May 7, 2024

நல்ல தூக்கத்தில இருக்றப்ப எழுப்பி விட்டுட்டீங்க...

ஐந்து மாதங்களில் எவ்வளவெல்லாம் எழுதக் கிடைத்திருக்கிறது.
 ராசுக்குட்டி (1992)

ஜெமினி கணேசனுடன் இருந்த
ஐந்து மணி நேரத்தில் கூட எழுத நெறய்ய கிடைத்ததுண்டு. (1994)

ஷூட்டிங் போது கோபிச்செட்டிப்பாளையம், மேட்டூர் இரண்டு ஊர்களிலும் லாட்ஜ்களில் தங்கும்படி இருந்திருக்கிறது.
கோபிச்செட்டிப்பாளையத்தில் எமரால்ட் ஹவுஸ், எஸ்.கே. லாட்ஜ் இரண்டிலுமே.
எஸ்.கே. லாட்ஜில் இருந்த போது 
அதி காலை ஐந்தரை மணி - காலைக்கடன் அவசரமாக முடித்து, குளித்து தலை துவட்டிக்கொண்டிருக்கும் போது அறைக்கதவு தட்டப்படுகிறது. 

ராஜநாயஹத்துடன் இன்னொரு உதவி இயக்குநர். அடுத்ததாக ரெஸ்ட் ரூமில் தயாராகிக்கொண்டிருந்தான்.

நள்ளிரவில் ஷூட்டிங் முடிந்து வந்த பிறகு விசித்திரமாக " எனக்கு மூளை ஜில்லுனு ஆயிடுச்சுங்க. இங்க நம்ம ரெண்டு பேரும் முன்னால எப்பயோ சந்திச்சிருக்கோங்க. எனக்கு உறுதியா நல்லா தெரியுதுங்க. எனக்கு திடீர்னு மூளை ஜில்லுனு இருக்குங்க. எப்பன்னு தெரியலங்க. ஆனா உறுதியா இதே எடத்துல நம்ம ரெண்டு பேரும் சந்திச்சிருக்கோங்க"

'என்னடா இது Teja Vu. படுத்து தூங்கு.'

" போன பிறவியில இதே எடத்துல நிச்சயமா Meet பண்ணியிருக்கோம். மூளை ஜில்லுனு இருக்குதுங்க "

" படுத்துக்க படுத்துக்க தூங்கணும்"

இவன் தான் ' வீட்ல இருந்து செலவுக்கு பணம் அனுப்றோம்னு சொன்னாங்கங்க. நான் வேண்டாம். நானே Spend பண்ணி Loss பண்ணிக்கிறேன் சொல்லிட்டேன் " னு அடிக்கடி சொல்வான்.

Spend பண்ணா Loss வரத்தானே செய்யும்.

நான் லாட்ஜூக்கு எதிரே இருந்த எஸ்.டி.டி. பூத்துக்கு கிளம்பி படிகளில் இறங்குகிறேன்.

மேஜர் சுந்தர்ராஜன் ரிஸப்ஸனில். புன்னகையுடன் முகாலோபனம். தலையை ஆட்டுகிறார். ஏதோ படத்துக்காக வந்திருக்கிறார். கோபிச்செட்டிப்பாளையம் மற்றொரு கோடம்பாக்கம் தான்.

எதிரே உள்ள எஸ்.டி.டி பூத்தை நெருங்கும் போது 'நிழல்கள்' ரவி.
அவர் நடிக்கிற படத்தின் தயாரிப்பு நிர்வாகி
யிடம் நிழல்கள் ரவி " என்னண்ணே, நல்லா தூங்கிட்டு இருக்கும் போது 'உங்களுக்கு ஃபோன்' னு எழுப்பி விட்டுட்டீங்க. 'கால்' எனக்கில்லண்ணே. என்னண்ணே. போங்கண்ணே"

கோபப்படாமல் மென்மையாக சலித்துக் கொண்டார்.

சென்னையில் இருந்து ரவிக்கு ஃபோன் என்றதும் இவரையும் எனக்கு முன்னே பூத்திற்கு வரச்சொல்லியிருக்கிறார்கள்.

ராசுக்குட்டி தயாரிப்பு பணிகளை கவனித்துக் கொண்டிருந்த ரவி அந்த சமயம் சென்னையில் 
காஸ்ட்யூம் சி.கே. கண்ணன் வீட்டில் வாடகைக்கு இருந்தார்.

 ராசுக்குட்டி ப்ரொடக்ஸன் மேனேஜர் ரவிக்கு லாட்ஜ் எதிரே உள்ள எஸ்.டி.டி பூத்திற்கு சென்னையில் பஞ்சு அருணாசலம் சினிமா கம்பெனியில் இருந்தோ அல்லது பாக்யா ஆபிஸில் இருந்தோ ஃபோன். அவரை பூத்திற்கு அழைத்து வரச்சொல்லி ஃபோன். 
ரவி சென்னைக்கு ஃபோன் போட்டு விவரம் கேட்டுக் கொள்ளலாம். ஏதோ முக்கிய அவசரம். ஆனால் ரவியை இருள் பிரிகிற நேரத்தில் லாட்ஜில் எந்த ரூம். தேட முடியவில்லை. 
"நீங்கள் வந்து பேசுங்கள். நம்பர் குறித்து வைத்திருக்கிறோம்."
ராஜநாயஹம் கூட ராசுக்குட்டி யூனிட். அதனால் எழுப்பி விட்டார்கள். 
நடுநிசி தாண்டி ஷூட்டிங் முடிந்த பின்னர் இரவு சாப்பிட்டு பிறகு படுக்கை.

எஸ்.டி. டி பூத் ட்ரங்க் கால் சமாச்சாரம் எப்போதும் அண்டாக்கா கசம் ஆபூக்கா கசம் தான்.

பூத்தில் காத்திருக்கும் போது தங்கியிருந்த அறையில் இருந்த அந்த மற்றொரு உதவி இயக்குநர் "என்னங்க, டாக்ஸி உங்களுக்காக வெயிட்டிங்குங்க. உடனே வாங்க. கிளம்புங்க."

.....

Dancer's curve

1. Infatuation with dancer's curve

Edgar Degas painting 


2, 3.  A coconut tree in Adyar with dancer's curve

May 6, 2024

R.P. ராஜநாயஹம் தழல் வீரம் காரணச்செறிவு வாகை சந்திரசேகர்

R.P. ராஜநாயஹம் 

இயல் இசை நாடக மன்றம் 
தலைவர் வாகை சந்திரசேகர் 


தழல் வீரம்

காரணச்செறிவு 

06. 05. 2024 

நல்ல பகல் 1 மணி


மேட்டூர் டாக்டர்



ராசுக்குட்டி ஷுட்டிங் நடந்துகொண்டிருந்த சமயங்களில் 

மேட்டூர் வி.எம். லாட்ஜ்.
 
ஐந்து மாதங்கள் ராசுக்குட்டி அனுபவம்.

நாளில் மூன்று வேளையும் அசைவம் சாப்பிட வேண்டியிருக்கும்.
ஷூட்டிங் முடிந்து இரவு டின்னர் உதவி இயக்குநராக ஸ்பெஷலாம். மட்டன், மட்டனில் மூளை, தலைக்கறி, சிக்கன், மீன், முட்டை எல்லாம் நிர்ப்பந்தமாக உணவோடு. 

வயிறு சரியில்லை. எதிரே கிருஷ்ணா லாட்ஜை ஒட்டி டாக்டர் க்ளினிக். 
இன்ஸ்டரக்ஸன். இஞ்செக்ஸன். ப்ரிஸ்க்ரிப்ஸன்.
" ராஜநாயஹம் நான் ஒங்க டைரக்டருக்கு ஃப்ரண்டு ராஜநாயஹம். ஃபீஸ் வாங்க மாட்டேன் ராஜநாயஹம். மன்னிச்சிக்கங்க'"

" தயவு செஞ்சி ஃபீஸ் வாங்கிக்கங்க 
டாக்டர்"
"மன்னிச்சிக்கங்க ராஜநாயஹம், 
பாக்யராஜோட ஃப்ரண்டு நான். ஃபீஸ் வாங்க மாட்டேன்"

டாக்டர் பேச்சில் 'Sing Song'
மறக்கவே முடியாத விசித்திர வினோத ராகம்.
இப்போது கூட அப்படியே mimicry செய்து காட்ட முடியும். எழுத்தில் அந்த effect கொண்டு வர முடியாதே.

பணம் வாங்கிக்கொள்ள பிடிவாதமாக வலியுறுத்தி வற்புறுத்தியதற்கும் அதே Sing Song. " நான் ஒங்க டைரக்டர் பாக்யராஜ் என்னோட ஃப்ரண்டு ராஜநாயஹம். முடியவே முடியாது ராஜநாயஹம். ஃபீஸ் வாங்க மாட்டேன். நான் பாக்யராஜுக்கு ஃப்ரண்டு"
இரண்டாவது தடவையாக போன போதும் இதே இதே. ஃபுட் பாய்சன். இட்லி, மோர் சாதம். அசைவம் வேண்டாம்.

இப்படி ஃபீஸ் வாங்காமல் மறுக்கிற டாக்டரை அதற்கு முன்னரும் பின்னர் இன்று வரை பார்த்ததேயில்லை.

ஃபரூக் டாக்டரை பார்க்க வருவார்.  சலுகையை எப்போதும் குஷியாக ஏற்றுக்கொள்வார்.

மூன்றாவது முறை. Trika மாத்திரை மூன்று நாளாக இரவு பயன் படுத்துவதை சொன்னேன். Trika சிபாரிசு ஃபரூக் தான்.
டாக்டர் பதறிப் போனார். "ஃபரூக்குக்கு ஏகப்பட்ட கம்ப்ளைண்ட்ஸ், காம்ளிகேஷன்ஸ்.  அவர் சாப்பிடுகிற மாத்திரையை நீங்க எடுத்துக்கொள்ளக்கூடாது. நிறுத்தி விடுங்கள். நீங்கள் ஹெல்த்தியா இருக்கீங்க. ஃபுட் பாய்சன் தான் சிரமப்படுத்துது."
" ஃபீஸ் வேண்டாம் ராஜநாயஹம். நான் ஒங்க டைரக்டர் பாக்யராஜ் சாருக்கு ஃப்ரண்டு ராஜநாயஹம்"

மூன்று தடவை ட்ரீட்மெண்ட்டுக்கான ஃபீஸ் பெரிய தொகையாக அவர் மேஜை மீது வைத்து விட்டு விறு விறு நடையில் க்ளினிக் நீங்கினேன்.

லாட்ஜ் அறைக்கு க்ளினிக் மூடிய பின் கம்பௌண்டர் தேடி வந்து விட்டார்."டாக்டர் நீங்க கொடுத்த பணத்தை உங்களிடமே கொடுக்கச் சொன்னார். டாக்டர் ஒங்க டைரக்டர் பாக்யராஜ் ஃப்ரண்டு"

ஃபரூக் இரண்டு வருடங்களில் இறந்து விட்டார். செய்தியை அவருடைய க்ளாஸ் மேட் சண்முகசுந்தரம் போனில் சொன்ன போது மேட்டூர் டாக்டர் ஞாபகம் வந்தது. 

அப்போது டைரக்டர் பாக்யராஜிடம் ராஜநாயஹம் இல்லை. சினிமாவிலேயே இல்லை.

டாக்டர் பெயர் இப்போது ஞாபகம் இல்லை.

சவ்வாஸ் ஃபரூக் அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் ரெண்டு வருஷம் சீனியர்.
ராஜநாயஹத்திற்கு நவீன தமிழ் இலக்கியத்தை விரிவாக அறிமுகப்படுத்தியவர். 
ஃபரூக் ராசுக்குட்டி க்ளைமாக்ஸில் இன்ஸ்பெக்டராக நடித்தவர். தொழில் அதிபர்.

சண்முகசுந்தரம் சமீபத்தில் ராஜினாமா செய்த முன்னாள் அட்வகேட் ஜெனரல். முன்னாள் ராஜ்யசபா எம்.பி. 
ராஜநாயஹத்திற்கு கஸின்.

..‌...

புகைப்படம்

கையை கட்டியவாறு ராஜநாயஹம் 

 ஜூனியர் மோஸ்ட் அசிஸ்டெண்ட் டைரக்டர்.


May 4, 2024

முத்தமிழ் பேரவையில் நடந்த நாட்டிய நிகழ்ச்சியில்

2016

அது ஞாயிற்றுக்கிழமை 
அடையார் முத்தமிழ் பேரவை அரங்கத்தில்  பரத நாட்டிய அரங்கேற்றம். 

ந.முத்துசாமி சாருடன் உட்கார்ந்திருந்தபோது ஒருவர் உள்ளே நுழைந்தார். 
அவர் முகம் கு.அழகிரிசாமியை நினைவுறுத்தியது. புகைப்படத்தில் பார்த்திருக்கிற அழகிரிசாமியின் முகம். அவருடைய ‘அன்பளிப்பு’, ‘ராஜா வந்திருக்கிறார்’, ’சுயரூபம்’ போன்ற அற்புத கதைகளெல்லாம் வரிசை கட்டி நினைவுக்கு வந்தன.

பரத நாட்டியம் ஆடிய பெண்ணை மேடையேறி வாழ்த்த ந.முத்துசாமி விரும்பினார். சிரமத்துடன் மேடையில் ஏற்றி, நாட்டியமாடிய பெண்ணுக்கு நின்று கொண்டே பரிசு கொடுக்கும் போது அவருடைய பேண்ட் திடீரென எதிர் பாராமல் இடுப்பிலிருந்து கழன்று விழுந்து விட்டது.

பரத நாட்டிய நிகழ்ச்சி முடிந்ததும் அழகிரிசாமி தோற்றம் கொண்டவர் வந்து முத்துசாமியை சேவித்தார். அவர் அழகிரிசாமியின் மகனே தான்! மூத்தமகன் ராமச்சந்திரன்.

ராமச்சந்திரனிடம் அவரைப் பார்த்தவுடன் எனக்கு கு.அழகிரிசாமி ஞாபகம் வந்ததைப் பற்றி சொன்னேன்.
கி.ரா பேசும்போது அழகிரிசாமி பற்றி எப்போதும் ஏதாவது சொல்வார். 1990ல் புதுவையில் ஒரு கட்டடத்தில் புத்தகக்கண்காட்சி. கி.ராவுடன் நான் உள்ளே நுழையும்போது செருப்பை வெளியே விட வேண்டியிருந்தது. உடனே கி.ரா
“இப்படி செருப்பை கழற்றி விட்டு செல்ல வேண்டியிருக்கும் போது அழகிரிசாமி என்ன செய்வான் தெரியுமா? ஒரு செருப்ப இங்கன போடுவான். இன்னொரு செருப்ப அங்கன போடுவான்.”
திருடு போய்விடக்கூடாது என்பதற்காக!

இதை ராமச்சந்திரனிடம் நான் சொன்னபோது அவர் “அப்பா பற்றி இந்த செருப்பு விஷயம் எனக்கே இப்போது தான் தெரிய வருகிறது!”
எனக்கு சந்தோஷம் தான். 

என்னால் அழகிரிசாமி பற்றிய ஒரு சுவாரசியம் அவர் மகனுக்கு இவ்வளவு காலங்கழித்து இப்போது தெரிய வந்திருக்கிறது.

அழகிரிசாமி மகன் ராமச்சந்திரன் ஐ.ஒ.பி.யில் பணிபுரிந்தவராம்?
சமீபத்தில் மறைந்து விட்டார்.

May 3, 2024

குட்டி நாயுடன் அற்ற குளம்

Max Beckmann
German Painter 
The Old Actress  
குட்டி நாயுடன் அற்ற குளம் 

The Metropolitan Museum of art, NewYork

May 2, 2024

R.P.R. 127, 128 Episodes சித்ரா, மனோ

R.P. Rajanayahem 127, 128 Episodes
Cinema Enum Bootham

அடுத்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில்
மே 5ம் தேதி, மே12ம் தேதி 
முரசு டிவி
காலை எட்டரை மணிக்கு
சினிமா எனும் பூதம் நிகழ்ச்சி

சித்ரா

மனோ

'குட்டி தமிழ்வாணன்' எம்.ஜி. ஆர்


'குட்டி தமிழ்வாணன்' எம். ஜி.ஆர் 

ஒரு எழுத்தாளர் பற்றி மிகையாக அந்த காலத்தில் கற்பனை கதைகள் சிறுவர்கள் மத்தியில் இருந்தது.
தமிழ்வாணனுக்கு ஒரு கண் கிடையாது. 
ஒரு கை கிடையாது. இப்படி.

பள்ளிக்கூட லைப்ரரிகளில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் புத்தகங்களுக்கு செம டிமாண்ட்.
சங்கர்லால் துப்பறிகிறார். அப்புறம் துப்பறியும் கதைகள் தமிழ்வாணன் துப்பறிகிறார்.

’கல்கண்டு’ தமிழ்வாணன்  pompous person.
தன்னைப்பற்றி எப்போதும் மிகப்பெரிய அளவில் பில்ட் அப் பண்ணுவார்.

எம்.ஜி.ஆர் காவல்காரன் படத்தில் நடித்ததற்கு பிறகு தொப்பியுடன் எப்போதும் பொது இடங்களுக்கு வர ஆரம்பித்தார். தொப்பி, கூலிங் க்ளாஸ் சகிதம் தான் எப்போதும் இருக்க ஆரம்பித்தார்.

கல்கண்டு பத்திரிக்கையில் தமிழ்வாணன் கேள்வி பதில்கள் பிரபலமானவை.

கேள்வி : எம்.ஜி.ஆர் இப்போது எப்படியிருக்கிறார்?

தமிழ்வாணன் பதில் : ’எம்.ஜி.ஆர் இப்போது ஒரு குட்டி தமிழ்வாணன் போல் இருக்கிறார். தமிழ்வாணன் தொப்பி வைத்திருப்பது போல அவரும் தலைக்கு ஒரு தொப்பி வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்வாணன் கறுப்பு கண்ணாடி போட்டிருப்பது போல எம்.ஜி.ஆரும் கண்ணுக்கு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் அவர் ஒரு குட்டி தமிழ்வாணன் போல மாறியிருக்கிறார்.’

 கல்கண்டு பத்திரிக்கையில் எப்போதும் எம்.ஜி.ஆர் மலையாளி, கிழவன் என்றெல்லாம் கிண்டல் செய்து கொண்டுமிருந்தார்.

கல்கண்டு "படத்தின் பெயரை 
"உலகம் சுற்றும் தமிழன்" 
என்று பெயர் மாற்றம் செய்ய போவதாக எம்ஜிஆர் சொல்கிறார்.

"வாலிபன்" என்று பெயர் வைத்தாலும் 
"தமிழன்" என்று பெயர் வைத்தாலும் இரண்டுமே எம்ஜிஆருக்கு பொருத்தமாக இல்லையே."

மன்னா டே யார் என்ற  கேள்விக்கு
 தமிழ் வாணன் பதில்
 'அவர்  எருமைக்குரல் பாடகர்'. 

உலகம் சுற்றும் வாலிபன் படத் தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆர் ஹாங்காங்கில் தமிழ்வாணன் சட்டையைப் பிடித்து மிரட்டி எச்சரித்த போது மிரண்டு போய்விட்டார். 
‘துணிவே துணை’ என்று முழங்கியவர் கல்கண்டு ஆசிரியர்.

தமிழ் சினிமா படங்களை கடுமையாக எடுத்தெறிந்து தாக்கிய கல்கண்டு ஆசிரியர் சொந்த தயாரிப்பு"காதலிக்க வாங்க". உட்கார்ந்து பார்க்கவே முடியாத அறுவை படம். ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்த
 பற்பல டப்பா படங்களில்
 முதல் வரிசையில் வைக்கலாம்.
'காதலிக்க வாங்க' போஸ்டர் ஜெய்சங்கர் ஜிப்பா மட்டுமே போட்டு தொடைகளை காட்டிக்கொண்டு.
'காதலிக்க வாங்க' போஸ்டர்
ஜெய்சங்கர் ஜிப்பா மட்டுமே போட்டு, தொடைகளை காட்டிக்கொண்டு.

 “நூறு வயது வரை வாழ்வது எப்படி?” என்று விளக்கமாக ஒரு புத்தகம் எழுதினார். 

தமிழ்வாணனுக்கு அப்புறம் தான் ஐம்பது வயது முடிந்தது. அதன் பின் ஐம்பத்தொரு வயதும் முடிந்து ஆறு மாதத்தில் செத்துப்போனார். ஐம்பத்தொன்றரை வயது தான் தமிழ்வாணனுக்கு லபித்தது. 

The advise you tell others is 
the advice you need to follow.

அது எப்படி? இது எப்படின்னு பல பல நூல்கள் பப்பள பளபளன்னு எழுதி எழுதித் தள்ளினார்.
(பின்னாளில் எங்கள் காலத்தில் அமலாவை பாலிவுட் கொண்டு சென்று விடுமோ என்ற கவலையில் “அமலாவை இந்தி திரையுலகிற்கு செல்லாமல் தடுப்பது எப்படி?” என்று தமிழ் வாணன் அன்னாளில் ஏதாவது புத்தகம் எழுதி வைத்து விட்டு போயிருக்கிறாரா?! என்று கூட வேடிக்கையாக விசாரணை செய்ததுண்டு.

இவருக்கும் கண்ணதாசனுக்கும் ஏதோ மனஸ்தாபம் இருந்திருக்கிறது.

’கண்ணதாசன்’ மாதப் பத்திரிக்கையில் ‘அடுத்த இதழில் மாஸ்டர் ஆஃப் ஆல் ஃப்ராட்ஸ் பற்றி ‘ என்று அறிவித்து ஒரு குறிப்பு இருந்தது. 
தமிழ் வாணன் தான் அது என்று பரவலாக ஹேஸ்யம்.

அப்போது  தமிழ்வாணன் அகால மரணம். 

அடுத்த கண்ண தாசன் இதழில் 
மாஸ்டர் ஆஃப் ஃப்ராட்ஸ் கட்டுரை 
எதுவும் வெளியாகவில்லை. கப்சிப்.

..

மீள்

May 1, 2024

Apr 30, 2024

ஓவியர் முரளிதரன் ஸ்டுடியோவில்

ஓவியர் முரளிதரன் மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய நல்ல நண்பர்.
ராஜநாயஹம் எழுத்தின் மேன்மையான வாசகர்.

முரளிதரன் வரைந்த ஓவியம் 'அதி மதுர மதுர' நூலின் முகப்பில். 

'கிளர்ந்தெழும் தாபம்' நூலில் 
பின் அட்டையில் 
Carnal Thoughts Rajanayahem 
பற்றிய முரளிதரன் சிலாகிப்பு.

முரளிதரன் ஸ்டுடியோ விரித்துக் காட்சிகள் பேரனுபவம். மகத்தான ஓவியக் கலைஞர் .

அவருடைய மனைவி வசந்தா சிறந்த வாசகர். 

மகிழ்ச்சியான மாலை. 

ஜெய்ரிகி வெளியிட்டுள்ள 
R.P. ராஜநாயஹம் 
தழல் வீரம், காரணச்செறிவு, 
கிளர்ந்தெழும் தாபம், அதி மதுர மதுர
நூல்கள் முரளிதரன் கிருஷ்ணமூர்த்தி கைகளில்.

நடுவில் R.P. ராஜநாயஹம்


பிக்பாஸ் ராஜூ, 
'பொன்னி' டி.வி சீரியல் நடிகர் சுபர்ணன்

நடுவில் R.P. ராஜநாயஹம்

Apr 29, 2024

காஃப்காவும் பாப்பாவுடைய காணாமல் போன பொம்மையும்

இந்த சம்பவம் ஃப்ரான்ஸ் காஃப்கா இறப்பதற்கு முந்தைய வருடம் நாற்பதாவது வயதில் நடந்திருக்கிறது.
பூங்காவில் யாரோ பெண்குழந்தை தன்னுடைய பொம்மை காணாமல் போய் விட்டது என்று அழுது கொண்டிருப்பதைக் கண்டு சிறுமியோடு சேர்ந்து காஃகாவும் சேர்ந்து தேடியிருக்கிறான். பொம்மை கிடைக்கவில்லை. 
மறு நாள் மீண்டும் தேடிப் பார்ப்போம் என்று ஆறுதல் சொல்லி தேற்றி அனுப்பியிருக்கிறேன். 

மறுநாள் இருவரும் தேடிப்பார்த்தும் ஏமாற்றம் தான் மிச்சம். காஃப்கா அவளிடம் கடிதமொன்றை கண்டெடுத்ததாக காட்டியிருக்கிறான். பொம்மை எழுதிய கடிதம்.
" அழாதே பாப்பா, நான் உலகத்தை சுற்றிப்பார்க்க கிளம்பி விட்டேன். கவலைப்படாதே. என்னுடைய பயண சாகச அனுபவங்கள் பற்றி உனக்கு கடிதம் எழுதுவேன் பார்."

இப்படி சுவாரசியமான அழகிய கதை ஆரம்பித்து விட்டது.

காஃப்கா தான் எழுத்தாளராயிற்றே.
பூங்காவில் சிறுமியை சந்திக்கும் போதெல்லாம் பயணத்தின்  சாகச அனுபவங்கள் பற்றி பொம்மையின் கடிதம் கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறான்.
He loved the way of grace.
குழந்தைக்கு பேரானந்தம். கடிதங்களை அபிமானத்துடன் போஷித்து பத்திரப்படுத்தி வந்திருக்கிறாள்.

பொம்மை பெர்லீனுக்கு திரும்பி வந்துவிட்டதாக சொல்லி காஃப்கா
 புது பொம்மை கொடுத்த போது
 அந்த பெண் குழந்தை சந்தேகம்
 " இது என் பொம்மை போலவே இல்லையே" 

உடனே காஃப்கா பொம்மை எழுதிய இன்னொரு கடிதம் காட்டியிருக்கிறேன்.
" பாப்பா, இந்த பெரிய பயணம் என்னை 
முழுமையாக மாற்றி விட்டது. நான் தான் இந்த பொம்மை. நம்பு" 

காஃப்கா மறு வருடம் மரித்து விட்டான்.

பல வருடங்களுக்குப் பின்னர்
பதின் பருவத்தில்  பெண்
அந்த பொம்மையின் உள்ளே காஃப்காவே கையெழுத்திட்ட கடிதம் பார்க்கிறாள்.
" நீ நேசிக்கும் எதுவுமே ஒரு வேளை காணாமல் தொலைந்து போகலாம். அன்பு செலுத்தியதை இழக்கும்படி ஆகலாம். ஆனால் முடிவில் நேசமிகு பாச அன்பு வேறு வழியில் திரும்பி வந்து விடும்"

Apr 27, 2024

தப்பா சொல்லிட்டனே

1990ம் ஆண்டு புதுவையில் கி.ராஜநாராயணன் பேசும் போது சொன்னார்:
"Non Brahmin ல நூறு பேருக்கு ஒருத்தன் நல்லவன்.
 Brahminல ஆயிரம் பேருல நல்லவன் ஒருத்தன பார்க்கலாம்."

2010 ல தொலைபேசியில் கி. ரா விடம் இருபது வருஷத்துக்கு முன்ன இப்படி அவர் சொன்னதை நினைவு படுத்தியபோது

"அப்படியா சொன்னேன். தப்பா சொல்லிட்டனே. திருத்திக்கங்க.
பிராமின்ல பத்தாயிரம் பேருல ஒருத்தன் தான் நல்லவன்"

Apr 22, 2024

ஜெய்சங்கர் பாட்டு - ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா


ஜெய்சங்கர் பாட்டு - ‘ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா’

 வருடம் 1976 
"ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா, 
தர்மம் நிலைக்கும் என்று சொன்னவனே, 
நீ நாடாள வர வேண்டும்" 
இந்த வாலி பாடல் பாடி நடித்தவர் ஜெய்சங்கர். 

செய்தித்தாளில் இந்த பாடல் வரிகளோடு ஜெய்சங்கர் தலையில் கும்பத்தோடு ஆடி பாடுகிற ஸ்டில் போட்டு 'பணக்காரப்பெண்' பட விளம்பரம். 

மறு வருடம் 1977ல் எம். ஜி.ஆர். ஆட்சி ஆரம்பம் என்பது தெரிந்த விஷயம். 
எம். ஜி.ஆர் முதல்வரான பிறகு 
மறு வருடம் 1978ல் 
'வண்டிக்காரன் மகன்' கலைஞர் படத்திற்கு மருமகன் அமிர்தம் இயக்குநர். 'மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே' பாடல் வண்டிக்காரன் மகனில் தான். 

பின் கலைஞர் படங்கள் நெஞ்சுக்கு நீதி, ஆடு பாம்பே, 
1980ல் 'காலம் பதில் சொல்லும்'. இந்த படங்களில் ஜெய்சங்கர் தான் கதாநாயகன். 

ஜெய்சங்கரின் தாயார் மறைந்த போது கலைஞர் அவருடைய வீட்டிற்குப் போய் துக்கம் விசாரித்தார். 

'காலம் பதில் சொல்லும்' படத்திற்கு பிறகு கலைஞர் படங்களில் அமிர்தம் இயக்கத்தில் ஜெய்சங்கர் நடித்ததில்லை. 

1987ல் எம். ஜி.ஆர் மறைவு. 

1989 ல் கலைஞர் கருணாநிதி 13 வருடங்களுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். 
ஆட்சியை கைப்பற்ற நடந்த கடுமையான போராட்டம். 

கலைஞருக்கு எதிராக பெரு வியூகம். 
காங்கிரஸ் கலைஞருக்கு கை கொடுக்காமல் எதிராக தேர்தலை மூப்பனார் தலைமையில். 

உடைந்த அ.தி.மு.கவின் பகுதி எம்ஜியார் மனைவி ஜானகி தலைமையில் சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணியும், ஜெயலலிதா அணி சேவல் சின்னத்தில். 

தி. மு. க வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய போது நக்கீரனில் பிரபஞ்சன் 'தி. மு.க. வின் வெற்றி ஐயர்களின் தோல்வி'  என்று குறிப்பிட்டு 
தி. மு. க விற்கு எதிராக பிரசாரம் செய்த ஐயர்கள் பெயர்களை ஐயர் என்ற அடையாளமிட்டு குறிப்பிட்ட பெயர்களில் நடிகர் ஜெய்சங்கரையும் கூட ஜெய்சங்கர் ஐயர் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். ஆமாம். கலைஞருக்கு எதிராக ஜெய்சங்கர் 1989ல். 

மேஜர் பெயரையும் சுந்தர்ராஜ ஐயர் என்றே எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதினார். 

மணிக்கொடி சிட்டி என்ற பெ.கோ. சுந்தர்ராஜன் அப்போது கோயம்புத்தூரில் பிரபஞ்சனின் அந்த நக்கீரன் கட்டுரை படித்து விட்டு என்னிடம் சொன்னார் : அடுத்த தடவை பிரபஞ்சனைப் பார்க்கும் போது.                          'என்னை தெரியுதா? நான் தான் சுந்தர்ராஜ ஐயர்'  என்று சொல்வேன் ' என்றார். 
சிட்டியின் இந்த மெல்லிய நகைச்சுவை பற்றி 1990ல் புதுவையில் பிரபஞ்சனிடம் நான் சொன்ன போது ரசித்து புன்னகைத்தார்

….

20.08.2021 பதிவு

Apr 19, 2024

The Proud will be scattered

 
மிகப் பிரபலமான சினிமா படக்கம்பெனி.
தயாரிப்பாளருடன் கதாநாயகன், இயக்குநர் உள்பட இன்னும் சில பிரபலங்கள் அமர்ந்திருக்கிறார்கள். எல்லோருமே உழைப்பால் முன்னேறியவர்கள். 

செக்யூரிட்டி வேலை கேட்டு ஆள் வந்திருக்கிறார். 

தயாரிப்பாளர்" என்ன படிச்சிருக்கிற?" 

அந்த நபர்  " மூணாங்கிளாசு  படிச்சிருக்கேன், சார்"

பிரபல இயக்குநர் அவரிடம் " உனக்கு நான் வேல தரச்சொல்றேன். ஆனா எங்கள எல்லாரையும் விட நீ தான் அதிகம் படிச்சிருக்கிறங்கற கர்வம் மட்டும்
ஒனக்கு  வரவே கூடாது "

Apr 16, 2024

R.P. ராஜநாயஹம் பற்றி உஸ்மான் அலி

 
R.P. ராஜநாயஹம் பற்றி உஸ்மான் அலி 

"எங்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் கதாநாயகன்.. இவருடைய மாங்குயில் பாடிடும் கீதம் பாடல் இவருடைய குரலில் கேட்டு சொக்கிப்போய்த் திரிந்தோம்‌‌..அந்த பாடலை வைத்து "தருமி" வேலைகள் செய்துள்ளோம் பக்கத்தில் இருந்த மகளிர் கல்லூரிகளில்..அது அவருக்கு தெரியுமோ!!"

Apr 13, 2024

ராகுலம்

2024
ராகுலம் 

அண்ணனுக்கு இனித்த பலகாரம் தந்த தம்பி

அற்புதமான, மறக்கவே முடியாத ஆளுமை
ராகுல் காந்தி

.......

2019
ராகுலம்

ஸ்டெல்லா மாரிஸ்
Call me Rahul, not sir என்று ராகுல்காந்தி சொன்னவுடன் அந்த மாணவி வெட்கப்பட்டு நாக்கை நீட்டிய அழகு காட்சியின்பம்.
சற்று நிதானித்து “ ராகுல்” சொல்லி தன் கேள்விக்கிடையிலும்
“ ராகுல் “ என்று இழுத்து மீண்டும் கேள்வியை தொடர்ந்தது அற்புதம்.
எந்த சினிமாவிலும் காண முடியாத நேர்த்தியான காட்சி.

Pierre Bonnard's "Nude in the bath, with a dog"

Piere Bonnard's "Nude in the bath, with a dog"
பியர் பொனார் ஓவியன். 
பாரிஸ் நகர ட்ராம் வண்டியில் இருந்து இறங்கிய ஒரு பெண் மீது உடனே மையல் கொண்டு பின் தொடர்ந்து சென்றிருக்கிறான். 
அவள் பிணங்களுக்காக தயாரிக்கப்படும் மலர் வளையங்களில் முத்து மணிகளை தைப்பவள்.
நெருங்கிய பழக்கத்தில் வேலையை விட்டு விலகி பொனாருடன் இணைகிறாள். 

அவள் தன் வயது 16 என்றும், பெயர் மார்த் து மெலினி என்றும் பொய் சொல்கிறாள். முப்பது வருடங்களுக்கு பின் அவள் பெயர் வேறு என்பதும் அவள் சந்தித்த காலத்தில் பொனார் போல 20 ஒட்டிய வயதுடையவள் தான் என்பதும் தெரிய வந்தது.

மார்த் இறப்பதற்கு பதினைந்து வருடம் முன் இருவரும் ஒரு கிராமத்தில் செட்டிலாகிறார்கள். யாருடனும் ஒட்டாத தனிமை வாழ்க்கை.

தினமும் மணிக்கணக்காக மார்த் குளியல் தொட்டியிலேயே கிடந்திருக்கிறாள் மார்த்.

அவளுடைய மரணத்திற்கு ஒரு வருடம் முன் 1941 ல் இருந்து 1946 வரை கூட இந்த ஓவியத்தை பொனார் முடித்திருக்கவில்லை. அதாவது அவள் இறந்து ஐந்து வருடங்களுக்கு பின்னும் இந்த ஓவியத்தை வரைந்து கொண்டிருந்திருக்கிறான்.

 ஓவியத்தில் அவளுடைய டாஷண்ட் நாய் படுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறது.

கடைசியாக தீட்டிக்கொண்டிருந்த அந்த குளியலறை ஓவியங்களில் கிழவி எழுபது வயது ’மார்த்’ தை முதலில் தான் சந்தித்த போது நம்பியிருந்த பதினாறு வயது பெண்ணாகவே தான் வரைந்து கொண்டிருந்திருக்கிறான்.

ஐரிஷ் எழுத்தாளர் ஜான் பான்வில் எழுதியுள்ள
“ The Sea" நாவலில் இந்த ஓவியம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்த “கடல் “ 
மான் புக்கர் பரிசு பெற்றிருக்கிறது.

Nude in the Bath, with Dog

In Nude in the Bath, with Dog, begun in 1941, a year before Marthe’s death and not completed until 1946, left end, and beneath the bath on that side, in the same force-field, the floor is pulled out of alignment too, and seems on the point of pouring away into the corner, not like she lies there, pink and mauve and gold, a goddess of the floating world, attenuated, ageless, as much dead as alive, beside her on the tiles her little brown dog, her familiar, a dachshund, I think, curled watchful on its mat or what may be a square of flaking sunlight falling from an unseen window. The narrow room that is her refuge vibrates around her, throbbing in its colours. Her feet, the left one tensed at the end of its impossibly long leg, seem to have pushed the bath out of shape and made it bulge at the a floor at all but a moving pool of dappled water. All moves here, moves in stillness, in aqueous silence. One hears a drip, a ripple a fluttering sigh. A rust-red patch in the water beside the bather’s right shoulder might be rust or old blood, even.
- John Banville in "The Sea"

....

29, September, 2018 post

https://www.facebook.com/share/p/r1vQ6WxPDYg1gRuC/?mibextid=oFDknk

R.P. ராஜநாயஹம் ட்ராட்ஸ்கி மருதுவுடன்

R.P.ராஜநாயஹம்
ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவுடன். 


ஃபென்னர் ஸ்டீபன் திருமணம் மதுரையில்.

பம்பைத்தலை பெல்பாட்டம் ட்ராட்ஸ்கி.
ராஜநாயஹம் மாடர்ன் ஃபாரின் ஜீன்ஸ்.
சர்ட் இன் பண்ணி.. ஃபுல் ஹாண்ட் சர்ட் மடித்து..

அந்த வருடம் ட்ராட்ஸ்கி 'செக் போஸ்ட்' இயக்குநராக படம் ஆரம்ப விழா சென்னையில் நடந்தது. முயற்சி ஈடேறவில்லை.
 அந்த கதையை ஒட்டி பின்னர் 
வேறொரு 'பகவதிபுரம் ரயில்வே கேட்'  அன்னக்கிளி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்தது.

முந்தைய வருடம் ஹிண்டு ரங்கராஜன் "அழைத்தால் வருவேன்" ராஜநாயஹம் அசிஸ்டன்ட் டைரக்டர். படம் ரிலீஸ் ஆகி படு தோல்வி.

இந்த திருமண நிகழ்வு போது 
திலகர் மருது 'டார்லிங் டார்லிங்' பாக்யராஜ் படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டர். பின்னர்  தொடர்ந்து முந்தானை முடிச்சிலும் பாக்யராஜிடம் திலகர்  அஸிஸ்டன்ட்.

ஃபென்னர் ஸ்டீபன் திருமணத்திற்கு வந்திருந்த செந்தூர் இந்த நிழற்படத்தில் கண்டு பிடித்து விட்டேன். அருண் இருக்கிறான்.

பிரபலமான பொன். மாணிக்கவேல் புகைப்படத்தில் கடைசியாக ஓரத்தில் நிற்கும் செந்தூர் அருகில்.

ஸ்டீபன் கல்யாண பந்தியில் எல்லோரும் பந்தியில் சாப்பிடும் போது செந்தூர் எல்லோரையும் சுற்றிலும் பார்த்து கலகலப்பாக வாய் விட்டு சிரித்து சொன்னான் " ஒன்னும் சாதிக்கப் போறதில்ல"

Apr 12, 2024

டூப்பு

R. சுந்தர்ராஜன் இயக்கிய 
விஜய்காந்த் படங்கள் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, தழுவாத கைகள் தாண்டி
 என் கிட்ட மோதாதே, என் ஆசை மச்சான், காந்தி பிறந்த மண்.

படப்பிடிப்பில் 
இருவரும் சாப்பிட உட்கார்ந்த போது அடுத்த படத்துக்கு விஜய் காந்த் கால்ஷீட் கேட்டிருக்கிறார். விஜய் காந்த் உதட்டை பிதுக்கி கால்ஷீட் இல்லை என மறுத்து விட்டார்.

சுந்தர்ராஜன் மூட் அவுட். ஸ்டண்ட் சீனுக்காக அந்த நேரத்தில் ஒரு சத்தம்
 "விஜய் காந்த் டூப் எங்க?"

சுந்தர்ராஜன் உடனே விஜய்காந்த்தை காட்டி 
" டேய் இவர் தான்டா டூப். அவன் நிஜமாவே மேல இருந்து குதிக்கிறவன்டா. அவனைப் போயி டூப்புங்றீங்க. குதிக்கிற மாதிரி நடிக்கிற இவரு தான்டா டூப்பு"

விஜய்காந்த் செம பதில் "அப்ப அவனயே வச்சி படத்த எடுத்துக்க"

Apr 10, 2024

புத்தம் புதிய மூன்று புத்தகங்கள்


சாய் ரமணாவின் ஜெய்ரிகி வெளியீடாக                                                                                       R.P. ராஜநாயஹம் புத்தம்புதிய நூல்கள்

1. டிசம்பர் - மார்கழி - ஜனவரி

2. தித்தித்தது

3. தூறலாய் சாரல்

.....

R.P.ராஜநாயஹம் 9வது நூல்
டிசம்பர் மார்கழி ஜனவரி

10வது நூல்
தித்தித்தது

11வது நூல்
தூறலாய் சாரல்.

ஜெய்ரிகி வெளியீடாக
5, 6, 7 வது புத்தகங்கள்
.....


பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி

ராஜநாயஹம் உறுதியான கணிப்பு : பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி காணும்.

பா.ஜ.க. , தே.மு.தி.க., பா.ம.க.,வுக்கெல்லாம் ஒரு இடம் கூட உறுதியாக கிடைக்கவே கிடைக்காது.

ராஜநாயஹம் உறுதியான விருப்பம் : மத்தியில் I.N.D.I.A கூட்டணி மந்திரிசபை அமைய வேண்டும் 

Apr 8, 2024

செந்தாமரை

கோபிச்செட்டிப்பாளையம் லாட்ஜ். 
காலை நேரத்தில் மேலே இருந்து
 கீழே டீக்கடையை எட்டிப்பார்த்து 
பிஸியான பிரபல நடிகர் செந்தாமரை சத்தமாக 
" டேய் ஒரு டீ குடுத்து விடுடா, டேய்"
கீழேயிருந்து டீக்கடைக்காரர் அதே தோரணையில் மிக சத்தமாக மேலே இவரைப் பார்த்து உடன் பதில் 'அடி'
 " ஸ்ட்ராங்கா வேணுமாடா, இல்ல லைட்டா டீ வேணுமாடா, ஏன்டா"

யாராயிருந்தாலும் டேய் என்று அதட்டலாக மீசையை நீவியவாறே தான் ஜபர்தஸ்தாக தன்னை காட்டிக்கொள்வார் செந்தாமரை.

"டேய் அலெக்ஸ்" என்று வாகினி ஸ்டுடியோவில் இயக்குநர் மகேந்திரனை செந்தாமரை கூப்பிட்டதை பார்த்திருக்கிறேன்.
அப்படி கூப்பிடும் போது அதை பலரும் கவனிக்கும்படி தான் 'டேய்' சொல்வார் 
மகேந்திரன் அப்போது ஜானி வரை இயக்கியிருந்த நேரம்.
மகேந்திரனுக்கு 1960களிலேயே செந்தாமரை நெருக்கமானவர். 

மகேந்திரன் எழுதிய 'இரண்டில் ஒன்று' நாடகம் செந்தாமரை காவல் துறை அதிகாரியாக நடித்து நூற்றுக் கணக்கான தடவை மேடையேற்றப்பட்டது. பின்னர் இதே நாடகம் 'தங்கப்பதக்கம்' என்று சிவாஜி கணேசன் நடிக்க மேடையேறி மிகவும் பிரபலமாகி 'தங்கப்பதக்கம்' சினிமாவானது.

 ரொம்ப தாமதமாக மெட்டியில் தான் இவருக்கும், மகேந்திரன் தன் ரத்த சொந்தம் ராஜேஷுக்கும் ( ராஜேஷின் அத்தான் மகேந்திரன். அத்தை மகன் )வாய்ப்பு கொடுத்தார்.

டேய் என்று மகேந்திரனை கூப்பிட்ட போது சரியான பட வாய்ப்பின்றி தான் செந்தாமரை இருந்தார். ஆனாலும் பந்தாவாகத் தான் டேய் சொன்னார். அவருடைய இயல்பு.

வி. எஸ். ராகவனும் செந்தாமரையும் நடித்த போலீஸ் ஸ்டேஷன் காட்சி படப்பிடிப்பு அடையார் திரைப்பட கல்லூரியில் நடைபெற்ற போது ஷூட்டிங்கில் பார்த்தேன்.
செந்தாமரை இன்ஸ்பெக்டராக மீசையை தடவிக் கொண்டு அசிஸ்டன்ட் டைரக்டரிடம் 
"டேய் பிரபாகர். என்னடா டயலாக் வாசிக்கிற. உச்சரிப்பே சரியில்ல. 
நான் தமிழ் வாத்தியார்டா" 

 வி.எஸ். ராகவனுடன் பேசினேன். ஆனால் செந்தாமரையிடம் பேசத் தோன்றவில்லை.

ராஜேஷ் "அந்த ஏழு நாட்கள்" படத்தின் மூலம் பிரமாதமான வரவேற்பு பெற்றவர். இன்று வரை அவருக்கு பிடித்த படமாக சொல்வார். 
"மெட்டி"யை தனக்கு பிடிக்காத படமாக வெளிப்படையாக என்னிடம் ராஜேஷ் சொல்கிறார்.

செந்தாமரை அசதியாக இருந்த சமயத்தில் ராஜேஷிடம் " டேய் ராஜேஷ், பாக்யராஜ் கிட்ட சொல்லுடா. படமில்லாம இருக்கேன்"

ராஜேஷ் இவருக்கு வாய்ப்பு தரச்சொல்லி
பாக்யராஜிடம் கேட்டிருக்கிறார். 

பாக்யராஜ் எவ்வளவு பேர் வாழ்க்கையில் சிறப்பான மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறார்.

"தூறல் நின்னு போச்சி" செந்தாமரை கண்ட பசுமையான வாய்ப்பு. அதன் பிறகு தான் பல பொன்னான வாய்ப்புகள்.

நியூமராலஜி ஜோதிடம் பார்த்து  
பெயரை எப்படி எந்த எண்ணில் மாற்ற வேண்டும் என்று பலருக்கும் சொல்லிக் கொண்டிருந்தார்.
குமுதம் இதழில் நியூமராலஜி ஜோதிடம் பற்றி தொடர் எழுதினார்.

நன்றாக நினைவிருக்கிறது.
1992ல் ராசுக்குட்டி டப்பிங் ஏ.பி.என். டப்பிங் தியேட்டரில் நடந்து கொண்டிருந்தது.

இரண்டு நடிகர்கள் மரணச் செய்தி பற்றி தகவல் கேட்க நேர்ந்தது. 
ஒருவர் செந்தாமரை. 
இன்னொவர் பழம் பெரும் நடிகர்
 எம். கே. முஸ்தபா. 
ஒரே நாளில் தான் 
இருவருமே மறைந்தார்கள்.

https://www.facebook.com/share/p/QKuGG7YVxi29c23r/?mibextid=oFDknk

Apr 5, 2024

டைரக்டர் பாக்யராஜ் இரண்டாவது அழைப்பு

05. 04. 2024 மாலை 
 
நடைப்பயிற்சியின் போது கையில் மொபைல் ஃபோன் வைத்துக் கொள்வதில்லை.
அந்தி மாலை வீட்டிற்கு வந்தவுடன் பார்த்தால் மிஸ்ட் கால். 
இயக்குநர் பாக்யராஜ் அழைப்பு.

அழைத்தேன். 
"காரணச்செறிவு" தலைப்பு விபரம் கேட்டார்.
'அன்னலட்சுமி' கட்டுரையின் முடிவில் எழுதியுள்ள
"When you are destined to be hanged, you will never be drowned" பற்றி பாக்யராஜ் விசாரித்தார்.

சில சம்பவங்கள்  சொன்னார். 
'பைபிள் சத்தியம்'  தொட்டு,
எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன்
 கதை டிஸ்கஷனில்  ரெண்டு நாளா வாளாவிருந்து பாக்யராஜிடம் 'நான் கிளம்புறேன்'ன்னு ஒதுங்கிக் கொண்ட விஷயம்..

ராசுக்குட்டி சமயம் பாக்யராஜ் பேசிய சுவையான பழைய விஷயங்கள் நினைவில் இருந்தெல்லாம் சிலவற்றை கூறினேன்.

நான்கு நாட்களில் டைரக்டருடன்                     ராஜநாயஹம் இரண்டாவது உரையாடல்.


Aharathi Visit

அகராதி : "புறநகரின் கட்டட அடுக்குகளிடையே எழுத்தாளர் ஒருவரை எதிர்பார்க்கவில்லை. பார்த்தவுடன் அடையாளம் கண்டு  (புக் ஃபேர்ல நானும் என் வைஃபும் பாத்தோம். நீங்க பாக்கல) இயல்பாகவும் இனிதாகவும் பேசினார். வீட்டுக்குச் சென்றால் அவர் மனைவியும் அதே இயல்பு இனிது என்றிருக்கிறார்!
ராஜநாயஹத்திடம் அனுபவக் கிடங்குகள் உண்டு. மனிதர் அத்தனை பரிட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டிருந்திருக்கிறார். மத்திய அரசு வேலையை கால்கடுதாசியில் தூக்கிப்போட்டு வந்திருக்கிறார் என்றால் பாருங்கள்..புனைவின் பக்கம் காலெடுத்து வைத்தால் அதகளம்தான்.. பேசும்போது நாலு வரிகளுக்கு ஒரு முறை சரவணன் பிரசன்னமாகிறார். அழகான நட்பு!  சந்தோஷமாக இருக்கிறது.❤️"