Aug 31, 2023

மூதறிஞர் கலைஞர் பேனா

"சிங்கங்கள் உலாவும் காட்டிலே 
சிறு நரிகள் திரிவது போல 
இன்று 
நம் நாட்டைச்சுற்றி அலைகிறது 
ஒரு சோதாக்கும்பல்.                                              எண்ணிக்கையிலே குறைந்த
 அந்த இதயமற்ற கூட்டம் 
வஞ்சகத்தால் வாழ்கிறது"
- மூதறிஞர் கலைஞர் பேனா
73 வருடங்களுக்கு முன் 

மு. தளையசிங்கம் 'போர்ப்பறை' நூலில் கலைஞர் பற்றி
எழுதிய விஷயத்தை 
நான்
2002ம் ஆண்டு ஊட்டி தளையசிங்கம் கருத்தரங்கத்தில் சுட்டிக் காட்டிய போது யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.

ராஜநாயஹம் 'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை' கட்டுரை அந்த வருடம் வெளிவந்த போதும்,
 கடந்த இருபது வருடங்களாக எத்தனையோ முறை 
' எந்த நூலில் தளையசிங்கம் சொல்லியிருக்கிறார்?' என பல முக்கியஸ்தர்கள் என்னிடம் ரகசியமாக கேட்டிருக்கிறார்கள்.

" அகிலனை விட திறமையான கலைஞன். புதுமைப்பித்தனையும் மெளனியையும் விட கலையின் நோக்கத்தை பரிபூர்ணமாக புரிந்து கொண்டவன். பாரதியைப் போலவே போர்க்கோலம் கொண்டவன். 
அவனே மு. கருணாநிதி."

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.