Jul 21, 2009

Ailing Popes are not unusual

82 வயது போப் பெனடிக்ட் இத்தாலியில் விடுமுறையை கொண்டாட சில நாட்களுக்கு முன் சென்றிருந்த போது கீழே விழுந்து கை மணிக்கட்டில் எலும்பில் அடி பட்டு கீறல் ஏற்பட்டு சுகவீனம் ஏற்பட்டதாக ஒரு செய்தி .
A Pope is not ill until He is dead என்பது வாட்டிகன் விதிமுறை . மருத்துவ விதிமுறை Ailing Popes are not unusual. சுகவீனம் ஏற்பட்டு விடும்போது போப் கூட நோயாளி தான் .
முன்னாளில் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளில் ஒருபோப் ' பயஸ் ' என்று பெயர் . 'சேசு சபை பாதிரிகள் சிகரட் பிடிக்கக்கூடாது' . என்றார். இது பரவாயில்லை. தப்புன்னு சொல்லமுடியுமா ? பாதிரிகள் என்று இல்லை யாருக்குமே சிகரட் குடிப்பது உடம்புக்கு தொந்தரவு தான் .சுகக்கேடு தான் .ஆனால் இந்த போப் ' விதவைகள் மறுமணம் செய்வது கூடாது ' என்று வேறு சொன்னார் . கடைசி காலத்தில் அவருக்கும் சுகவீனம் ஏற்பட்டது . 'மெண்டல் பிரச்சினை '.மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலை . Ailing Popes are not unusual.
ஆல்பெர் காம்யு தன் 'வீழ்ச்சி' நாவலில் சொன்னார் '' போப் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஜெபிப்பதை நிறுத்தி விட்டு மோசமான தீயவர்கள் மத்தியில் வந்து வாழவேண்டும்.''
சேரியில் வந்து வசிக்கும் போப் நமக்கு வேண்டும். வாட்டிகன் அரண்மனையை விட்டு போப் சேரிக்கு வந்து வாழ வேண்டும்.

'But who today is the enemy of the people of god ? Louis the emperor or John XXII the Pope ?'
-Umberto Eco in 'The name of the Rose'

...

 பாதிரி ஒருவர் விடுமுறை கொண்டாட்டத்திற்காக காட்டுப்பகுதி ஒன்றிற்கு சென்றவர் விருந்தை முடித்துக்கொண்டு விச்ராந்தியாக 'சின்ன வாக் ' போக ஆரம்பித்தவர் ஏதோ சிந்தனையில் மூழ்கியவாறு காட்டின் உள்பகுதிக்கு சென்று விட்டார் . திடீரென்று எதிரே ஒரு சிங்கம் . நடுங்கிபோய் முழந்தாளிட்டு ' தேவனே ! காப்பாற்று !' என கண்மூடி பிரார்த்திக்க ஆரம்பித்து விட்டார் . சிறிது நேரம் கழித்து கண்ணை திறந்து பார்த்தால் இவர் முன் சிங்கமும் கண் மூடி ,முழந்தாளிட்டு கை கூப்பி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தது . பாதிரியார் பரவசமாகி வான் நோக்கி '' தேவனே ! உம்முடைய வல்லமை அளப்பரியது !! சிங்கத்தைக்கூட மனம் திரும்ப செய்து விட்டீரே !!! என்னே உம்முடைய பெருமை !!!" என கூவினார் . சிங்கம் கண் திறந்து " சாப்பிடும் முன் தேவனுக்கு நன்றி ஜெபம் சொல்கிறேன் . இன்றைய உணவுக்காக கடவுளுக்கு நன்றி.தேயா கிராசியஸ் !" என்று அதே பரவசத்துடன் சொல்லி " ஜெபம் செய்யும்போது கூப்பாடு போடக்கூடாது " என்று கண்டிப்புடன் பாதிரியாரை  அதட்டி விட்டு சாப்பிட ஆரம்பித்தது.

22 comments:

  1. welcome rpr!
    we are eagerly waiting for your
    pathivugal!

    ReplyDelete
  2. தலைவா வந்திட்டியா... பதிவ படிச்சிட்டு வந்துடறேன்

    ReplyDelete
  3. சேரியில் பிறப்பர் வாட்டிகன் அரண்மனைக்கு போகலாம் ஒரு நாட்டையே ஆளலாம்... ஆனால் அவர்கள் சேரிக்கு திரும்புவார்களா?

    ReplyDelete
  4. நல்ல பதிவு....உங்கள் தொடர் பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  5. ரொம்ப நாள் கழிச்சுப் பதிவுப் பக்கம் வந்திருக்கீங்க!
    வாங்க, வாங்க!!

    அப்புறம் இந்த போப்பு, வாடிகன்........................................வேறேதுனாச்சும் ஆகுற கதையச் சொல்லுங்க சார்!,

    ReplyDelete
  6. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று தான் வலையை மேய்கிறேன்.
    வாராதுபோல் வந்த மாமணி தங்களின் பதிவு.

    ReplyDelete
  7. களத்திற்கு வருகிறீர்களா..? மீண்டுமா..? வருக.. வருக..!

    ReplyDelete
  8. திண்டுக்கல் சர்தாரையே இரண்டாண்டுகளுக்குப் பின்பு பின்னூட்டம் போட வைத்திருக்கும் உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை..!

    வாழ்க வளமுடன்..!

    ReplyDelete
  9. பதிவு வழக்கம் போல உங்க டச்சோட இருக்கு. அப்பப்போ எழுதுங்க சார். “அடிக்கடி படிப்பவை”ல உங்க பதிவை வச்சிருக்கேன். யாராவது “அவரே எப்போனா தான் எழுதுறார், நீ எப்படி அடிக்கடி படிப்பே”ன்னு என்னை கேட்டுடப் போறாங்க :-)

    ReplyDelete
  10. அடிக்கடி உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். எதிர்பார்ப்புடன் இருக்கும் வாசகர்களில் ஒருவன்.

    ReplyDelete
  11. இரண்டுமாத இடைவெளி விட்டு மீண்டும் வந்தது மகிழ்ச்சி.வருக வருக என வரவேற்கிறேன்.

    ReplyDelete
  12. Welcome back RPR !

    ReplyDelete
  13. Weicome Back!!!

    ReplyDelete
  14. அன்புள்ள இராஜநாயகம் அவர்களுக்கு,

    எதனால் தங்கள் எழுத்து இடையில் தடைபட்டது என்று தெரியாது. எதுவாக இருந்தாலும் அதனை மீறி எழுதும் பணி தொடர எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. Dear sir,

    Welcome back. You are a phoenix. It is our good luck to have you back in blogosphere.

    Regards,

    N.Ramakrishnan

    ReplyDelete
  16. Hilarious Sir ! Back with a Bang. Do try to post off and on.

    ReplyDelete
  17. WELCOME BACK RPR SIR...

    We all missed you terribly....
    Pl do continue to share your thoughts with us..
    Hope there will be no more ..BREAK...

    Thank you sir..pl continue

    ReplyDelete
  18. Hi RP Rajanayahem

    Very happy to touch base with you.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.