Aug 7, 2026

சந்திர பாபு சினிமா மார்க்கெட்

Chandra babu with MSV and L.R. Eswari 
'பொறந்தாலும்' பாட்டு கூட இந்த காம்பினேஷன் தான்.
ஒருவேளை இந்த ஸ்டில் கூட அந்த ரிக்கார்டிங் போது தானோ என்னவோ?
திருநெல்வேலியில விசுவநாதன் கச்சேரியில பாபு  solo song 
'பம்பரக்கண்ணாலே' பாடும்போது
கூட்டம் ஆட்டம் உற்சாக ஆரவாரத்துடன்.
ஆவேச ஜனத்திரளில் இருந்து ஏகப்பட்ட குரல்கள். 
"Once More"

பாபு பாடி முடித்ததும் "டேய் விசு, என்னடா எனக்கு சினிமால மார்க்கெட்டே இல்லேன்றாங்க. இங்க பார்ரா."