"வெட்டப்பட்ட மரம் கடத்தப்பட்டது
சுற்றிக்கொண்டே நிற்கிறது
அனாதையாய் மர வாசம்."
- கவிஞர் காயாதவன் .
பாண்டியன் என்ற திருப்பூர்கவிஞர் காயாதவன் தன் வேலை முடித்து வீட்டிற்கு போகும் மாலை நேரங்களில் ஒரு பெரிய மரத்தை கவனிப்பார் . ஏனென்றால் அதில் அந்தி நெருங்கும் மாலையில் அடையும் பறவைகளின் இனிய கூவல் பேச்சு சப்தங்களின் இசை . கொஞ்சநாள் வேறு பாதையில் சென்று விட்டு ஒரு தடவை மீண்டும் அந்த ராயபுரம் பாதையில் வீட்டிற்கு செல்லும்போது பார்த்தால் அந்த பெரிய மரம் காணப்படவில்லை .வெட்டப்பட்டிருக்கிறது . அடிப்பகுதி மட்டும் மீதமாய் அந்த மரத்தின் வாசனை அந்த பகுதியில்"குப்" என்று மிச்சமாய் ..ஏனோ அந்த வினாடியில் தன் தாய் இறந்த போது அவர் உடலை வீட்டிலிருந்து எடுத்து சென்று சொந்தங்கள் கூடி சுடுகாட்டில் எரித்த துயர நினைவும் ,அன்று வீட்டில் தாயின் வாசம் மிச்சமிருந்த நிதர்சனமும் அவர் மனதில் வியாபித்த சோகமும் கூட காயாதவனுக்கு உடனே நினைவில் வந்திருக்கிறது .
எத்தனை பறவைகளுக்கு அடைய இடம் கொடுத்த மரம் இல்லையென்ற உண்மை காயாதவனை காய்ச்சியதன் விளைவு கவிதையாக !நெஞ்சில் வாசமாய் தங்கி விட்ட தாயின் நினைவு படிமமாக !
"வெட்டப்பட்ட மரம் கடத்தப்பட்டது
சுற்றிக்கொண்டே நிற்கிறது
அனாதையாய் மர வாசம்."
இந்த கவிதை சில மாதங்களுக்கு முன் 'கல்கி ' இதழில் பிரசுரமாகியிருக்கிறது !


வலியின் மிச்சம்
காய்ந்த இரு
வரிகள் கன்னத்தில்
(Yepaddi thalaiva irukku... Shall I start writing???!)