint Commissioner
Subramaniam Sathivel appreciates
R.P. Rajanayahem :
"தங்களது நூலான "சினிமா
எனும் பூதம்" பற்றிய
திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பாராட்டுப் பதிவை பார்த்தேன். திரைத் துறையில் தங்களுக்கு உள்ள ஆழ்ந்த ஈடுபாடு பற்றியும் , அத்துறை சார்ந்த பல தரப்பட்ட கலைஞர்கள் பற்றி தாங்கள் சேகரித்து வைத்துள்ள எண்ணிலடங்கா தகவல்களை
தங்களுக்கே உரித்தான தனிப்பட்ட முறையில் எவ்வாறு எளிமையாகவும் , நேர்த்தியாகவும் அதே நேரத்தில் அனைவரும் விரும்பிப் படிக்குமாறும் சொல்ல முடிகிறது என வியந்துள்ளதாக பதிவு செய்துள்ளார்.மேலும் அவர் தங்களை ஒரு movie connoisseur என்று பாராட்டியிருப்பது சாலச் சிறந்தது ஆகும்.
தங்களது சினிமா எனும் பூதம்
நிகழ்ச்சியை தொலைக் காட்சியில் வாரந்தோறும் தவறாது பார்த்து ரசித்து வரும் ரசிகர்களில் நானும் ஒருவன்.அது வரை கேட்டிராத தகவல்களை தாங்கள் எந்த வித குறிப்பும் இல்லாது தொகுத்து வழங்கும் விதம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது.இவற்றைப்
பார்க்கும்போது
திரு.உதயநிதி ஸ்டாலினின்
வார்த்தைகள் எத்துணை
சிறப்பானவை என்பது சொல்லாமலே விளங்கும்.அவருக்கு நன்றி!
தங்களது பணி தொடர வாழ்த்துக்கள்."
Oct 8, 2024
150th 151st Episodes
150th, 151st Episodes
R.P. Rajanayahem
Cinema Enum Bootham
13.10.2024 Sunday
20.10.2024 Sunday
Murasu TV
Morning 8.30 a.m
Jayasudha
Jayaprada
.....
2021 டிசம்பர் 5ம் தேதி முதல்
ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்'
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
Oct 7, 2024
வேடிக்க - 20 Cultural Difference
ஆஸ்ட்ரேலியா கஸின் ஆரோவை வாட்ஸ் அப்பில் அழைத்தேன்.
மெல்போர்ன்.
இயல்பாக கலகலப்பாக பேசும் தம்பி வேறு மாதிரி வெள்ளக்காரன் Dictionல் பேசியதை கேட்க வேண்டியிருந்தது. Accent.
ஆரோ மனைவி Australian.
"I'll call you back". போன் கட்.
சரி ஏதோ பிசி போல.
ரெண்டு மணி நேரம் கழித்து ஃபோனில் மீண்டும் ஆரோ.
" நீங்க கூப்பிட்டப்ப 'பார்க்'ல இருந்தேன். சுற்றிலும் வெள்ளக்காரனுக.
தமிழ்ல பேசுனா ஏதோ வேற பாஷையில திட்றதா சந்தேகப்படுவானுங்க. கோபமா மொறப்பானுங்க. அதான் அப்றம் கூப்பிடறேன்னு கட் பண்ணேன். இப்ப நானும் வீட்டுக்கு வந்துட்டோம்.
இனிமே ஃப்ரீயா பேசலாம்."
ஆரோவுக்கும்
R.P. ராஜநாயஹம் " காரணச்செறிவு" நூல்
சமர்ப்பணம்.
Tribute to Mohan Hariharan
Mohan Hariharan
-A noble man
Shocked to hear his sudden demise.
Great loss.
Mohan Hariharan :
"R. P. ராஜநாயஹம் அவர்களை சிறிது காலத்திற்கு முன் தான் Facebook ல் அறிமுகம் கிடைத்தது.
அவருடைய வீச்சு,
கதை, இலக்கியம், நாடகம், நடிப்பு, தமிழ், ஆங்கிலம் போன்ற பல துறைகளிலும் பரந்து விரிந்து ஆழமானது.
அவைகளை விவரிக்கும் தன்மை சுவாரஸ்யமான படிப்பினைகள்.
I'm simply fascinated by his articles."
https://www.facebook.com/share/p/xZMGQMM1QbeURiWW/
https://www.facebook.com/share/p/DYParswSr3bzAB4B/
https://www.facebook.com/share/p/qALs1DTSci94WoBc/
Oct 3, 2024
லப்பர் பந்து
லப்பர் பந்து
தினேஷை லப்பர் பந்தில் பார்க்கும்போது ஓவியர் நடேஷ் ஞாபகம்.
கூத்துப்பட்டறையில் தினேஷ் எலக்ட்ரிகல் வேலை பார்த்த போது நடேஷ் கண்டபடி திட்டி அவமானப் படுத்தியிருக்கிறார். நடேஷ் அனுமானம்: 'தினேஷ் அதை எப்போதும் மறந்து விடவே முடியாது'.
ஹரிஷ் கல்யாண் பார்க்க ரொம்ப பழைய வி.வி. சடகோபன் சாயல் கொஞ்சம் தெரிகிறது.
பார்க்க ஜி.என்.பி போல சடகோபன் அழகான சங்கீத வித்வான். திரைப்பட நடிகர்.
லப்பர் பந்து தினேஷின் தீர்க்கமான பார்வை வித்தியாசம். தீர்க்கப்பார்வை பெரும்பாலும் நடிகர்களுக்கு strain தரக்கூடியது. ஆனால் தினேஷ் இயல்பாக தீர்க்க பார்வை. சித்தர் பார்வை.
கதாநாயகி ஸ்வாசிகா பிரகாசமான பெர்ஃபாமன்ஸ். யசோதை பூமாலை குடும்பம் மகள் மாமியார், அம்மா எல்லாம் முழு ஜீவனோடு படைக்கப்பட்ட பாத்திரங்கள்.
சஞ்சனா 'இனிமே எவனும் பொண்ணு பாக்க இங்க வரக்கூடாது'ன்னு அம்மா அப்பாவை எச்சரிக்கிற காட்சி.
ஹரிஷ் கல்யாண் செய்த அன்பு ரோல் கவினோ, அசோக் செல்வனோ செய்து விடக் கூடியது.
ஆனால் பூமாலை ரோலில் தினேஷ் பொருந்திய அளவுக்கு வேறு நடிகரை நினைத்து பார்க்க முடியாது.
தேவதர்ஷினிக்கு மெய்யழகனில் அரவிந்த் சாமிக்கு ஜோடி. லப்பர் பந்து படத்தில் கணவராக யாரோ முகம் தெரியாத பெரியவர். ஆர்ட்டிஸ்ட் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். கூட நடிப்பவர் பற்றி பேதம் பார்க்காமல் தெளிவாக நடிப்பை காட்டுவது விசேஷம். எண்ணெய் விளம்பரத்தில் ரோபா சங்கருடன் வருவார்.
காளி வெங்கட், பால சரவணன் கதாபாத்திரங்கள் முழுமையான பரிமளிப்பு.
தமிழரசன் பச்சமுத்து பிரமிக்க வைக்கும் இயக்குநர்.
திகட்டாத வசனம்.
அமீர் கான் லகானுக்கு அப்புறம் சுவாரசியமான கிரிக்கெட் படம்.
ஆனால் இந்த லப்பர் பந்து கிரிக்கெட் பற்றியது மட்டுமல்லாத பன்முகத்தன்மை கொண்டது. பற்பல வீச்சுகள்.
https://www.facebook.com/share/p/WfnfiP7x4q2HKUb7/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/p/jzie5793pKCkSM6Z/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/p/2j8s23PeJ4PB1BKL/?mibextid=oFDknk
Oct 1, 2024
நம்பிக்கை இல்லா தீர்மானம்
தீர்மானம்
தள்ளாத முதிய பெரியவர்.
மகனால் பெருந்துயர் அனுபவித்தவர்.
கடுமையான கருத்து வேறுபாடு.
புத்திரனிடம் அடி வாங்குவது
எத்தனை துரதிர்ஷ்டம்?
நெஞ்சே ரணமான நிர்க்கதியான நிலை.
ரொம்ப படுத்தி எடுத்து விட்டான்.
தண்ணிய போட்டுட்டு தெருவில நின்னு கண்டபடி வெண்ட வெண்டயா திட்டுவான்.
முதுமையில் நிம்மதியிழந்த பெரியவர் வெறுத்துப் போய் சொன்னார்
"அவனை வீட்டை விட்டு போகச் சொல்லிட்டேன்"
அப்படி நடக்கவில்லை.
தொடர் துயர்.
Filial ingratitude.
அருவருப்பாக குமுறும் மனதை வெளிப்படுத்தினார்.
"இவன் எனக்கு பெறந்தவனே இல்ல."
"நல்லா தெரியிது. சந்தேகமே கிடையாது. இவன் எனக்கு பெறந்தவனே இல்ல."
"கொழந்த பெறந்தப்ப பிரசவ ஆஸ்பத்திரியில் ஏதோ தவறு நடந்திருக்கு.
எங்க கொழந்தக்கு பதிலா கவனக்கொறைவா வேற கொழந்தய மாத்தி வச்சிருக்காங்க. சந்தேகமே இல்ல. இவன் எனக்கு பொறந்தவனே இல்ல. நல்லா யோசிச்சித்தான் தீர்மானமா சொல்றேன்."
மெய்யழகன்
மெய்யழகன்
ஆரம்பத்தில் கண்ணை மூடி 'அத்தான் நான் யாருன்னு சொல்லுங்க " என்று உற்சாகமாக மாப்ள கேட்கும் போதே கண்ணைத் திறந்தவுடன்
கடைசியாக படத்தில் வருகிற உருளக்கிழங்கு கதையை சொல்லி அத்தான் நினைவில் மெய்யழகன் ஞாபகம் வந்திருக்க வேண்டும்.
இயல்பாக அப்படித்தான்
இது மாதிரி சூழலில்
எங்கேயும் எப்போதும் நடக்கும்.
( இங்கே அப்டின்னா கதையே காலியாயிருக்குமேங்க. )
படத்தை இன்னும் மிக பிரமாதமாக வேற ரூட்ல கொண்டு போயிருக்க முடியும்.
அரவிந்த் சாமிக்கு இவ்வளவு super ego தேவையேயில்லை. கார்த்தியிடம் பட்டென்று ஞாபகம் வரவில்லையேன்னு
சொல்லியிருந்தா மாப்ள அத்தானிடம் கடைசியில் பேசுகிற வசனங்கள் முதலிலேயே வந்திருக்கும்.
'அவன் யாருன்னு கண்டு பிடிக்க முடியல'ன்னு படம் பூரா அரவிந்த் சாமி தவிச்சி தக்காளி விக்கணுமா? ஓவர் பில்டப்.
கல்யாண வீட்ல ராஜ்கிரண்ட்ட கேக்கவே முடியலன்றது வேடிக்க.
ஊருக்கு வந்தப்புறம் ஃபோன் போட்டு கேட்டிருந்தா ராஜ்கிரண் தெளிவா சொல்லியிருப்பார். ஜவ்வா இழுக்கணுமா?
ரொம்ப காலத்துக்கு அப்புறம் ரெண்டு ஜீவனுள்ள கதாபாத்திரங்கள்.
கார்த்தி "பச்சக்" என்று மனதில் ஒட்டிக்கொண்டு விட்டார்.
என்னா பெர்ஃபாமன்ஸ்.
"கொஞ்சம் தள்ளி இன்னொரு லாட்ஜ் இருக்கு. இவ்வளவு நீட்டா இருக்காது."
Zorba the Greek ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
அரவிந்த் சாமிக்கு கார்த்தியிடம் கிடைக்கிற தரிசனம்.
சோர்பா படைத்த கலைஞன் கஸான்சாகிஸ்.
படமாக வந்த போது ஆந்தணி க்வின்.
அரவிந்த் சாமி பிரமாதமான Scene stealer. செம்ம. பேசாமலேயே கூட கலக்குகிறார்.
கல்யாண மண்டபத்தில் இந்துமதியுடன் நெகிழ்ச்சி.
மணிரத்னம் 'கடல்' பார்த்தப்பவே நிறைய்ய பயன்படுத்தப்பட வேண்டிய நடிகர் என்று குறிப்பிட்டதுண்டு.
கமல் ஹாசனுடன் அரவிந்த் சாமி நடிக்கவேயில்லையே
- ஆதங்கம் வெளிப்படுத்தியதுண்டு.
மாடு பாம்பு த்ரில்.
சைக்கிள்.
கார்த்தி எடுக்கிற வரலாற்று பாடம்
சரி தான்.
The quote by Goethe
that appears in Sophie's World ( author- Jostein Gaarder)
is, "He who cannot draw on three thousand years is living from hand to mouth".
இடைவேளைக்கு பிறகு வருகிற தொய்வு
கதையில் விழுந்து விட்ட ஆரம்ப ஓட்டையால். வேற வழியில்ல. No go.