Nov 4, 2019

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

கண்ணதாசன், விஸ்வநாதன், ராமமூர்த்தி , 
                  டி. எம். எஸ்,  சுசிலா, சிவாஜி கணேசன், சாவித்திரி, பீம்சிங் - என்னவொரு காம்பினேஷன், என்னவொரு டீம்.

கண்ணதாசன் மகள் ரேவதி சண்முகம் கலங்குவதை இந்த வீடீயோ முடிவில் பார்க்க முடிகிறது.

பள்ளிகளில் குழந்தைகள் மத்தியில் நான் பாடியதுண்டு.

இந்த பாடலை நான் மேடையில் பாட முயன்ற போதெல்லாம் ஆர்க்கெஸ்ட்ரா ஒத்துழைப்பு தந்ததேயில்லை. டி. எம். எஸ் குரல் பகுதியை மேடையில் நல்ல ஆடியன்ஸ் முன்னிலையில் நான் பாட விரும்புவது நிறைவேறாத கனவாகவே இன்றும் இருக்கிறது.

 இந்திரன் 'அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்' தொகுப்பில் 'நிறைவேறாத கனவு எப்படியிருக்கும்' என்று ஒரு மொழிபெயர்ப்பு கவிதை ஞாபகத்துக்கு வருகிறது.

"நிறைவேறாத கனவு எப்படியிருக்கும்? உலர்ந்து சுருங்கிப் போன திராட்சை போலவா?
அல்லது கனவு வெடிக்குமா? "


https://m.facebook.com/story.php?story_fbid=1710307522427903&id=976871189104877

..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.