ரிக் ஷா ராசுக்குட்டி
ரிக் ஷாக்காரன் கணேசன்
செகண்ட் ஷோ பார்த்து விட்டு வரும் போது கணேசன் ஏ.ஏ. ரோட்டில் டீக்கடையில்
" தொர வாங்க,
நம்ம பலகாரம் சாப்பிட்டு வீட்டுக்கு போங்க"
டீக்கடையில் மூன்று 'பன்' வாங்கி, பன்ன பிச்சிப்போட்டு பால் சேர்த்து அடுப்பில் வைத்து, ஜீனி போட்டு கிண்டி சுட சுட உண்ணத்தந்திருக்கிறான்.
ருசி பிரமாதம்.
பல தடவை இப்படி மறக்க முடியாத பின்னிரவு உபசரிப்பு.
ஆரப்பாளையத்தில்
குடிசை வீட்டில் பட்டதாரி கவுன் போட்ட போட்டுக்கொண்டு கணேசன் எடுத்த போட்டோ, டாக்டர் ஸ்டெதாஸ்கோப் போட்டு கணேசன், போலீஸ் அதிகாரி யூனிபார்மில் அதே கணேசன். ஃப்ரேம் போட்டு சுவற்றில்.
குடிசைக்குள் குனிந்து நுழைந்து பார்த்த போது ரிக் ஷா கணேசன் விசித்திர ரசனை மறக்கிற விஷயமா?
ரொம்ப வருஷம் கழிச்சி ராசுக்குட்டி படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த போது யாரிடமும் கணேசன் பற்றி சொல்லவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு (11.04.2025) டைரக்டர் பாக்யராஜ் சாரிடம் கணேசன் பற்றி சொன்னேன்.