Mar 4, 2009

டைப்பிஸ்ட் கோபு

'நெஞ்சே நீ வாழ்க'
ஒரு நாடகம்.
பிலஹரி எழுதியது.
டி.எஸ்.சேஷாத்ரி நாடகமாக நடித்தார்.
அதில் ஒரு டைபிஸ்ட் பாத்திரம் கோபுவிற்கு.
நாடகம் முழுதும் ஒரு வசனமும் கிடையாது.
முகபாவத்தில் பாராட்டை பெற்றார்.
அதனால் டைபிஸ்ட் என்பது அவர் பெயருடன் இணைத்து சொல்லப்பட்டது.
பின் இக்கதையே 'ஆலயம்' என்ற பெயரில் திரைப்படம் ஆனது.கோபுவும் அதே பாத்திரத்தில் நடித்தார்.

இவருடைய நகைச்சுவை நாடகங்கள் அந்த காலத்தில் நாற்பது வருடங்களுக்கு முன் பாப்புலர் . சினிமாவில்சாது மிரண்டால் , அதே கண்கள் , எங்க மாமா போன்ற பல படங்களில் அந்த காலத்தில் வருவார் . இவருடைய கண்கள் , அகன்ற முகம் சிரிப்பு நடிகருக்கேற்ற அமைப்பு கொண்டது . சோ வின் நண்பர் நடிகர் நீலுவும் டைப்பிஸ்ட் கோபுவும் ஒரே சாயல் என்பதால் ரசிகர்கள் படத்தில் நீலு வை பார்த்தால் டைப்பிஸ்ட் கோபு என்று நினைப்பார்கள் . டைப்பிஸ்ட் கோபுவை திரைப்படங்களில் பார்க்கும்போது நீலு என நினைத்து குழம்புவார்கள் .

'ராசுக்குட்டி ' பட டிஸ்கசன் போது இவருடைய பெயரை ஒரு ரோல் செய்ய கதை இலாக்காவில் இருந்த ஒருவர் சிபாரிசு செய்த போது பாக்யராஜ் " டைப்பிஸ்ட் கோபு வேண்டாம் . மறு நாளே கஷ்டத்தை சொல்லி ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று ஆபிஸ் வந்து நிற்பார் .தொந்தரவு " என சலித்துஉடனே நிராகரித்து விட்டார் .ருத்ரா படத்தில் டைபிஸ்ட் கோபு BANK MANAGERரோல் செய்யும் போது என்ன கஷ்டமோ பாவம் இப்படி பணம் கேட்டு பாக்யராஜை தொந்தரவு செய்திருக்கிறார். இந்த மாதிரி நடிகர்கள் தொந்தரவானவர்கள் என கெட்ட பேராகி எல்லா பட கம்பனிகளும் ஒதுக்கி விடுவார்கள் .

டைப்பிஸ்ட் கோபு நாற்பது வருடங்களுக்கு முன் சென்னை கோபாலபுரத்தில் பூர்வீகமாக சொந்தமாக பெரிய பங்களா , இருநூறு பவுன் தங்க நகை , நிறைய வெள்ளி பாத்திரங்கள்,வேலையாட்கள் என்று நல்ல செழிப்பாக வாழ்ந்தவர் . இதை விகடனில் பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தார் . என்ன நடந்தது என்று குறிப்பிட்டு அவரால் சொல்ல தெரியவில்லை . இத்தனைக்கும் அவருக்கு கெட்ட பழக்கங்கள் ஏதுமே கிடையாதாம் . 1975ல் அவ்வளவு வசதி , வீடு ,நகைகள் எல்லாம் போய் விட்டதாம். அனைத்தையும் இழந்து ஒரு சின்ன வாடகை வீட்டில் குடியேறி நடிக்க கிடைத்த சின்ன ,சின்ன வாய்ப்புகள் கூட இல்லாமல் ஆகி வீட்டின் முன்னே விளையாடிகொண்டிருக்கும் குழந்தைகளுக்கு காகிதகப்பல் செய்து கொடுத்துக்கொண்டு சின்ன வீட்டு வாசல் படியில் உட்கார்ந்து இருந்திருக்கிறார்.

The ups and downs of life have made it so difficult to understand.


12 comments:

  1. That was a truly sad story. What happened anyway? Did he try to produce a movie or something?

    How did he get the name, typist Gopu?

    ReplyDelete
  2. I am just beginnig to write a review on Mandiri Kumari. Any memories of S.S. Sivasooriyan, who plays the king in that movie? Or Kalla part Natarajan? Or G. Sakunthala, Madhuri Devi? How did G. Sakunthala, who played MGR's heroine in that movie became Chandrababu's jodi in Nadodi mannan in 7 short years?

    ReplyDelete
  3. Dear RV
    From The Hindu article http://www.hindu.com/fr/2004/04/30/stories/2004043001720500.htm

    `Typist' is the sobriquet he earned for his popular role in T. S. Seshadri's stage play, "Nenjae Nee Vazhga."

    ReplyDelete
  4. அன்புள்ள ராஜநாயகம்,

    தமிழ்த்திரையுலகில் அதிகம் கவனிக்கப்படாத ஆனால் நீண்ட வருடங்களாக பிரத்யேக திறமையுடன் இயங்கிக் கொண்டிருக்கும் நடிகர்,நடிகையர்களைப் பற்றின செய்திகள் குறைவு. உங்கள் பதிவுகளில் அவர்களை நடிப்புலகைத் தாண்டியும் அறிந்து கொள்ள முடிகிறது. தொடருங்கள்.

    ReplyDelete
  5. நெஞ்சே நீ வாழ்க
    ஒரு நாடகம்..பிலஹரி எழுதியது.டி.எஸ்.சேஷாத்ரி நாடகமாக நடித்தார்.அதில் ஒரு டைபிஸ்ட் பாத்திரம் கோபுவிற்கு...நாடகம் முழுதும் ஒரு வசனமும் கிடையாது.ஓரிரெண்டு முகபாவத்தில் பாராட்டை பெற்றார்.அதனால்...டைபிஸ்ட் என்பது அவர் பெயருடன் இணைத்து சொல்லப்பட்டது.பின்..இக்கதையே ஆலயம் என்ற பெயரில் திரைப்படம் ஆனது.கோபுவும் அதே பாத்திரத்தில் நடித்தார்.

    ReplyDelete
  6. ராஜநாயஹம் சார்,

    Nov 2007 ல் ஒரு நாள் மாலை, தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடில், கிட்டத்தட்ட அண்ணா சாலை அருகில், அரைக் கைச் சட்டையும் லுங்கியும் அணிந்த, அச்சாக டைப்பிஸ்ட் கோபு போன்ற ஒரு மனிதரைப் பார்த்தேன்! இன்று உங்கள் பதிவைப் படிக்கும் போது அது அவரேதான் என்று உறுதியாகி விட்டது! நன்றி!

    சினிமா விரும்பி

    ReplyDelete
  7. ஏன் சார் ஒரு சிலரைத் தவிர கலையை வாழ்க்கையாக தேர்ந்து கொண்டவர்களின் நிலை இப்படி இருக்கு

    ReplyDelete
  8. Krishnan, T.V. Radhakrishnan,

    Thanks for the info! Unfortunately the Hindu link gets cut in my browsers and I couldn't get to it. I would have loved to read that article as well.

    ReplyDelete
  9. Sir,

    Kindly note,
    Gopu's role in rudra is Bank Manager not Police.

    Please take this is not a complaint
    just take as simple.

    ReplyDelete
  10. Yes, Gopu's role in Rudra is Bank manager.
    Thanks sir!

    ReplyDelete
  11. சினிமாவில் காமெடி நடிகர் ஒரு தனி
    பாணியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில் பல நடிகர்கள் ரொம்ப சாமர்த்தியமாக வளர்த்து முன்னேறினார்கள்.


    அதில் கோபு தவறி விட்டார்.Survival of the fittest.

    தன்னுடைய ”குண்டு” காமெடி ரொமப நாள் ஓடவில்லை.bride"s maid ஆகத்தான் முடிந்தது.

    ReplyDelete
  12. Workers working in Industries other than cine Industries are planning their retirement after getting their 1st month's salary.
    Cine Industry worker need to have financial advisory organization to plan and manage money their financial transactions.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.