Sep 24, 2026

Cause Celebre


May 24, 2017
Cause Celebre

’தமிழர்’ -  ரொம்ப ரோஷத்துடன் விவாதிக்கப்படும் சிக்கலான விஷயமாகியிருக்கிறது.

45 வருடங்களுக்கு முன் தி.மு.க எம்.பி செ.கந்தப்பன் என்பவர்
(பின்னால் கிரானைட் வீரமணியாக அறியப்பட்டவரின் உறவினர்.)
ஒரு வாக்கியம் சொல்லி அது ரொம்ப பிரபலம்.

இந்திராகாந்தியின் மத்திய அமைச்சரவையில் அப்போது மோகன் குமாரமங்கலம் ஒரு மந்திரி.

செ.கந்தப்பன் சொன்னார் : ”மோகன் குமாரமங்கலம் விஞ்ஞான ரீதியாக முழு தமிழர் ஆகமாட்டார்.”

துக்ளக் சோ இதை பிரமாதமான ஜோக் ஆக பாவித்து, தன் வாசகர்களிடம் செ.கந்தப்பனுக்கு ’ஒரு பைசா’ மணியார்டர் சன்மானமாக அனுப்பச்சொன்னார். அந்த மணியார்டர் அக்னாலெட்ஜ்மெண்டை துக்ளக்கிற்கு அனுப்பி வைத்தால் அந்த வாசகர்கள் பெயரை துக்ளக்கில் பிரசுரம் செய்தார்.

நிறைய, ஏராளமான வாசகர்கள் மணியார்டர் அனுப்பினார்கள் என்பது தெரிந்தது.
செ.கந்தப்பன் அந்த ஒரு பைசா மணியார்டர்களை மறுக்காமல் சலிக்காமல் கையெழுத்திட்டு வாங்கியிருந்திருக்கிறார்.

......

மீள் பதிவு 

2017

Sep 21, 2026

நிரோத்து


1970களில் ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டங்களின் துவக்கத்தில் கச்சேரி உண்டு. 
ரூப் தேரா மஸ்தானா மெட்டில் பாடல்.
"லூப்பு தரான். சரி தானா? 
வாங்கலேன்னா விட்றானா? 
நாளைய சமுதாயம் வீணா போகுதே"

நிரோத் விளம்பரம். வானொலியிலும். சாலை ஓரங்களில் 
விளம்பர பலகைகளாகவும் காணக்கிடைக்கும்.

நிரோத் சிம்பல் காங்கிரஸிற்கு இப்ப இருக்கிற "கை சின்னம்" தான்.

ரசமான காட்சி ஞாபகத்தில்.
வயதான முதியவர் தன் மனைவியிடம் நிரோத் விளம்பர பலகையை காட்டி,
கிண்டலாக " ஏய் கிழவி, இது என்னது?"

பாமர மனைவி  பலகை 'கை'யை உற்று பார்த்து விட்டு 
" நிறுத்து".

Precisely. 
'கை' நிறுத்த சொல்லுது. அதான் நிரோத்.
'வத வத'ன்னு நெறய்ய பிள்ளக வேணாம். நிறுத்து.

நீலமணி ரொம்ப ஃபேமஸான   கவிதை 
" நிரோத் உபயோகியுங்கள் 
நிரோத் உபயோகியுங்கள் 
விளம்பரங்கள் வற்புறுத்துகின்றன.
வாயேன்"

Sep 18, 2026

கலைவாணர் அசிஸ்டெண்ட் பீம்சிங்


'மணமகள்' என்.எஸ் கிருஷ்ணன் இயக்குநர்.
கலைஞர் மு.கருணாநிதி வசனம். 
உதவி இயக்குநராக ஏ.பீம்சிங். 
1951ல் வெளிவந்த இந்த படத்தில் ஏ.பீம்சிங் மனைவியின் சகோதரர்கள் கிருஷ்ணன், திருமலை, பட்டு ஆகியோருடன் பஞ்சுவும் பணி புரிந்தார்கள்.
அடுத்த வருடம் 'பராசக்தி' கிருஷ்ணன்- பஞ்சு இயக்கத்தில் வெளி வந்து சரித்திரம் படைத்தது.

ஏ. பீம்சிங் பிரபலம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. 

திருமலை தான் மதறாஸ் டூ பாண்டிச்சேரி இயக்குநர்.
பட்டு கண்மலர் துவங்கி காயத்ரி இயக்குநர் பட்டாபிராமன்.

மணமகளில் என்.எஸ். கிருஷ்ணன் டெக்னிஷியன்ஸ் அனைவரையும் காட்டினார். 
பின்னாளில் 'அந்த நாள்' எஸ்.பாலச்சந்தர் படத்தில் பணிபுரிந்தவர்களை காட்டியிருக்கிறார்.

படம் 
 மணமகள் அசிஸ்டெண்ட் டைரக்டர் பீம்சிங்.

தி.ஜா. அன்னவிசாரம்


ரயில் பிரயாணம் வருகிற 
தி. ஜானகிராமன் கதைகள் என்றால் 
'சிலிர்ப்பு',
 'மனதிற்கு... '
' அக்பர் சாஸ்திரி' எல்லாம் 
கண் முன் வந்து நிற்கிறது. 

ரயில் பிரயாணத்தில் நடக்கிற மற்றொரு 
தி. ஜா. கதை 
'அன்ன விசாரம்' அட்டகாசம். 

'கச்சேரி'தொகுப்பில் உள்ள கதை. 

அறுபத்தொன்பது வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்கிறார். 

எழுபத்து நான்கு வயது கிழவர் சரியான glutton. 

மனிதன் தூங்குகிறதும், சாப்பிடுகிறதும் கோரமான காட்சிகள். சாப்பிடுகிற போது மன்மதனை, ரதியை கூட பார்க்க விரும்ப முடியாது. 

ஆனால் கிழவரின் தோரணை, அடுக்கடுக்காக பிரமிக்க அடித்த சம்பிரமம். 

' கறந்த படிக்கே காய்ச்சின பாலு. தண்ணி உடாம காச்சினா, மாட்டுக் காம்பு வெடிச்சிப் பூடும்னு பால்ல ஒரு பொட்டு தண்ணீரைத் தெளிச்சு இருப்பாங்க. '

' தயிருன்னா கத்தி போட்டு அறுக்கணும், தெரிஞ்சதுங்களா?'

'உப்புமா, தோசை, பொங்கல், வடை 
எண்ணெய் வாடையே வீசப்படாது. எல்லாம் நெய். 
கத்திரிக்காயும், வாழைக்காயும் சேர்த்து கொத்ஸு பண்ணுவாங்களே, அதுக்கு ஈடாச் சாப்பிட்டதே கிடையாது 
ராத்திரி சாப்பாடு ஒரு சாம்பார், கறி, கூட்டு, ரசம், பப்படம், வறுவல். படுக்கறப்ப பசும்பால் சுண்டச் சுண்டக் காய்ச்சி, ஜாதிக்காயும், குங்குமப்பூவுமா மணத்துக்கிட்டு மஞ்ச மஞ்சேருன்னிட்டு, அமிர்தமாப் பொங்கும். '

' மைசூர் பாகு, ஜிலேபி, கோதுமை அல்வா, தக்காளிப் பழ பஜ்ஜி, காபி எல்லாம் முரட்டுத்தனமாத்தான் இருக்கும். 
நெய்யைக் கக்கும் '

வெங்கடபதி வீட்டில் தான் சாப்பிட்ட கதையை விலாவாரியாக பேசும் அந்த கிழப் பயணி. 

ரயில் பயணத்திலும் கிடைப்பதையெல்லாம் சாப்பிட்டு வெளுத்து விரியக்கட்டி விட்டு
 அந்தப் பெரியவர் சொல்கிறார் :
"ஒரு அஞ்சாறு மாசமா வயிறு மந்தமா இருந்து வருது. ருசிக்க எதையும் சாப்பிட முடியல. அன்னத் திரேஷம் மாதிரியா இருக்கு "

.. 

DINNER! MUSIC!

விருந்து என்றால் இதற்கு மேல் கிடையாது. Dinner. 
இதற்கு மேல் வித விதமாக பரிமாற முடியாது.                        Dinner Items. 

இதற்கு மேல் எப்படி சாப்பிட முடியும். 
அப்படி ஒரு விருந்து. 

பர் லாகர் க்விஸ்ட் எழுதிய
"THE DWARF" நாவலில். 

இந்த ஸ்வீடிஷ் நாவலை 
தி.ஜானகிராமன் ஆங்கிலம் வழி தமிழில்
' குள்ளன் ' என்ற பெயரில் மொழிபெயர்த்திருந்தார்.

.. 

Music with dinner is an insult
 both to the cook and the violinist.
- G. K. Chesterton 

Dinner. Dinner Items. 
Music. 
விருந்து, இசை இரண்டையும் 
ஜேம்ஸ் ஜாய்ஸ் 
மிக அழகாக தன்னுடைய' The Dead' கதையில் நேர்த்தியாக ஓவியம் போல வரைந்திருப்பார்.
உணவு, இசை இரண்டும் சுவையில் தோய்ந்தது. 

தி.ஜானகிராமன்
 இசைக்காக "மோகமுள்" மட்டுமல்ல 
சமையலை கௌரவித்து "நளபாகம்" நாவலும் எழுதினார். 

....................

மீள்

2021 post

Hereditary Feud

Hereditary feud

மதுர கோமஸ் பாளையத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் போது 
ஒவ்வொரு வார்த்தையாக கரும்பலகையில் 
ஓ

ணா

ன்

எழுதி நிறுத்தி

உரத்த குரலில் "கரட்டாண்டி" என்று விளக்குவார்.

கோவை மசக்காளி பாளையத்தில் நடந்து போகும் போது குழந்தைகளால் கொலை செய்யப்பட்ட கரட்டாண்டியை பார்க்க நேரிட்டது.

Garden lizard.

"தாகத்தில் இருந்த ராமருக்கு ஒண்ணுக்கு இருந்து அந்த மூத்திரத்த குடிக்க குடுத்ததுடா ஓணான். அடிச்சி கொல்லுங்கடா."

செய்யாத பாவத்துக்காக காலங்காலமாக சிறுவர்களால் கொல்லப்படும் பாவப்பட்ட ஜீவன் ஓணான்.

"We bleed the same blood, yet we spill it like water to pay for debts we didn't owe."

Sep 11, 2026

129th episode Gemini Ganesan part 2

229th Episode 

R.P.ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம் 

ஜெமினி கணேசன் பாகம் 2

13.09.2026
ஞாயிற்றுக்கிழமை 

முரசு டிவியில் 
காலை எட்டரை மணிக்கு

...

R.P. ராஜநாயஹம்
'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

R.P. Rajanayahem in Prasad Studio Shooting


R.P. Rajanayahem

Prasad Studio Shooting

Hindu S.Rangarajan movie