"தடிய தூக்குற வயசா இது?"
சுகுமாரி கேள்வி.
வி.கே. ராமசாமி பதில்
" முடியுது. தூக்குறோம்"
அப்பப்ப ரெட்டை அர்த்தத்தில் தான்
வி.கே. ராமசாமி வசனம்.
"காலம் கடந்தும் மரத்துக்கு மோகம்
காதல் தண்ணீர் குடிக்கின்ற வேகம்
நீரைத்தேடுது வேரும்
அப்பா அப்பப்பா அந்த நீராட
வேருக்கு என்ன தாகம்"
கிளர்ந்தெழும் தாபம் கண்ட கண்ணதாசன்.
'கரமுண்டார் வீடு' நாவல் தஞ்சை ப்ரகாஷ்
" எல்லாம் ஒன்னு தான். ரத்தம் எல்லாம் மண்ணு தான்.. என்னைக்காவது
ஒரு நாள் புழு தான் "
நடிகர் முத்துராமனை முதன் முதலாக இயக்குநர் ஸ்ரீதர் பார்த்தபோது சொன்னாராம்.
" செங்கல்பட்டு வாழக்கா முதலியார் மாதிரியே இருக்கானே"
நெஞ்சில் ஓர் ஆலயம் துவங்கி எத்தனை ஸ்ரீதர் படங்களில் முத்துராமன்.
தென்காசிக்கு அருகேயுள்ள 'களக்காடு' கிராமத்தில் பண்ணையார் தீர்த்தாரப்ப முதலியார் மகன் ரசிகமணி டி.கே.சி.
மனைவி பிறந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் வடக்கு ரத வீதியில் டி.கே.சி இருந்ததுண்டு.
ராஜநாயஹம் இல்லத்தரசி பிறந்த ஊர் அதே அதே.
டி.கே.சி. மாமியார் வீடு வடக்கு ரத வீதியில் எது? கேட்டு விசாரித்ததில் முதலியார்கள் உட்பட யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.
அங்கிருந்து தான் வக்கீலாக ப்ராக்டீஸுக்கு பிள்ளையார் சுழி போட்ட நிகழ்ச்சி. கோட்டு போட்டு தலைப்பாகையுடன் கோர்ட்டுக்கு முதல் நாள் ஜபர்தஸ்தாக
டி.கே.சி கிளம்பியிருக்கிறார்.
வடக்கு ரத வீதியில் எண்ணையுடன் வாணியச்செட்டி எதிர் சேவை. அபசகுணம். Conviction.
தலைப்பாகையை தலையில் இருந்து எடுத்து விட்டு வக்கீல் வேலை வேண்டாம் என மாமியார் வீட்டில் உட்காரும்படி ஆகிப்போனது. Beautiful things were in store for him there after.
"எதிரே வந்தது வாணியச்செட்டியல்ல. சாட்சாத் வாணியே தான்" என்பது கி.ரா.வின் கிசுகிசு.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.