அந்தக் காலத்தில் பெண் போலீஸ் கிடையாது.
ஆனால் க்ரூப் டான்ஸ் நடிகை சாந்தாவுடைய அப்பா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவராம். அதனால் பேசும்போது அடையாளப் படுத்த இன்ஸ்பெக்டர் சாந்தா என்றே திரைப்பட நடன உலகில் குறிப்பிடப்பட்டார்.
1964ல் நாகேஷ் கதாநாயகனாக நடித்த ’சர்வர் சுந்தரம்’ படத்தில் மாமல்லபுரம் லொகேஷனில‘ சிலையெடுத்தான் ஒரு சின்னப்பெண்ணுக்கு‘ பாடலில் கே.ஆர்.விஜயாவுடன் க்ரூப் டான்ஸ் ஆடியவர்களில் ஒருவர் சாந்தா.
அதே சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் ஆடிப்பாடும் “ அவளுக்கென்ன அழகிய முகம்” பாட்டில் “ அன்புக் காதலன் வந்தான்” என்று அவருடன் ஆடும் பெண் தான் சாந்தா.
அடுத்த வருடமே ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில் வில்லியாக சாந்தா நடித்தார்.
“ பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி “ என்ற செமி க்ளாசிக்கல் பீம்ப்ளாஸ் ராகப் பாடலுக்கு நடனமாடுவார்.
தொடர்ந்து
“ ஆஹா!இது நள்ளிரவு” பாடல். தமிழ் திரை கண்ட ஒரு நல்ல vamp என சாந்தாவைச் சொல்லவேண்டும்.
"கண்ணாடி மேனியடி தண்ணீரில் ஆடுதடி
கல்யாணம் ஆகும் முன்னே
கற்பனையில் நீந்துதடி" என்று 'கொடி மலர்' படத்தில் காஞ்சனாவுடன் சாந்தா ஆடுவார்.
'நீ' படத்தில் P.B.ஸ்ரீநிவாஸ், L.R. ஈஸ்வரி பாடிய
"One day, One way, one girl, one boy" பாடலில் நாகேஷுடன் ஆடினார்.
'அரச கட்டளை ' சுசிலா பாடல்
"என்னைப் பாடவைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன் தான் தலைவன்" ஜெயலலிதாவுடன் ஆடுபவர் இன்ஸ்பெக்டர் சாந்தா தான்!
டான்ஸர் சாந்தாவுக்கு ரசிகர்கள் நிறைய இருந்தார்கள்!
நடன இயக்குனர் தாராவுக்கு அந்தக் காலத்தில் சாந்தா சிறந்த தோழி.
தாரா யார் தெரிகிறதா? பிரபு தேவாவுக்கு பெரியம்மா.
ஆமாம். பிரபு தேவாவின் அம்மாவை சுந்தரம் மாஸ்டர் திருமணம் செய்யுமுன்னரே தாரா மாஸ்டருடன் சட்டியில விழுந்து பொட்டியில விழுந்து கட்டில்லயும் விழுந்து ஒளப்பி குடும்பம் நடத்தி ஒரு பிள்ளைய பெத்து...... தாரா மாஸ்டர் இவ்வளவு காலம் கழித்து, இப்படி ஓத்து ஒழுக விட்டுட்டுப் போய்ட்டானேன்னு அதைச் சொல்லிப் புலம்பி........
பச்சை விளக்கு படத்தில் “ கன்னி வேண்டுமா? கவிதை வேண்டுமா காதல் கதைகள் சொல்லட்டுமா?” பாட்டில் “ ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா? அன்பு மந்திரம் ஓதட்டுமா?”என்ற பிபிஎஸ் வரிகளுக்கு
AVM ராஜன் பாடி ஆடும்போது, கூட ஆடுவது சுந்தரம் மாஸ்டர் தான்.
சுந்தரம் மாஸ்டர் ’நீர்க்குமிழி’(1965ல்பாலச்சந்தர் இயக்கிய முதல் படம்) படத்தில் “ வண்ண விழி மேடை” பாடலில் முதலில் மேடையில் ஆட ஆரம்பிப்பார். நாகேஷ் அவர் கையைப் பிடித்து இழுத்து உள்ளே அனுப்பி விட்டு தொடர்ந்து ஆடுவார்.
"சந்திரபாபு வுக்கு நடனம் ஆட தெரியாது. நடனம் பற்றி எந்த அடிப்படை அறிவும் கிடையாது ." -- இப்படி சொன்னவர் சுந்தரம் மாஸ்டர்!
"சும்மா எல்லாம் பாவ்லா தான் செஞ்சான். ஆனா ஜனங்க அதை அந்த காலத்தில் டான்ஸ் னு நம்பினாங்க. பெரிய டான்சர் சந்திர பாபு ன்னு இன்னைக்கும் எல்லாரும் நினைக்கிறாங்க. அவன் சும்மா டான்ஸ் ஆடுற மாதிரி பாவ்லா தான் பண்ணான் ".
இதில் அபத்தம் என்ன வென்றால் சுந்தரம் மாஸ்டர் நடிகர் நடிகைகளுக்கு டான்ஸ் ஆட பயிற்சி தரும்போது அவர் ஆடுவதை காண சகிக்காது . ஒவ்வொரு வரிக்கும் அவர் முதலில் ஆடிக்காட்டுவார். கொஞ்சம் கூட டான்சில் GRACE இருக்காது. மூவ்மென்ட் ஆரம்பிக்கும் போது செயற்கையாக வினோதமாக இருக்கும்.
................................................................................................................
http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_12.html

எப்படி இவ்வளவு நுணுக்கமான விஷயங்களை நினைவு வைத்திருக்கிறீர்கள்? சம்பத்தப்பட்டவர்கள் குடும்பத்தாருக்கு கூட இவ்வளவு விவரங்கள் தெரிந்திருக்காது! வழக்கம்போல நகைச்சுவை கரைபுரண்டோடும் பதிவு!!
ReplyDeletelike father, like son
ReplyDelete